Published:Updated:

சங்கரராமன் கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு?

விகடன் விமர்சனக்குழு
சங்கரராமன் கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு?
சங்கரராமன் கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு?

புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு?

இந்த வழக்கில், ஜெயேந்திரர், விஜந்திரர் உள்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கில் எதிர்தரப்பு, சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது.

இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி அப்ரூவர் ரவி சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு நீதிபதி முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,  மனுதாரை விடுவிக்கலாமா? வேண்டாமா? என்று தீர்ப்பு வெளியாகும் அன்று தெரிவிப்பதாக நீதிபதி முருகன் கூறினார்.

சங்கரராமன் கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு?

மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள விஜேந்திரர், ரகு, குமார், ஆனந்தகுமார், அனில்குமார், சதீஷ், சேகர், தேவராஜ், சுந்தரேசன் ஆகிய  9 பேர் ஆஜரானார்கள். ஆனால், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்பட 14 பேர் ஆஜராகவில்லை.

##~~##
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வழக்கின் விசாரணை வீடியோ, ஆடியோ கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் சங்கரராமன் மகன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கில் வீடியோ, ஆடியோவை வழங்கக் கூடாது என்று கதிரவன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணை வீடியோ, ஆடியோ வழங்க உத்தரவிட முடியாது என்று கூறி சங்கரராமன் மகன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனிடையே, கதிரவன் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று வந்தபோது, வழக்கின் விசாரணை வீடியோ, ஆடியோ வேண்டாம் என்று சங்கரராமன் மகன் கூறினார்.
அப்போது, எதிர்தரப்பினர் விசாரணையின் வீடியோ, ஆடியோ வேண்டுமானால் மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் இது வழக்கின் தீர்ப்பை பாதிக்காது என்றும் நீதிபதி கூறினார்.
ந.அறவாழி

படங்கள்: எஸ்.தேவராஜன்