Published:Updated:

திருப்புகழ் கற்பிக்கும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!

திருப்புகழ் கற்பிக்கும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!
திருப்புகழ் கற்பிக்கும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!

குழந்தைகள், பக்தி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வடபழநி பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள், தமிழ் ஸ்லோகம் மற்றும் திருப்புகழ் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில், ஆன்மிக நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தமிழ் ஸ்லோகம் மற்றும் பக்திப் பாடல்களின் பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கின்றன. இதில், ஐந்து வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சி, முற்றிலும் இலவசமாக  அளிக்கப்படுகிறது. 

திருப்புகழ் கற்பிக்கும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!

தமிழ் ஸ்லோக வகுப்புகள்:

தமிழ் ஸ்லோக வகுப்புகள், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை  நடைபெறுகின்றன. இதில், ஐந்து வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

திருப்புகழ் கற்பிக்கும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!

திருப்புகழ் பாடல் பயிற்சி வகுப்புகள்:

திருப்புகழ் பாடல் பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.15 மணி முதல் 6.00 மணி வரை நடக்கிறது. இதில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். 

திருப்புகழ் கற்பிக்கும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்!

லலிதா சகஸ்ரநாம பாராயணம்:

லலிதசகஸ்ரநாம பாராயணமும் இலவசமாக கற்பிக்கப்படுகிறது. இந்த வகுப்பு, வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு தொடங்கும். இதில், பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். 

குழந்தைகள், பக்தி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும்விதமாக இத்தகைய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வடபழநி பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் தமிழ் ஸ்லோகம் மற்றும் திருப்புகழ் வகுப்பில் சேர்ந்துள்ளனர். வருடத்துக்கு 300 குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று, ஸ்லோகம் மற்றும் திருப்புகழை ஆர்வமுடன் கற்கும் குழந்தைகளுக்கு, ஊக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
இந்தத் தகவலை வடபழநி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு