Published:Updated:

`சபரிமலையில் தங்கம் மாயமாகியதாகக் கூறுவது தவறான தகவல்!' - தேவசம்போர்டு விளக்கம்

`சபரிமலையில் தங்கம் மாயமாகியதாகக் கூறுவது தவறான தகவல்!' - தேவசம்போர்டு விளக்கம்
`சபரிமலையில் தங்கம் மாயமாகியதாகக் கூறுவது தவறான தகவல்!' - தேவசம்போர்டு விளக்கம்

சபரிமலை கோயிலுக்கு சொந்தமான 40 கிலோ தங்கம், நூறு கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மாயமானதாக கூறப்பட்டது. இதுகுறித்து லாக்கரை திறந்து கணக்கு குழு ஆய்வு செய்ய இருந்த நிலையில் 40 கிலோ தங்கம் கிடைத்துவிட்டதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

`சபரிமலையில் தங்கம் மாயமாகியதாகக் கூறுவது தவறான தகவல்!' - தேவசம்போர்டு விளக்கம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆறன்முள கோயிலோடு சேர்ந்த லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். அதில் 40 கிலோ தங்கம், நூறு கிலோ வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கணக்குக் குழுவினர் இன்று லாக்கரை திறந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 40 கிலோ தங்கம் ஆடிட்டிங் மூலம் கண்டுபிடித்ததாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

`சபரிமலையில் தங்கம் மாயமாகியதாகக் கூறுவது தவறான தகவல்!' - தேவசம்போர்டு விளக்கம்

இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ``சபரிமலை கோயிலுக்கு சொந்தமான 10,413 தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் ஆறன்முள லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. இதில் காணாமல் போனதாக கூறப்படும் நான்கு ஆபரணங்கள் சபரிமலை கோயிலில் பயன்படுத்தப்படுவதாக கண்டுபிடித்துள்ளோம். தங்கம் காணாமல்போனதாகத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளுக்கு முன்பு லாக்கருக்கு பொறுப்பாக இருந்த அதிகாரி, புதிய அதிகாரியிடம் சரியான கணக்கு ஒப்படைக்கவில்லை'' என்றார்.

சபரிமலை அசிஸ்டன்ட் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் மற்றும் திருவாபரண கமிஷனரும் சேர்ந்து நகைகளை சரிபார்த்திருக்க வேண்டும். அவர்கள் கடந்த ஆறு வருடங்களாக இதை செய்யவில்லை எனவும் இப்போதைய ஆடிட் விபரம் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.