ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பூரம் நட்சத்திரத்தை 'பூர்வ பல்குனி’ என்கிறது வேதம். சிம்ம ராசியில் நடுநாயகமாக விளங்கும் நட்சத்திரம் இது! ராசிக்கு அதிபதி சூரியன். நட்சத்திரத்தின் தேவதையும் 'அர்யமா’ என்ற புனைபெயரில் சூரியனாக அமைந்திருப்பது, அதன் தனிச்சிறப்பு. (பல்குனி நக்ஷத்திரம் அர்யமாதேவதா). சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய்- இந்த நால்வர் அம்சகத்தில் நான்கு பாதங்களில் இணைந்து பூரத்துக்குப் பெருமை சேர்க்கிறார்கள். பகுத்தறிவு, பொருளாதாரம், உற்சாகம், செல்வாக்கு ஆகிய நான்கும் நால்வரின் தொடர்பில் இருப்பதால், ஆணுடன் பூரம் இணையும்போது, தனிச் சிறப்பைப் பெற்றுவிடுகிறது. ஆண்மைக்கு உரிய ஆளுமை யைப் பெற்றிருப்பதால், 'பூரம் பிறந்த புருஷன்’ என்கிற சொல்வழக்கு உதயமானது.

முதல் பாதம் 4-ஆம் பாதத் தில் இணைந்த சூரியனும் செவ்வாயும் ஆண்மையின் தரத்தை உயர்த்தி, பூரத்தின் பெருமையைப் பறைசாற்றுகின் றன. சூரியனும் செவ்வாயும் புருஷ கிரகம் என்கிறது ஜோதிடம். பிறந்தவனின் மனதில் கணக்கில் அடங்கா எண்ணக் குவியலின் வெளிப்பாட்டை வரையறுக்க, இருக்கும் ஒன்பது கிரகங்களில் உள்ளடக்கிய ரிஷிகளின் சிந்தனை, ஜோதிடத் தைப் பயனுள்ளதாக மாற்றியது.

பூரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண், முதலில் சுக்கிர தசையைச் சந்திப்பார்கள். எண்ணிக்கையில் சுமார் 20 வருடங்கள் நீண்டிருக்கும் தசை இதுதான்! புக்தி- அந்தரம் ஆகியவற்றில் வளைய வரும் 9 கிரகங்களும் விகிதாசாரப்படி, அதிக கால அளவைப் பெற்றிருக்கும் என்பது அதன் சிறப்பு. பரணிக்கும் பூராடத்துக்கும் இது பொருந்தும். தேவதை மாறுபட்டிருப்பதால் பூரத்தின் தனித்தன்மை காப்பாற்றப் படுகிறது. இனத்தில் ஒன்றானாலும் இயல்பில் மாறுபாடு உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்கிறது ஜோதிடம்.

##~##
தசாநாதன் சுக்கிரனும் அம்சகத்தில் இணைந்த நால்வரும் பலம் பொருந்தியிருந்தால் அரசன் அல்லது தலைவனாகத் திகழ்வான் என்கிறது ஜோதிடம். கேரள அரச பரம்பரையில் 'பூரம் திருநாளும்’ வீற்றிருந்தார். கறவை மாடுகள் வேள்விக்கும், காளை மாடுகள் உழவுக்கும் பயன்பட்டன. நாம் உண்டு மகிழவும், தேவர்களுக்கு உணவளித்து மகிழவும் பசுமாடுகள் பயன்பட்டன. அவற்றின் செழிப்பை நிலைநிறுத்த, அர்யமா என்கிற பூர நட்சத்திர தேவதை உதவுவதாகச் சொல்கிறது வேதம் (அர்யம்ணே ஸ்வாஹா பல்குனீப்யாம் ஸ்வாஹா. பசுப்ய: ஸ்வாஹா). 'உழவுத் தொழிலை பூரம் நட்சத்திரத்தில் துவங்கு. விருப்பம் நிறைவேறும்’ என்கிறது சாஸ்திரம் (பல்குனீப் யாம் வ்யூஹதெ). உழவுத் தொழிலில் புது உத்திகளைப் புகுத்தினா லும், அன்று காளை மாடு செய்த வேலையைத்தான் செய்ய வேண்டும். இடையூறுகளை விலக்குபவன், உயிரினங்களுக்கு நன்மை செய்பவன், அழகு உடையவன், 'அர்யமா’ என்ற பெயருடன் பூரம் நட்சத்திரத்துடன் இணைந்தவன். நீ கொடை வள்ளல், நாங்கள் அளிக்கும் உணவை ஏற்று, கறவை மற்றும் காளை மாடுகளையும் உயிர்வாழ உதவும் செல்வங்களையும் அள்ளித் தந்து அருள வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (கவாம்பதி...).

சம பங்கில், ஆணும் பெண்ணும் இணைந்த நட்சத்திரம். சுக்கிரனும் புதனும் பெண்ணினம்; செவ்வாயும் சூரியனும் ஆணினம். இருவரின் இணைப்பு பூரம் நட்சத்திரத்தில் உண்டு. அதன் தேவதை 'அர்யமா’, இணைப்பைத் துண்டிக்காமல் பார்த்துக் கொள்வார். வேள்வியும் உழவும் இணைந்து செயல்பட்டால், யோக க்ஷேமம் நிலைத்திருக்கும். வேள்வி, மழை பொழிய வைக்கும். உழவு, உணவைத் தயார் செய்யும். திருமணத்தில் இணைந்த தம்பதி,  இறுக்கத்துடன் இருக்க 'அர்யமா’ எனும் தேவதைக்குப் பொரியை அள்ளிக் கொடுத்துப் பணிவிடை செய்வார்கள். வெப்பத்தில் மலர்ந்த பொரி, வாழ்க்கையை மலரச் செய்யும் என் கிறது சாஸ்திரம் (லாஜைர் ஜுஹோதி...).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கால புருஷனின் இதயம் சிம்ம ராசி. 'உன்னை இயக்குபவன் இதயத்தில் குடிகொண்டிருக்கி றான்’ என்கிறான் ஸ்ரீகண்ணபிரான் (ஹிருத் தேசே அர்ஜுனதிஷ்டதி). காலாத்மா சூரியன் குடி புகுந்த இடம் அது. அவனுக்குப் பின் ராசிகளில் வரிசைக்கிரமமாக வீற்றிருக்கும் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஐவரும் இவன் இணைப்பில் இயங்குபவர்கள். இவரிடம் இருந்து சைதன்யம் பெற்றவர்கள் (பலம் பெற்றவர்கள்). கடகத்தில் இருக்கும் சந்திரனின் (அதற்கு அதிபதி) பின் ராசிகளில் இந்த ஐவரும் அமர்ந்திருப்பார்கள். அவர்களும் சந்திரனின் தொடர்பில் பலம் பெற்றுச் செயல்படுவார்கள்.

ஐம்புலன்களும் ஆன்மாவுடனும் மனதுடனும் இணைந்தால் மட்டுமே செயல்பட இயலும். ராசிச் சக்கரத் தின் அமைப்பு ஆன்மாவுடனும் மனதுடனும் வலமாகவும் இடமாக வும் ஐந்து கிரகங்களை இணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்மா மனதோடும் புலனோடும் பொரு ளோடும் இணைந்து செயல்படும் என்பார் வராஹமிஹிரர் (அன்மா மனஸாஸ்மயுஜ்யதே மன இந்திரியேண இந்திரியமர்த்தேன).

ஆன்மா ஒன்று. மனமும் ஒன்று. ராசிச் சக்கரத்தில் நிறைய வீடுகள் இருந்தும், அவர்களுக்கு ஒரு வீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பக்கத்துப் பக்கத்து வீடு (சிம்மம், கடகம்) ஆன்மா மனதோடுதான் முதலில் நெருங்கும். புலன்களின் நெருக்கம் மனம் வழியே நிகழும். புலன்கள் எண்ணிக்கையில் அதிகம். வீடுகளும் இரண்டு இரண்டாக அளிக்கப்பட்டிருக்கும். புலன்களும் இரட்டையர்களாகவே தென்படும். ஆனால், பார்வை ஒன்றெனினும் கண்கள் இரண்டு அல்லவா! கண்களுக்குப் பார்க்கும் திறன்... ஆன்மாவுடன் இணைந்த மனதின் தொடர்பால் வெளிப்படும். உடல் அமைப்புக்கு உகந்தபடி, சக்கிர அமைப்பும் இருப்பது, சிருஷ்டி தத்துவத் தின் இணைப்பையும் உள்ளடக்கியது ஜோதிடம் என்று அறிவுறுத்துகிறது.  

கண்ணுக்குப் புலப்படும் உடல் அமைப்பு, 'ஸ்தூல’ உடல். புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் தொகுப்பு 'சூட்சும’ உடல். சூட்சுமத்தைக் காப்பாற்ற, ஸ்தூல வடிவம் பயன்படுகிறது. இயங்குவது சூட்சும உடல். நம் கண்களுக்கு இலக்காகாத ஒன்று அது. செயல் பாட்டில் அதை உணரலாம். ஸ்தூலம், சூட்சுமம் ஆகிய இரு வடிவங்களைத் தாங்கி நிற்கிறது ராசிச் சக்கரம். சக்கரம்- ஜடம்; அதாவது ஸ்தூலம். இயங்க வைப்பது சூட்சும உடல். அதாவது சூரியன், சந்திரன், மற்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இணைப்பு.

இதயமாகச் செயல்படும் சிம்ம ராசி காலபுருஷனின் பூர்வ புண்ய ஸ்தானமாகவும் செயல்படுகிறது. அதன் இணைப் பில் பூரத்துக்குப் பெருமை உண்டு.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்! எல்லோரையும் ஈர்க்கும் சொல்வளம், கொடை அளிப்பதில் ஆர்வம், அழகு வடிவம், ஓரிடத்தில் ஒதுங்காமல் நடந்து கொண்டிருக்கும் இயல்பு, அரச சேவகனாகச் செயல்படுவதில் மகிழ்ச்சி ஆகியவை  பூரம் நட்சத்திரத் தில் பிறந்தவரிடம் தென்படும் என்கிறார் வராஹமிஹிரர்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பூரம் என்ற சொல்லுக்கு 'பெருக்கு’ எனும் பொருள் உண்டு. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல், நல்ல காரியங்களில் செழிப்பை அடையச் செய்யும் தகுதி பூரத்துக்கு உண்டு என்கிறது ஜோதிடம். பெருமையும் புகழும் அவரைத் தேடி வரும். குழந்தைச் செல்வங்கள் அளவோடு இருக்கும். அவர்கள், பணக்காரனாக இல்லாமல், அதே நேரம் அறிவாளியாகத் திகழ்வர்; எந்தவொரு செயலிலும் ஆராய்ந்து அலசிப்பார்த்தே இறங்குவர்; செல்வாக்குடன் திகழ்வர் என்று பூர நட்சத்திரம் குறித்து விளக்குகிறார் பராசரர்.

இரண்டு தாரைகளை உள்ளடக்கியது அது. உக்கிரமான நட்சத்திரம். சண்டை, சச்சரவு, உள்நோக்கத்துடன் செயல்படுதல், ஆசையில் கட்டுண்டு துயரத்தை ஏற்றல், கொடையில் விருப்பம், எடுத்த முடிவில் மாறாமல் செயல் படுதல் ஆகிய அனைத்தும் பூர நட்சத்திரக்காரர் களுக்கு உண்டு என்கிறது ஜாதக பாரிஜாதம். போரில் வெற்றி, எதிரிகளை முறியடித்தல், தளவாடங்களைக் கையாளுதல், பிறரை வசீகரித்தல், எதிரிகளுக்கு உதவுபவரை அழித்தல் ஆகியவற்றில் இந்த நட்சத்திரம் பேருதவி செய்யும் என்கிறார் பராசரர்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

முதல் பாதத்தில் பிறந்தவர், கெட்டிக்காரராகத் திகழ்வர். 2-ல், அறத்தை நடைமுறைப் படுத்துவர். 3-ல், அரசனாகவோ தலைவனாகவோ திகழ்வர். 4-ல் அல்பாயுஸ்ஸாக இருப்பர் என பாதங்களுக்குப் பலன் சொல்கிறது பிரஹத்ஸம்ஹிதை. இவர்கள், இதமாகப்பேசி அன்புடன் பழகுவர். திறமையாகச் செயல்பட்டு, வெற்றி பெறுவர். அரசு உத்தியோகம் கிடைக்கும். சேவை செய்வதை வாழ்க்கையாகக் கொண்டிருப்பர். வெளியே தைரியசாலிபோல் காட்டிக் கொள்வர்; உள்ளுக்குள் பய உணர்வுடன் இருப்பார்கள் என்கிறது ஜோதிடம்.

'அம் அர்யம்ணேநம:’ என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்து வழிபடுங்கள். 'கவாம்பதி:’ எனும் மந்திரம் சொல்லி வழிபடலாம். மந்திரம் தெரியாதவர்கள், 'தான்யம் தனம், பசும் மித்ரபந்துபோகான் ப்ரயச்சமெ. நிவாரயச விக்நௌகான் அர்யம்ணே தேநமோ நம:’ எனும் செய்யுளை 16 முறை சொல்லி, உபசாரம் செய்ய லாம். தினமும் செய்ய நேரமில்லாதவர்கள், ஞாயிறன்று 108 முறை சொல்லி வணங்கலாம்.  மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றால் அவனை வழிபடுவது சிறப்பு. இந்த மூன்றால், அறிந்தும் அறியாமலும் தவறு செய்வது உண்டு.

தவறு இழைத்தவர்களை அடிபணிய வைப்பதும் வழிபாட்டில் அடங்கும். 'ஆசைதான் செயல்பட வைத்தது; நான் செய்யலை. ஆசைதான் கர்த்தா; நான் அல்ல’ என்போம். அதே போல் கோபதாபங்களும் தவறு செய்ய வைக்கும். 'நான் தவறு செய்யவில்லை; கோபம் தவறாற்றியது, அதுவே அப்படிச் செயல்பட வைத்தது’ என்று தவற்றை ஆசையிலும் கோபத்திலும் சொல்லி வழிபடும் முறை சாஸ்திரத்தில் உண்டு (காமோ கார்ஷீத் நமோ நமக:). அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம. தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ தயாநிதே எனச் சொல்லி பிரார்த்தியுங்கள்.

தெய்வவழிபாடு என்பது தினசரி கடமைகளில் ஒன்று.  லீவு நாளில் சாவகாசமாகச் செயல்படலாம் எனும் எண்ணம் வரக்கூடாது. விஸ்தாரமான பூஜையைவிட அலைபாயும் மனதை அவனில் இருத்தி தினமும் ஒரு ஐந்து நிமிடம் அவன் நினைவில் லயித்தால் போதும்; அது மிகப் பெரிய நன்மையைத் தரும்! சிறுகச் சிறுகச் செயல்பட் டால், பிறகு விஸ்தாரமான பூஜைக்கும் கால அவகாசம் கிடைத்துவிடும். வாழ்க்கையின் ஒரு பகுதியாக வழிபாடு என்கிற வழக்கத்துக்கு வாருங்கள்!

- வழிபடுவோம்