சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!

சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!

சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!
சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!
சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!
சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!

ன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான நிவாரணப் பணிகளுக்கு விகடன் குழும வாசகர்கள் தொடர்ந்து நிதி அனுப்பி வருகிறார்கள். பொதுவாக நாமெல்லாம் பயப்படுவது போல் நாட்டில் மனிதாபிமானம் செத்துவிடவில்லை, கருணை உள்ளம் கொண்டோரின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது. உதவும் உள்ளம் கொண்டோர் அனைவருக்கும் சக்தி விகடன் இதழ் தனது ஆழ்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

##~##
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ஏற்கெனவே திருப்பூரில் நடந்த கூட்டத்தில்  வசூல் ஆன ரூ.67 ஆயிரத்தை விகடன் நிதிக்கு வழங்கினார். தவிர, ஈரோடு மாவட்டம் திண்டல் அருகில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் பேசச் சென்றவர், அந்த மாணவியரிடம் துண்டு ஏந்தி வசூலிக்க, ரூ.15 ஆயிரம் வசூல் ஆனது. அதையடுத்து, புதுக்கோட்டையில் கவிஞர் முகேஷ் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழருவி மணியன், அங்கும் விகடன் செய்து வரும் நிவாரணப் பணிகளை விவரிக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் நிதியை அள்ளித் தந்தார்கள். அது ரூ.15,345. இந்த இரண்டு தொகையையும் விகடனின் 'தானே துயர் துடைப்புத் திட்ட’ நிதியில் சேர்த்துவிட்டார் தமிழருவி மணியன்.

விகடனின் நிவாரணப் பணிகளை அறிந்த நடிகர் சத்யராஜ் ரூ.50,000-க்கான காசோலையை விகடன் நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சாரங்கபாணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 1200 பேர், விகடனின் இந்தத் துயர் துடைப்புப் பணியில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பி, தங்கள் 'பாக்கெட் மனி’யையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரியுடன் நேரே நம் அலுவலகத்துக்கு வந்து, கொடுத்தார்கள். 'ஏதோ எங்களால் இயன்றது’ என்று அவர்கள் கருணையோடு கொடுத்த தொகை ரூ.10,925. ஆனால், அவர்களின் அன்புக்கு விலை ஏது?!

'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டு இருக்க,  மனத் தளர்ச்சியுற்று சோர்ந்து கிடக்கும் அவர்கள் மத்தியில் 'வீழ்ந்தாலும் எழுவோம்’ என்கிற தன்னம்பிக்கையை ஊட்டுவதும் முக்கியமானது என்கிற நோக்கத்தில், உலக சமுதாய சேவா சங்கத்தாருடன் இணைந்து கடலூர், மஞ்சகுப்பம் பகுதியில் 29.1.2012 அன்று ஒரு தன்னம்பிக்கை முகாம் நடத்தியது சக்தி விகடன் இதழ். குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த முகாமை நடத்தினால், அந்தத் தன்னம்பிக்கைச் சுடர் அப்படியே அவர்களின் குடும்பத்தாருக்கும் அலையெனப் பரவும் என்கிற எண்ணத்தில், பத்தாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த முகாம் நடத்தப்பட்டது.

இப்படி ஒரு முகாம் நடத்தப் போகிறோம் என்று சொன்னதுமே, தனது மகாலக்ஷ்மி ஐ.டி.ஐ வளாகத்தை இலவசமாக ஒதுக்கித் தந்தார் அதன் சேர்மன் திரு.ரவி. அதே போல், முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் அருமையான மதிய உணவை இலவசமாக வழங்கினார் சென்னை, காளிகாம்பாள் கோயிலின் அர்ச்சகர் சண்முக சிவாச்சார்யர். அத்துடன், காளிகாம்பாள் திருவடியில் வைத்து பூஜிக்கப்பட்ட குங்குமப் பிரசாதங்களையும் வழங்கினார்.

முகாமின் முக்கிய நோக்கம் வந்திருந்தோர் மனங்களில் தன்னம்பிக்கையை விதைப்பது. அதைத் தனது அற்புதமான சொற்பொழிவால் செவ்வனே நிறைவேற்றினார் கல்வியாளரும் எழுத்தாளருமான ஆயிஷா நடராஜன். உலகின் எங்கெல்லாம் இயற்கைப் பேரழிவுகள் நடந்துள்ளன, அவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு மீண்டு வந்தார்கள் என உதாரணங்கள் கொடுத்து மிகவும் விரிவாக அவர் பேசப் பேச, கூட்டத்தில் உற்சாகக் கைத்தட்டல்கள் எழுந்தன. மகாத்மா காந்தி, ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என அவரது அன்றைய பேச்சில் இடம்பெறாத பிரமுகர்களே இல்லை எனலாம். 'நடமாடும் என்சைக்ளோபீடியா’ என வர்ணிக்கத்தக்க அளவுக்கு மழையெனப் பொழிந்து பரவசப்படுத்தினார் அவர்.

மக்கள் சேவை என்றாலே 'இதோ இருக்கிறோம்’ என்று ஓடி வந்து முன்னால் நிற்பவர்கள் உலக சமுதாய சேவா சங்கத்தார். அவர்கள் இந்தத் தன்னம்பிக்கை முகாமைச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததோடு, மாணவர்களுக்கு மனவளக்கலைப் பயிற்சிகளையும் அளித்தார்கள்.

'வீழ்வது எழுவதற்காகவே’ என்னும் தன்னம்பிக்கை அங்கே சுடர்விட்டது!

- ஆசிரியர்

(தன்னம்பிக்கை முகாமில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் அற்புதச் சொற்பொழிவை www.vikatan.com/thane வலைதளத்தில் கண்டு பயன்பெறுங்கள்!)

'தானே' புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு நீங்களும் உதவலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.

சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!

வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918-க்கு (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB 000சி032, எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.

நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து  பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். www.vikatan.com/thane என்ற இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை நீங்கள் காணலாம்.

சக்திவிகடன் நடத்திய தன்னம்பிக்கை முகாம்!