. த.ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், புண்ணிய தீர்த்தமான மகாமகக் குளத்தையும் அங்கே நடைபெறும் மாசி மகப் பெருவிழாவையும் அறிவோம். இந்தத் தீர்த்தக் குளத்துக்கு அருகில் கீழ்க்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅபிமுகேசர் ஆலயம், மிகப்பெரிய ஞானத்தையும் புண்ணியத்தையும் தந்தருளக் கூடிய திருத்தலம்!.
ஸ்வாமி - ஸ்ரீஅபிமுகேசர். ஸ்ரீநாரிகேளேசர் எனும் திருநாமத்தில், கிழக்கு நோக்கியபடி அருள்பாலித்தாராம், துவக்கத்தில்!

கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது புண்ணிய நதிப் பெண்கள் அனைவரும், 'மக்கள் அனைவரும் தங்களது பாபங்களையெல்லாம் எங்களிடம் சேர்த்துவிட்டனர். இதனால் நாங்கள் துன்பப்படுகிறோம்’ என சிவனாரிடம் சென்று முறையிட்டனர். பிறகு அவர் சொன்னபடி, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீநாரிகேளேசரை வணங்கித் தொழுதனர்.

இங்குள்ள மகாமகப் புண்ணிய தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சிவனாரைத் தரிசித்தனர். அவர்களிடம் சேர்ந்திருந்த சாபங்களையும் பாபங்களையும் போக்கி அருளுவதற்காக, கிழக்கு முகமாக இருந்த சிவனார், மேற்கு நோக்கியபடி காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம். அபிமுகம் என்றால், மேற்கு முகம் என்று பொருள். எனவே இந்தத் தலத்து நாயகனுக்கு, ஸ்ரீஅபிமுகேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது!

இங்கே, வருடந்தோறும் மாசி மக விழா வெகு விமரிசையாக நடைபெறும். பதினோரு நாள் நடைபெறும் இந்த விழாவில், இறைவனைத் தரிசிக்க, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருவார்கள். தினமும் ஒவ்வொரு வாகனத்தில், ஒவ்வொரு அலங்காரத்தில், ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

ஏழாம் நாள் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால், தோஷங்கள் விலகி, திருமண பாக்கியம் கைகூடும் என்பர். பத்தாம் நாள், தீர்த்தவாரியும் மறுநாள் பஞ்சமூர்த்திகள் வீதி புறப்பாடும் சிறப்புற நடைபெறும்!

இங்கே, வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், அம்பாள் ஸ்ரீஅமிர்தவல்லியை செவ்வரளிப் பூ சார்த்தி, தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்!

தவிர, துலாம் ராசிக்கு உரிய தலம் இது. அந்த ராசிக்காரர்கள் இங்கு வந்து வணங்கினால், அவர்களின் அத்தனை தோஷங்களும் விலகிவிடும் என்பர். பன்னிரு கரங்களுடன் ஸ்ரீசுப்ரமணியர், யோக நிலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோரும் இங்கு விசேஷம்!

- மா.நந்தினி
படங்கள்: ந.வசந்தகுமார்