Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'நடைப்பயிற்சிக்குப் போவோமா?' என்று கதவைத் தட்டிய உருவத்தை, ஜன்னல் வழியே பார்த்து ஒருகணம் மிரண்டு போனேன். ஸ்வெட்டர், உல்லன் சால்வை, தலையில் மங்கிக் குல்லாய் என்று காட்சியளித்தது சாட்சாத் நம்ம பரமசாமிதான். 'புல்லட் ஃபுரூப் ஜாக்கட் எதாவது உள்ள போட்டுருக்கிறீங்களா?' என்று கேலியாகக் கேட்டபடி, அவருடன் நடக்கத் தொடங்கினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அது, மார்கழி மாதம். வீதிகளில், பெண்கள் கோலமிட்டபடி இருக்க, ஆண்கள் சட்டையணியாத மார்பில் சந்தனம் பூசி கதம்பப்பூ மாலையணிந்து ஆண்டாளின் பாசுரங்களைப் பாடியபடி எங்களைக் கடந்துசென்றார்கள்.

##~##
'பார்த்தீர்களா... மார்கழியில் பனி தாக்கும் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். இந்த மாதத்தில்தான் உயிருக்கு நன்மை செய்யும் ஓசோன் காற்று, பூமியின் சுழற்சியால் நம் தமிழகத்தை நோக்கி தவழ்ந்து வருவதை நம் முன்னோர் கண்டுபிடித்திருக் கிறார்கள். அது நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்கே இதோ... ஆண்களும் பெண்களும் வீட்டுக்கு வெளியிலே பஜனை பாடியபடியும் கோல மிட்டபடியும்  அந்தக் காற்றை ஏற்றுக்கொள்கிறார்கள்' என்றேன் நான். 'ஈசியா விளங்குற மாதிரி ஏதாவது சொல்லுங்களேன்' என்றார் அவர் யதார்த்தமாக.

'அதாவது, நம் முன்னோர் அறிவியல் செய்திகளை ஆன்மிகத்துடன் இணைத்துச் சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இந்த மார்கழி மாதத்தில்தான், சிவனுக்கு உரிய திருவாதிரை திருநாள் வருகிறது. பெருமாளுக்கு உரிய வைகுண்ட ஏகாதசியும் மார்கழியில்தான். அதுமட்டுமில்ல தேவர்களுக்கான மாதமாகவும் மார்கழி விளங்குவதால் கண்ணபரமாத்மா பகவத்கீதையில், 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்கிறார்' என்று சொல்லி முடிக்க... ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களும் பனிக்காற்றில் தவழ்ந்து வந்தன.

'ஆஹா... எனக்குத் திருப்பாவை முப்பது பாடல்களும்  திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி முப்பது பாடல்களும் மனப்பாடமாக்கும். என் பத்து வயசுல, சிவன் கோயில்ல போயி திருவெம்பாவை பாடி வெண்பொங்கல் வாங்குவேன். பெருமாள் கோயில்ல போயி திருப்பாவை பாடி, சர்க்கரைப் பொங்கல் வாங்குவேன்' என்று பரமசாமி பெருமைபடச் சொன்னார். அவரே தொடர்ந்து, 'திருப்பாவை முதல்பாடல், திருவெம்பாவை முதல் பாடல்... இந்த ரெண்டின் முதல் சொல்லில் ஒரு அதிசயம் இருக்கு. ஆண்டாள் தனது திருப்பாவையில், 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ என்றும் மாணிக்கவாசகர் தனது திருவெம்பாவையில், 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை’ என்றும் தொடங்கி யுள்ளனர்'' என்றும் விளக்கினார்.

''அதுமட்டுமா? ஆண்டாள் பாசுரத்தில் முதல்சொல் மார்கழி, முதல் எழுத்து 'மா’. மாணிக்கவாசகர் பாடலில் முதற்சொல் ஆதியும் என்பதில் முதல் எழுத்து 'ஆ’. இப்படியும் யோசியுங்கள். வைணவம் பாடிய ஆண்டாள், மாணிக்கவாசகரைக் குறிப்பிட அவரது  பெயரின் முதல் எழுத்தாகிய 'மா’ என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம். சைவம் பாடிய மாணிக்கவாசகரும் ஆண்டாளைக் குறிப்பிட, அவர் பெயரின் முதல் எழுத்தாகிய 'ஆ’ என்பதைக் குறிப்பிட்டிருக் கலாம்'' என்று நான் சொல்ல... மலைத்துப் போனார் பரமு. 'பெரிய ஆளுங்க நீங்க’ என்பது போல் என்னைப் பார்த்தார்.

இந்த அரிய செய்தியை உலகுக்குச் சொன்னவர் காஞ்சி பரமாச்சார்யர்தான் என்று நினைத்துக் கொண்டே வர... கிழக்கு மெள்ள வெளுத்தது. கீழ்வானம் சிவந்தது, பொழுதும் புலர்ந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism