Published:Updated:

கனக மாமணி பூஷித லிங்கம்!

சிவராத்திரி தரிசனம்!

கனக மாமணி பூஷித லிங்கம்!

சிவராத்திரி தரிசனம்!

Published:Updated:
கனக மாமணி பூஷித லிங்கம்!

சிந்தை மகிழும் சிவராத்திரியில் லிங்க தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். 'லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோன்று, இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன’ என்கின்றன புராணங்கள். சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன், சிவா மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன என ஆன்றோர் விளக்குவர்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருக்கோயில்களில் அருளும் சுயம்பு லிங்கங்களுக்கு அமையும் பீடம் பிரம்ம பாகமாகவும், நீர் விழும் கோமுகப் பகுதி ஸ்ரீமகாவிஷ்ணுவாகவும் போற்றப் படுகின்றன என்பர். ஆக, சிவலிங்க தரிசனத்தால் மும்மூர்த்தியரின் அருளையும் பெறலாம்.

மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந் தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.

அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீலிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும்.

இதில் 'பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர் களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை... பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை... எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப்

போற்றுகிறேன்...’ எனத் துவங்கி எட்டு ஸ்லோகங் களால் பரமனைப் போற்றும் ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று உங்களுக்காக! (முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க)

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக் கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்கு கின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

தொகுப்பு: இரா.மங்கையர்கரசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism