Election bannerElection banner
Published:Updated:

40 ஆண்டுகளுக்குப் பின் குளத்தைவிட்டு வெளியே வந்த அத்திவரதர் - காஞ்சிபுரத்தில் களைகட்டும் விழா!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதரை, குளத்தை விட்டு வெளியே எடுத்து, திருமஞ்சனம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து 48 நாள்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

40 ஆண்டுகளுக்குப் பின் குளத்தைவிட்டு வெளியே வந்த அத்திவரதர் - காஞ்சிபுரத்தில் களைகட்டும் விழா!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவார். அந்த நிகழ்ச்சி, வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ளது. பக்தர்களின் தரினத்திற்காக 48 நாள்கள் அவர் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில்  வைக்கப்படுகிறார். இதில், 24 நாள்கள் சயன நிலையிலும், 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பாகவே, அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை எடுக்கும் பணி  தொடங்கியது. குளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் குளத்தில் இருந்து தண்ணீர் வேறு குளத்திற்கு மாற்றப்பட்டது. குளத்தில் உள்ள மீன்கள் பிடிக்கப்பட்டு, அருகில் உள்ள குளத்தில் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, குளத்தில் இருந்து சேற்றை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. அத்திவரதர் இருக்கும் இடத்தில் மட்டும் சேற்றை அப்புறப்படுத்தாமல், மற்ற இடத்திலும் சேற்றை அப்புறப்படுத்தி வைத்திருந்தனர்.

40 ஆண்டுகளுக்குப் பின் குளத்தைவிட்டு வெளியே வந்த அத்திவரதர் - காஞ்சிபுரத்தில் களைகட்டும் விழா!

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதரை எடுக்கும் பணி துவங்கியது. அத்திவரதர் இருக்கும் பகுதியில் சேற்றை அப்புறப்படுத்தி, அதிகாலை சுமார் 2.45-க்கு அத்திவரதர் சேற்றிலிருந்து வெளிப்பட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், அத்திவரதரை முழுவதுமாக வெளியே எடுத்து, விக்கிரகத்தின்மீது துணியைப் போர்த்தி, வசந்த மண்டபம் கொண்டுவரப்பட்டது. வசந்த மண்டபத்தில் வைத்த அத்திவரதருக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தை அலங்கரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அத்திவரதரை யாரும் பார்க்க முடியாதவாறு கோயில் நிர்வாகத்தின்மூலம் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், ஜூலை 1-ம் தேதி காஞ்சிபுரம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு! - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு