Published:Updated:

சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்!

பழமையைப் போற்றும் பீரங்கிமேடு

சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்!

பழமையைப் போற்றும் பீரங்கிமேடு

Published:Updated:
##~##

'முல்லைப் பெரியாறுக்கு 100 வயது ஆகிவிட்டது. பழைய அணை உடைந்துவிடும். எனவே புதிய அணை கட்டவேண்டும்’ என்று மல்லுக்கு நிற்கிறது மலையாள அரசு. சரியான கட்டுமானப் பொருள்களைக்கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கும் என்பதற்குத் தமிழகத்தில் கல்லணை முதல் செஞ்சிக்கோட்டை வரை கட்டடச் சாட்சிகள் ஏராளம். அந்த வகையில் முன்னோர்களின் தொழில்நுட்பத்தின் வெற்றியைப் புரிந்துகொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பீரங்கி மேடு மக்களைப் பற்றி வாசகர் ஒருவர் வாய்ஸ் நாப்பில் குறிப்பிட்டு இருந்தார்.  

 செஞ்சிக்கு அருகில் இருக்கும் பீரங்கி மேட்டில் உள்ள அருணாச்சலீஸ்வரர் கோயில், சுமார் 500 வருடங்களுக்கு முன்பு நாயக்கர் மன்னனால் கட்டப்பட்டது. ராஜா தேசிங்கு மீது ஆற்காடு நவாப் படை எடுத்து வந்தபோது, சிதிலம் அடைந்த கோயில்களில் இதுவும் ஒன்று. சில நூற்றாண்டுகளாகப்

சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்!

புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயிலைப் புனரமைக்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றவே, அறநிலையத் துறையை நாடி இருக்கின்றனர் பீரங்கிமேடு மக்கள்.

இப்போது அப்பகுதி மக்களின் உதவி«யாடு அறநிலையத் துறை கோயிலைப் புதுப்பிப்பதோடு, ஐந்து நிலை ராஜகோபுரத்தையும் கட்டி வருகிறது. 2007-ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்த கட்டட வேலையை இன்னும் ஒரு வருடத்துக்குள் முடித்து கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்தப் பணியில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம், கட்டடம் கட்ட இவர்கள் சிமென்ட் உபயோகிக்கவில்லை. சுண்ணாம்பு, மணல், கடுக்காய், வெல்லம், காவி, மஞ்சள் போன்றவற்றைச் சேர்த்து அம்மியில்வைத்து அரைத்த கலவையைக்கொண்டு கட்டிவருகின்றனர். அதனால்தான் இந்த ஐந்தாண்டுகள் தாமதம்.

சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்!

''இந்தப் பகுதி மக்கள் கோயிலைப்  புனரமைக்கணும்னு கோரிக்கை வெச்சதோட மட்டுமில்லாம  நன்கொடைகளைத் திரட்டியும் கொடுத்தாங்க. அப்புறம் நாங்க திருப்பணிக் குழு அமைச்சு இந்தக் கோயில கட்ட முடிவு செஞ்சோம். அப்போதான் தொல்பொருள் துறையில் உள்ள தொழில்நுட்ப ஆலோசகரும் ஸ்தபதியும் ஆன ரவி, 'ஒரு பழங்காலக் கோயிலைப் புதுப்பிக்கும்போது, பழங்கால முறையைப் பின்பற்றலாமே’னு யோசனை சொன்னார். எங்களுக்கும் அது சரினு பட்டது. அதான் செயலில் இறங்கினோம்.

ஆரம்பத்தில் அம்மியில்வெச்சு அரைச்சுத்தான் கலவை செஞ்சோம். ஆனா, அதுக்கான வேலை ஆட்களும் நாட்களும் அதிகம் பிடிச்சதால இப்போ கிரைண்டர் மூலமா அரைச்சுக் கலவையைத் தயார் பண்றோம். இப்படிக் கட்டும்போது, இதன் பளபளப்பு... சந்தேகமே வேணாம் 100 வருஷத்துக்கும் மேல இருக்கும். மேலும் இந்த முறையில் கட்டுறப்போ அப்பப்போ பெயின்ட் அடிக்க வேண்டியதும் இல்லை. கட்டடம் கொஞ்சம் அழுக்காவோ நிறம் மங்கியோ தெரிஞ்சா சோப் ஆயில் போட்டுக் கழுவிட்டா

சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்!

பழையபடி பளபளப்பு வந்துடும். இந்தக் கோயிலைக் கட்ட ஆரம்பிக்கும்போது நிறைய சிதைஞ்சு இருந்ததால, கோயிலோட பேரு எங்களுக்குத் தெரியலை. ஊர் மக்கள்கிட்ட விசாரித்துப் பார்த்தப்போ அவங்களுக்கும் சரியாத் தெரியலை. சிவன் கோயில்ங்கிறதால, 'அருணாச்சலீஸ்வரர் கோயில்’னு நாங்களாப் பெயர்வெச்சு கட்டடப் பணிகளை ஆரம்பிச்சோம். அப்புறமா அறநிலையத் துறையின் பதிவில் பார்க்கும்போது, அதே பெயர் இருந்தது எங்களை மிகவும் ஆச்சர்யப்படவைத்தது!'' என்று நெகிழ்கிறார் திருப்பணிக் குழு தலைவர் ரவிச்சந்திரன்.

''செஞ்சிக் கோட்டைக்கு உள்ள வெங்கட்ரமணன் கோயில், வேணுகோபாலர் கோயில், ரெங்கநாதர் கோயில்னு பல கோயில்கள் இருந்தாலும் அங்க எல்லாம் இப்போ வழிபாடு நடக்கிறது இல்லைங்க. அதனாலதான் இந்தக் கோயிலைப் புதுப்பிக்கிறதுல இவ்வளவு ஆர்வம் காட்டுறோம்'' என்கின்றனர் ஊர் மக்கள்!

-அற்புதராஜ்
படங்கள்: எஸ்.தேவராஜன்