சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'என் கணவர் குணமாயிட்டார்!'

'என் கணவர் குணமாயிட்டார்!'

'என் கணவர் குணமாயிட்டார்!'
##~##
செ
ன்னை தேனாம்பேட்டை ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி  கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை, கடந்த 31.1.12 அன்று நடந்தது. சக்தி விகடன் நடத்தும் 79-வது திருவிளக்கு பூஜை இது!

''கணவரோட உடல்நலம் சரியாகணும்னு, ஏற்கெனவே விளக்கு பூஜைல கலந்துக்கிட்டேன். இப்ப அவர் நல்லாயிட்டார். ரெண்டாவது முறையா கலந்துக்கறேன்... நன்றி சொல்றதுக்காக!'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் சென்னை வாசகி ராஜேஸ்வரி.  

கணவரின் தொழில் சிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்ததாக, வாசகியர் வசந்தகுமாரியும் யோகமணியும் தெரிவித்தனர். தந்தையின் நலனுக்காக கலந்து கொள்வதாக மம்தா, அனைவரும் சிறப்புற வாழ வேண்டும் எனப் பிரார்த்திப்பதாக பத்மினி, புது வீடு கட்ட வேண்டும் எனும் வேண்டுதலுடன் பூஜையில் கலந்து கொண்டதாக புவனேஸ்வரி... எனப் பலரும் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.      

அனைவரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித் தருவார் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி!

                - பொ.ச.கீதன்
படங்கள்: பா.காயத்ரி அகல்யா