Published:Updated:

தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!

மாசி மகத்துவம்!

தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!

மாசி மகத்துவம்!

Published:Updated:
தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!
##~##
நா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். இங்கே சுமார் 650 வருடம் பழைமை வாய்ந்த அற்புதமான ஸ்ரீகோதண்டராமர் ஆலயம் உள்ளது. ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர் சமேதராக திருக்காட்சி தரும் மூலவர் ஸ்ரீகோதண்டராமரைப் பார்த்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

ஆலயத்தில், சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீரங்க நாதரும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜ பெருமாளும் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் (இங்கு இரண்டு அனுமன் சந்நிதிகள் உள்ளன), ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமணவாள மாமுனிகள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரும் இங்கே திருக்காட்சி தருகின்றனர்.

திருக்கார்த்திகையில் விஷ்ணு தீபம், சித்திரை மாத பௌர்ணமி, புரட்டாசி மாதம், ஸ்ரீராம நவமி ஆகிய நாட்களில் இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்புற நடைபெறும். மாசி மக நன்னாளில், இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரபலம். அந்த நாளில், பொறையார், தரங்கம்பாடி, திருக்கடையூர் என சுற்றுவட்டார ஊர்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த நாளில், பொறையார் ஸ்ரீகோதண்டராமர், அதே ஊரில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர், தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் ஆகியோர் சூழ்ந்து வர... தரங்கம் பாடி கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரிப் பெருவிழாவில், மூன்று தலத்து உத்ஸவ மூர்த்தங்களையும் காணக் கண்கோடி வேண்டும்.

தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!

பிறகு, தரங்கம்பாடியில் இருந்து பொறையாருக்கு திருவீதி பவனி வரும் ஸ்ரீகோதண்டராமருடன் எண்ணற்ற பக்தர்கள் பின்னால் அணிவகுத்து வருவார்கள். ஆலயத்துக்கு வந்ததும், உத்ஸவத் திருமேனிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு என 16 வகை அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் ஆகியன நடைபெறும். மாசி மக தீர்த்தவாரிப் பெருவிழாவில் கலந்து கொண்டு, ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், சகல பாவங்களும் விலகும். சொத்துப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், உத்தியோகத்தில் மேன்மை மற்றும் பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்கள், தேர்வு எழுதும் மாணவர்கள், தம்பதி ஒற்றுமை மேலோங்க விரும்புவோர் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்கிறார் கோயிலின் ரங்கசாமி பட்டாச்சார்யர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மாசி மக நாளில், புளியோதரை, தயிர்சாதம், சர்க்கரைப்பொங்கல் என நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், இங்கு வந்து வேண்டிச் சொல்வோர் ஏராளம். இங்கேயுள்ள ஸ்ரீஅனுமனும் வரப்பிரசாதி. சனிக்கிழமைகளில் இவருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; கல்வி - ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை!

          - மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!


பஞ்சலிங்க திருத்தலம்

புகழ்பெற்ற சிவ திருத்தலமான திருவிடைமருதூரை பஞ்சலிங்க திருத்தலம் என்று போற்றுவார்கள். ஆமாம்... இந்த ஊரின் கீழ வீதியில் ஸ்ரீவிஸ்வநாதரும், மேலவீதியில் ஸ்ரீரிஷிபுரீஸ்வரரும், தெற்கு வீதியில் ஸ்ரீஆத்மநாதரும், வடக்கு வீதியில் ஸ்ரீசொக்கநாதரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோயில் களுக்கு நடுநாயகமாக- ஊரின் மையத்தில் அருள்மிகு மகாலிங்கேஸ்வரரின் திருக்கோயில். ஆகவேதான், இந்தத் தலத்துக்கு இப்படியரு சிறப்பு!

சூரிய பகவானின் சிவபூஷை!

தாரமங்கலம் ஸ்ரீகயிலாயநாதர் ஆலயத்தில், ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று தேதிகளிலும் சூரிய பகவான் தனது கிரணங்களால் சிவபெருமானைத் தழுவி பூஜிக்கும் வைபவம் விசேஷம். மாலைப் பொழுதில் தேர் நிலையம் நந்தி பகவான் மீது விழுந்து, கோபுரத்தின் வழியே உள்சென்று, அதிகார நந்தியின் கொம்புகளுக்கு இடையே புகுந்து, சிவனாரின் திருமேனியை கதிரவன் தழுவும் அந்த நேரத்தில், விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி

தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!


'மாசி’ பெருவிழா!

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதையட்டி, ஸ்ரீசெந்திலாண்டவர் மற்றும் ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வர். இந்த விழாவையட்டி நடைபெறும் 'உருகு சட்ட சேவை’ பிரபலம். மேலும் பச்சை சார்த்துதல், சிவப்பு சார்த்துதல், வெள்ளை சார்த்துதல்... என விதவிதமான அலங்காரங்களில் அருளும் செந்தூர் முருகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

- எஸ்.ராமச்சந்திரன், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism