சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும்!

ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும்!

ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும்!
##~##
சி
வனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம். வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும்!

புலியிடம் இருந்து தப்பிக்க மரமேறிய வேடன், இரவு முழுவதும் தூங்கிவிடாமல் இருக்க, மரத்தில் இருந்த வில்வத்தைப் பறித்துப் போட... அது,  மரத்தடியில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழ, அந்த வேடனுக்கு திருக்காட்சி தந்து, அவனை ஆட்கொண்டருளினார் சிவபெருமான் என்கிறது புராணம். காரணம்... சிவராத்திரி நன்னாளில், விடிய விடிய விழித்திருந்து, சிவனாருக்கு வில்வத்தால் அர்ச்சித்த பலன் அவனுக்கு கிடைத்தது!

தஞ்சைக்கு அருகில் உள்ள திருவைகாவூரில் ஸ்ரீவில்வவனநாதர் என்ற திருப்பெயரிலேயே அருள்கிறார் ஈஸ்வரன்.

தஞ்சாவூர் பாபநாசத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருவைகாவூர். இந்தத் தலத்தில், திருக்கரத்தில் கழியேந்தி காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீமகாவிஷ்ணு ஆகியோரும் அருள்கின்றனர். இங்கே மகா சிவராத்திரி திருநாளில், கோபுரத்தின் கீழே வேடனது உருவத்தை நிறுத்தி, சிவனாருக்கும் அதை யடுத்து வேடனுக்கும் தீபாராதனையுடன் வழிபாடு நடைபெறும். தொடர்ந்து திருவீதியுலாவும் நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிக்க நம் ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும்; வாழ்க்கை வளம்பெறும்.

தொகுப்பு: அ.விஜய்பெரியசாமி, கல்பாக்கம்
  மாலதி சந்திரசேகரன்,  சென்னை