Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ற்புதமானதொரு க்ஷேத்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ளப் பல வழிகள் உண்டு. தெரிந்தவர் அறிந்தவர் எவரேனும் அந்தத் தலத்துக்குச் சென்று வந்து, அதன் அருமைபெருமைகளை நம்மிடம் எடுத்துரைக்கலாம். 'அந்தக் கோயிலுக்குப் போயிருந்தேன்ப்பா! அந்தத் தலத்துல கால் வெச்சதுமே, மனசுல இனம் புரியாத ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தேன். கண்டிப்பா, நீயும் ஒருமுறை குடும்பத்தோடு அங்கே போயிட்டு வா!’ என்று உறவுக்காரர்களோ, நண்பர்களோ தெரிவிக்கலாம். பரவசத்தோடு அவர்கள் சொல்லும் விதமே நம் மனத்தை ஈர்க்க, 'போய்த்தான் பார்ப்போமே!’ என்று நாமும் அந்தக் கோயிலுக்குச் சென்று வந்து, மன நிறைவைப் பெறலாம்.

'இந்த ஊர்ல, இப்படியரு கோயில் இருக்குன்னு புஸ்தகத்துல போட்டிருந்துது. அதான், இங்கே வந்து தரிசனம் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தோம்’ என்று சொல்பவர்களும் உள்ளனர். ஆனால், மகான்களும் ரிஷிகளும் வணங்கித் தொழுத திருப்பட்டூர் திருத்தலம் பற்றி, சென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்கு எடுத்துச் சொன்னது யார் தெரியுமா? ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்.

''ஸ்ரீராகவேந்திரர் மிகப் பெரிய மகா புருஷர். அற்புதமான மகான். கருணையே உருவான தெய்வம். வியாழக்கிழமை தவறாம விரதமிருந்து, அந்த மகானுக்கு பூஜைகள் செய்யத் துவங்கினேன். ஆனா அடுத்தடுத்த கட்டத்துல, அந்த மகான் எனக்கு என் சொந்தத் தாத்தாவாகத்தான் தெரிஞ்சார்'' என்று வார்த்தைக்கு வார்த்தை தாத்தா, தாத்தா என்று ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை அன்போடு குறிப்பிட்டுச் சொல்லிச் சிலாகிக்கிறார் பத்மினி.

திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
''என் மகன் சத்யநாராயணன், டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளவன். எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தாச்சு; ஏகப்பட்ட வைத்தியம் பண்ணியாச்சு. எதுவும் பலன் இல்லை. ஆனா, தாத்தாவைக் கெட்டியா பிடிச்சுக்கிட்ட பிறகு, அவனுடைய செயல்பாடுகள்ல கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றம் தெரிஞ்சுது. வியந்து போனோம் மொத்தக் குடும்பத்தாரும்!

யாரைக் கும்பிடறோம்கிறது முக்கியம் இல்லை. எந்தத் தெய்வத்தை யும் வணங்கலாம்; தெய்வத்துக்கு நிகரான மகான்களையும் வழிபட லாம். ஆனா, யாரை வணங்கினாலும், சரணடைதல்ங்கறது ரொம்ப முக்கியம். நமது ஒட்டுமொத்த ஈகோவையும் தூக்கிப் போட்டுட்டு, 'நீயே கதி’ன்னு பரிபூரணமா சரணடைகிற புத்தி வந்துட்டாலே, அப்புறம் அந்தச் சக்தியே நம்மை வழிநடத்திக் கூட்டிக்கிட்டுப் போயிடும். எந்தவொரு சின்ன பிரச்னை வந்தாலும், ஏதோ ஒரு விதத்துல நமக்கு அறிவுறுத்தி, நம்மைச் சரியானபடி வழிநடத்தும். அப்படித்தான்... மகான் ஸ்ரீராகவேந்திரர் என்னை வழிநடத்திக்கிட்டிருக்கார்'' என்று சிலிர்த்தபடி சொல்கிறார் பத்மினி.

திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

''ஒருமுறை, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் உச்சியில நின்னுண்டு, எங்கேயோ கைகாட்டறார் தாத்தா. 'அதோ... அங்கே பையனை அழைச்சுண்டு போ’னு சொல்றார். அது கனவாட்டமும் இருந்தது; நிஜத்துல கண் முன்னாடி நடக்கற மாதிரியும் இருந்தது. 'அங்கே போ, அங்கே போ’னு சொன்னா எனக்கென்ன தெரியும், தாத்தா?’னு அழறேன். 'அங்கே போ..! உன் தலையெழுத்து மாறும்!’னு சொல்லி, கை தூக்கி ஆசீர்வாதம் பண்றார். 'அங்கே ஸ்படிக லிங்கம் ஒண்ணு இருக்கு’ங்கறார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அவர் காட்டுற திசையில தெரிஞ்சது ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் மட்டும்தான்! ஆனா, தாத்தா அதைக் காட்டலே; அந்தத் திசையைத்தான் காட்டறார்னு புரிஞ்சுண்டு, கோயில் கோயிலா தேடிட்டுப் போக ஆரம்பிச்சோம். ஆனா, அவர் சொன்னது மாதிரியான கோயிலைக் கண்டுபிடிக்க முடியலை. அப்பத்தான் உறவுக்காரங்க சில பேர், 'அட... தலை எழுத்தையே மாற்றும் தலம்னா அது திருப்பட்டூர் கோயில்தான்’னு சொன்னாங்க. திரும்பவும் திருச்சி வந்து, ஸ்ரீரங்கம் கடந்து, சமயபுரமும் தாண்டி, சிறுகனூர்லேருந்து பிரிஞ்சு, திருப்பட்டூருக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலைத் தரிசிச்சோம். ஆனா, அங்கே ஸ்படிக லிங்கம் இல்லை.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அப்புறம்... பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக் குப் பின்னால இருக்கிற ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலுக்குப் போனோம். அங்கேயும் ஸ்படிக லிங்கம் இல்லைன்னுட்டாங்க. ரொம்ப வற்புறுத்தி, விஷயமெல்லாம் விளக்கிச் சொல்லிக் கேட்டதும்தான், மூலவருக்குப் பின்னாலே இத்துனூண்டு இருக்கிற ஸ்படிக லிங்கத்தைக் கொண்டு வந்து காட்டினாங்க. அழுகையும் ஆனந்தமுமா பூரிச்சுப் போன அந்த நாளை மறக்கவே முடியாது!'' என நெக்குருகிப் பேசுகிறார் பத்மினி.

''அப்புறம், வியாக்ரபாதர் தீர்த்தக் குளத் துலேருந்து தண்ணியை எடுத்துத் தலையில தெளிச்சுண்டு, காசிவிஸ்வநாதரையும் அங்கே இருந்த வியாக்ரபாதர் திருச் சமாதியையும் தரிசனம் பண்ணிட்டு, அப்படியே ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் ஸ்ரீபிரம்மாவையும் தரிசனம் பண்ணிட்டுத் திரும்பினோம். என்ன ஆச்சரியம்... எங்க பையனோட முகமும் செயலும் தெளிவடைய

திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஆரம்பிச்சுது. சொல்ற விஷயத்தை நல்லாவே கிரகிச்சு, ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சான். டென்த்ல 74 சதவிகிதத்துக்கும் மேல மார்க்! இப்பவும் நல்லாப் படிக்கிறான். இது எங்க தாத்தா காட்டின வாழ்க்கை; திருப்பட்டூர் தந்த பேரருள்!'' என்று மகனின் தலைகோதியபடி உணர்ச்சி பொங்கச் சொல்கிறார் பத்மினி. சென்னையில் உள்ள இந்த வாசகிக்கும் திருச்சி திருப்பட்டூருக்குமான அந்தத் தரிசனத் தொடர்பு அத்துடன் நின்றுவிடவில்லை.

''திரும்பவும் ஒருமுறை தாத்தா வந்து, 'அந்த ஊருக்குப் போ! பிரதோஷ பூஜை செய். தொடர்ந்து செய். எல்லாரையும் செய்யச் சொல்லு’ன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். இதோ... இன்னிவரைக்கும் திருப்பட்டூர் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில்ல பிரதோஷ பூஜையைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வரேன். அதுமட்டும் இல்லாம என் உறவினர்கள், நண்பர்கள்னு பலபேரும் திருப்பட்டூரின் மகிமையை அறிந்து, அங்கே தரிசனம் பண்ணிட்டு வர்றாங்க. அப்படித் தரிசனம் பண்ணின எல்லாருக்குமே, வாழ்க்கைல சத்காரியங்கள் நடந்துக் கிட்டிருக்கு. வாழ்க்கையில ஒரு முறை, ஒரேயரு முறையாவது அந்தத் தலத்துக்குப் போகணும்; அங்கே நம்மோட காலடி படணும். அப்படியரு விதி இருந்தா, நம் தலையெழுத்து மாறுவது நிச்சயம்!'' என்று உறுதிபடச் சொன்னபோது, பத்மினியின் முகத்தில் அப்படியரு பிரகாசம்!

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் திருவடி யில் இருந்தும், திருவாக்கில் இருந்தும் உணர்த்தப்பட்ட திருப்பட்டூர் தலத்தின் பெருமைகளையும், அந்த மகானின் அருளையும் சதாசர்வ காலமும் யாரிட மேனும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் பத்மினி. அது அவரின் இந்த ஜென்மத்துக்கான இறைப்பணி!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism