Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

வி காளமேகம் தமது யாத்திரையின்போது சோழ நாட்டின் ஒரு ஊருக்கு வந்தார். அந்த ஊரின் பெயர் ஆலங்குடி என்றும், அந்தத் திருத்தல இறைவனின் திருநாமம் ஆலங்குடியார் என்றும் கூறினர். அகிலாண்டேஸ்வரியின் திருவருள் பெற்ற ஆசுகவி அல்லவா காளமேகம்?! உடனே, அருமையான வெண்பா ஒன்றை அழகாகப் பாடினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேல் வானும் குவலயமும் எல்லாம்
மடியாவோ முற்றொருங்கு மாய்ந்து

##~##
என்பதுதான் அந்தப் பாடல். 'சிவபெருமான் ஆலம் (விஷம்) குடித்தவராயிற்றே? அவரை ஆலம் குடிக்காதவர் (குடியான்) என்று எப்படிச் சொல்ல முடியும்! அவர் ஆலம் குடித்திருக்காவிட்டால், வானுலகும் மண்ணுலகும் அழிந்திருக்கும் அல்லவா? அவ்வாறு நேர்ந்திடாமல், அனைவரையும் காக்க ஆலம் (விஷம்) குடித்து அருளிய பெருமானை, 'ஆலங்குடியான்’ எனச் சொல்வது எவ்வாறு பொருந்தும்’ எனும் சுவையான கருத்தமைந்த, சொல்நயம் மிகுந்த இந்தப் பாடலைப் பாடினாராம்!

ஆலங்குடி என்று தற்போதும் வழங்கப்படும் இந்த ஆலயம், 'திரு இரும்பூளை’ என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். ஸ்தல விருட்சம் பூளைச் செடி. பூண்டு இனத்தைச் சேர்ந்த இந்த தாவரத்தின் வெண்ணிறப் பூ சிவனாருக்கு உகந்தது. இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் உற்ஸவ மூர்த்தி அற்புதமான திருமேனியாகும். அருள்மிகு ஏலவார் குழலியுடன் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில் அருளும் பிள்ளையார்- ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்!

கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் பாதையில் சுமார் 17 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலங்குடி.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

மாகத முனிவருக்கும் விபூதி எனும் அசுரப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் கஜாசுரன். அசுரகுரு சுக்கிராச்சார்யரின் உபதேசத்தின்படி, தவம் செய்து சிவபெருமானின் பேரருளையும், எவராலும் எந்த ஆயுதத்தாலும் அழியாத வரமும் பெற்றவன்.

பிறகென்ன... தேவர்களையும் மக்களையும் வதைத்தான். தேவலோக ஐஸ்வரியங்களைக் கொள்ளையடித்தான். அனைவரையும் அடக்கி தனக்கு அடிமைகளாக்கினான். அவன் பெயரைச் சொன்னாலே, கதிகலங்கினார்கள் அனைவரும். அவனைக் பார்த்த மாத்திரத்தில் தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டிக் கொண்டும், தேங்காய் உடைத்தும் மிகுந்த வணக்கத்துடன் நடந்து கொண்டனர். அப்போதுதான் அவனது கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்!

ஒருமுறை விளையாட்டுப் போக்கில் விண்ணில் சென்றவன்,  அங்குள்ள அண்டச் சுவர் ஒன்றை இடித்துவிட்டான். அதனால் ஆகாய கங்கை உடைப்பெடுத்தது. பூலோகம் முழுவதும் நீரில் மூழ்கியது. ஆனால், இரும்பூளை தலம் மட்டும் மூழ்கியும் மூழ்காமலும் இருந்தது. மகாபிரளயம் போன்றும் எங்கெங்கிலும் நீரினால் ஏற்பட்ட நாசத்தால், தாவரம் முதலான அனைத்தும் அழியும் நிலை கண்டு வருந்திய தேவர்கள், இந்தத் தலத்தில் அருளும் விநாயகரை வேண்டி அவரது பொற்பாதங்களைப் பணிந்து நின்றனர். அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்ய திருவுளம் கொண்டார் கணபதி. தனது தும்பிக்கையால் நீர் மொத்தத்தையும் உறிஞ்சினார். அண்டச் சுவரின் உடைப்பை தனது கால் பெரு விரலால் அடைத்தார்; ஆகாய கங்கையின் நீர் பெருகாமல் தடுத்தார். அத்துடன் விட்டாரா? இப்படி யரு மாபாதகம் விளைய வித்தானவன் கஜாசுரன் என்பதை அறிந்து, அவனை அழிக்கப் புறப்பட்டுவிட்டார்!

பூதப்படை சூழ, கஜாசுரனின் ராஜதானியாகிய மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அசுரன் விட்ட பாணங்களை எல்லாம், தன் கரத்திலிருந்த உலக்கையால் விலக்கி, அதனைக் கொண்டே அசுரனின் மார்பில் அடித்தார். அவன் மயங்கி வீழ்ந்தானேயன்றி, இறக்கவில்லை. அவன் இறவாத வரம் பெற்றவன் என்பதை அறிந்த விநாயகர், தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் தன் உடலை விட்டு, பெருச்சாளியாக ஓடிவந்தான். அதை, தமது வாகனமாகக் கொண்டு அடக்கியாண்டார் ஆனைமுகன். இவ்வாறு கஜமுகனை அடக்கி, அனைவரையும் காத்து சுகம் பெற வைத்ததால், இந்தத் தலத்தின் பிள்ளையாருக்கு கலங்காமல் காத்த விநாயகர் என்று நாமகரணம்! அசுரன் அடங்கியபிறகு, அதுவரை அவனுக்கு செய்து வந்த... தோப்புகரணம், தலையில் குட்டிக் கொள்ளுதல், தேங்காய் உடைத்தல் ஆகியவற்றை பிள்ளையாருக்கே செய்து, வழிபட ஆரம்பித்தனர்.

திருஇரும்பூளை விநாயகரைத் தொடர்ந்து பல வாரங்கள் தொழுது வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். வம்பு, வழக்குகள் அகன்று மனநிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். நாமும் ஆலங்குடி சென்று ஆபத்சகாயரின் மைந்தனைத் தரிசித்து, கலக்கங்கள் யாவும் நீங்கி வாழ்வில் இன்புறுவோம்.

- பிள்ளையார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism