Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

த்திரம் நட்சத்திரத்தை 'உத்திர பல்குனி’ என்கிறது வேதம். சிம்ம ராசியில் முதல் கால் பங்கும், கன்னி ராசியில் முக்கால் பங்குமாக பரவியிருக்கும். இரண்டு ராசிகளின் இயல்பும் கால்- முக்கால் என்கிற கோணத்தில், விகிதாசாரப்படி பலன் தரும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை கால்-முக்கால் என்ற விகிதத்தில் இரண்டு ராசிகளில் இடம்பிடித்துவிடும். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகியன சம பங்காக இரண்டு ராசிகளில் இடம்பிடித்து இருக்கும். இதற்கு 'அர்த்தபம்’ என்ற பெயர் உண்டு. அசுவினி, பரணி, ரோஹிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன, முழுமையாக ஒரே ராசியில் இடம்பிடித்தவை.

கேந்திர த்ரிகோணம், ராசியின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடும் ராசிப் பொருத்தம் ஆகியவற்றில் எதிரிடையான பலனை அளிக்கும் தகுதியைப் பெற்றுவிடுகின்றன. கால், முக்கால், அரை நட்சத்திரங்கள் என்பது, ராசியின் சேர்க்கையில் பலனின் மாறுதலை சந்திக்க வைக்கிறது. ராசியின் (நட்சத்திரங்கள் இருக்கும் இடம்) தொடர்பில் பலன் மாறுபடும் என்கிறது ஜோதிடம்.

நட்சத்திரத்துக்கு மட்டுமோ, ராசிக்கு மட்டுமோ பலன் சொல்வது பொருந்தாது. இரண்டும் இணைந்த பலன் நடைமுறையில் வெளிப்படும் என்கிற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது ஜோதிடம்.

##~##
ராசி- ஜடம். ஆனால், சைதன்யத்தின் தொடர்பில் செயல்படும் தகுதி படைத்தது. நட்சத்திரம் சைதன்யம் பெற்றது. அதன்  தொடர்பில் ராசியின் இயல்பும் சேர்த்து வெளிப்படும். மனம்- ஜடம்; ஆன்மா- சைதன்யம். ஆன்மாவின் தொடர்பில், மனதில் குவிந்த எண்ணங்கள் உயிர் பெற்று வெளிவரும். ராசியின் பங்கை... அதாவது நட்சத்திரங்கள், கிரஹங்கள் ஆகியவை இருக்கும் இடத்தின் தாக்கத்தை ஒட்டியே பலன் சொல்ல இயலும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது ஜோதிடம்.

நாம் சேமித்து வைத்த சிந்தனைகள் ஆன்மாவின் தொடர்பில் வெளிப்பட்டு, இன்ப- துன்பங்களை உணர வைக்கிறது. அதற்கு ஆன்மா ஸாக்ஷியாக (சாட்சியாக) விளங்குமே தவிர, பலனில் கை வைக்காது என்கிற சாஸ்திரக் கோட்பாட்டை ஆமோதிக்கிறது ஜோதிடம். ஜீவராசிகளின் இடர்பாடுகளுக்கு சூரியன் காரணம் இல்லை. ஆனால் உயிரினங்களை இயங்க வைத்து, சாட்சியாகக் காட்சி அளிக்கிறான்!

உத்திரம் நட்சத்திரத்தின் தேவதை பகன். செல்வம், அறம், புகழ், களை, அறிவு, பற்றற்ற நிலை... இந்த ஆறு விஷயங்களுக்கும் 'பகம்’ என்று பெயர். அவற்றை தன்னுள் சேமித்தவன் ஆதலால் பகவான் என்று பெயர் என்கிறது புராணம் (ஐச்வர்யஸ் ஸமஸ்தஸ்ய தர்மஸ்ய...)

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பொருளின் தோற்றம்- மறைவு, உயிரினங்களில் போக்குவரவு, அறியாமை, அறிவு ஆகியவற்றை உணர்ந்தவன் பகவான் என்கிறது சாஸ்திரம் (உத்பத்திம்ச விபத்திம்ச...). பகன் என்கிற தேவதை, தன்னில் சேமித்த பொருட்களை கொடையாகப் பகிர்ந்தளிக்க காத்துக் கொண்டிருப்பவன். தேவர்களில் முதல்வன். 'தாங்கள் உத்திரம் நட்சத்திரத்துடன் இணைந்து, எங்களது உலகவியல், ஆன்மிகம் இரண்டிலும் நிறைவு அளித்து அருள வேண்டும்’ என்கிற வேண்டுகோள் வேதத்தில் உண்டு (ஸ்ரேஷ்டோ தேவானாம் பகவோபகாஸி...) 'பகனிடம் தங்கிய அத்தனைப் பொருட்களும் உத்திரத்தில் இணைந்து, அதில் பிறந்தவனுக்கு அளித்தருள வேண்டும்’ என்கிற பகுதியும் வேதத்தில் தென்படும் (பகோஹ தாதா...). திருமணத்தில் நிறைவை எட்ட வைக்கும் சடங்கு- பாணிகிரஹணம். 'ஒன்றுபட்ட எங்கள் இருவரது உள்ளங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிறைவான- தங்களிடம் இருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித் தந்து அருள வேண்டும்’ என்ற தம்பதியின் வேண்டுகோள், பகன் என்ற தேவதையிடம் நிகழ்வதை வேதம் சுட்டிக்காட்டும் (பகோ அர்யமாஸவிதா...).

பகனின் அருளுக்கு 'பாக்யம்’ என்று பெயர். 'பாக்ய சூக்தம்’ என்ற பெயரில், அவன் புகழ் பாடுகிறது வேதம் (ப்ராதரக்னிம...). செல்வம், மகிழ்ச்சி, செல்வாக்கு, புகழ், அடக்கம் ஆகிய அத்தனையையும் உத்திரத்தில் பிறந்தவன் பெற்று மகிழ்வான் என்கிறது ஜோதிடம். உத்திரத்தில் முதலில் சந்திப்பது சூரிய தசை. அது 6 வருடங்கள் நீடித்து இருக்கும். எண்ணிக்கையில் குறைவான தசாகாலம் இது ஒன்றுதான். வாழ்க்கையில் மகிழ்ச்சியான திருப்பு முனையை ஏற்படுத்துவான், ஜாதகத்தில் பலம் பொருந்திய சூரியன் என்று ஜோதிடம் சொல்லும். கிருத்திகை மற்றும் உத்திராடத்துக்கும் இந்த தசை பொருந்தும். ஆன்மகாரகனான அவனின் தசை முதலில் வருவது, அதன் சிறப்பு. உடல் உறுப்புகளின் பாங்கான வளர்ச்சிக்கு அவனது தசை ஒத்துழைக்கும்.

கால புருஷனின் இதயம், உதரம் (வயிறு)... இதை சுட்டிக்காட்டும் ராசிகளில் சிம்மம், கன்னி ஆகியவற்றில் பரவியிருக்கும் நட்சத்திரம் இது. இதயம் - ஆன்மிகம்; உதரம்- உலகவியல். இந்த இரண்டிலும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். இது, இரண்டு ராசிகளில் இடம் பிடித்தாலும், அம்சகத்தில் குரு மற்றும் சனியின் பங்கு அவனை உயர்த்தி விடும். சூரியனுடனும், சந்திரனுடனும்... அதாவது, ஆன்மா மற்றும் மனதுடன் இணைப்பை பெற்ற அந்த இருவரும் மனோ பலத்துடன் ஆன்ம பலத்தை வழங்குவதால், சந்திக்கும் சங்கடங்களில் இருந்து நழுவி, இலக்கை அடையும் தகுதியைப் பெற்றுவிடுவான்.

உத்திரம் திருநாள் கேரள அரச பரம்பரையில் உண்டு. பங்குனி உத்திரம் விழாக் காலமாக மாறிவிடும். பல்குனி என்கிற வேதச் சொல்லை, தமிழில் பங்குனி என்போம்.

சனி, உழைப்பின் வழியில் உயர்வை எட்ட வைப்பான். குரு, சிந்தனைத் தெளிவில் உழைப்பை நிறைவு செய்வான். இவை இரண்டும் அவனில் தென்படும் என்கிறது ஜோதிடம்.

பாகுபாடின்றி எல்லோரிடமும் அன்பாகப் பழகும் பாங்கு, தான் பெற்ற கல்வியின் துணையுடன் செல்வத்தைச் சேமிப்பவன், உலகவியலை சுவைத்து மகிழ்பவன் என்று அவனது குணாதிசயங்களை வரையறுக்கிறார் வராஹமிஹிரர்.

சொல் வளம், செயல் வளம், அடக்கும் பரிவு, கலைகளில் ஆர்வம், விளையாட்டில் ஈடுபாடு, உதவியளித்து பிறரையும் வாழவைத்து மகிழ்பவன் எனும் மாறுபட்ட விளக்கத்தை அளிப்பார் பராசரர். குருவும், சனியும், சூரியனும் முழு வலிமையுடன் ஜாதகத் தில் வீற்றிருந்தால், நல்ல குடிமகனாகப் போற்றப் படுவான் என்பது பராசரரின் கருத்து.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இரண்டு தாரைகளை உள்ளடக்கிய நட்சத்திரம் இது. உத்திர நட்சத்திரம் 'த்ருவ’ நட்சத்திரம். செயல்பாட்டில் நிறைவை எட்டும் எனும் நம்பிக்கையையும் அளிக்கும் அது. த்ருவம் என்றால் 'நிச்சயம்’ என்று பொருள். அரசர்களின் பதவியேற்பு விழா... (தற்கால சூழலில் அமைச்சர்களின் பதவி ஏற்பு எனலாம். உண்மையில் அரசாங்க வேலையில் பொறுப் பான பதவியேற்பும் அடங்கும்). நிலநடுக்கம், அக்னி பர்வதம், புயல், அடைமழை போன்ற உற்பாதங்களை அகற்ற- பரிகாரம் ஏற்க இது உகந்தது.

மரம், செடி- கொடிகளை நட்டு வளர்த்த புது குடியிருப்புகளை உருவாக்கவும், அறம் சார்ந்த அலுவல்களை துவக்கவும் இந்த நட்சத்திரம் உதவும் என்கிறார் பராசரர். மகிழ்ச்சி, அமைதி, பெருந்தன்மை, நன்றி, தெளிவான சிந்தனை ஆகியவை அவனில் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

முதல் பாதத்தில் பிறந்தவன் அறிஞன்; 2-வதில் பிறந்தவன் தலைவன்; 3-வதில்  பிறந்தவன் எதிலும் வெற்றி வாகை சூடுபவன், 4-ல் பிறந்தவன் அறத்தில் ஆர்வமுடையவன் என்று பாதங்களுக்கு பலம் சொல்லும் பிரஹத் ஸம்ஹிதை, சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியனும், கன்னியின் அதிபதியான புதனும் வலுப்பெற்று, அம்சகாதிபதிகளான குரு- சனியின் ஒத்துழைப் பும் பெற்றிருந்தால், நினைத்த காரியத்தை செவ்வனே செய்து பாராட்டு பெறும் தகுதி கிடைத்துவிடும். புதனிடம் இருந்து பகுத்தறிவு, குருவிடம் இருந்து தெளிவான சிந்தனை, சனியிடம் இருந்து தளராத உழைப்பு- இவை, ஆன்மகாரகனான சூரியனுடன் இணையும் போது, இன்பங்களைச் சுவைத்து மகிழ்ந்து, பேரறிவை எட்டிவிடுவான் என்பது பராசரரின் கருத்து.

சிம்மத்தின் ஐந்தாவதில் குருவின் வீடு. அது த்ரிகோணம். கன்னியானால் நாலாவது கேந்திரம். இவை, 8-ல் குரு வீடு இருந்தா லும், அந்த பலன் மங்கிவிடும். சிம்மத்துக்கும் கன்னிக்கும் ஆறிலும் ஐந்திலும் அமைந்த சனி, ஸ்வக்ஷேத்திர பலவானாக இருப்பதால், எதிரிடையான பலன்கள் அடிபட்டு நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்னல்களைச் சந்தித்தாலும், அதிலிருந்து எளிதாக வெளி வந்து, பிறவிப் பயனை எட்டுவார்கள். ஆன்ம சம்பந்தம், மன சம்பந்தம் இவற்றுக்கு இருப்பது சிறப்பு.

'பம் பகாய நம:’ என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்யலாம். பாக்ய சூக்தத்தை ஓதி, விஸ்தாரமாக பணிவிடை யில் இறங்கலாம். மந்திரம் தெரியாதவர்கள்.

'ஆயுர் தேஹி தனம் தேஹி
யஜோ தேஹி த்விஷோ ஜஹி,
பகம் தேஹி பகோதேவ:
ஸர்வகாமாம்ச தேஹிமே’

- என்கிற செய்யுளை 16 முறை சொல்லி, வழிபடலாம். கால நேரம் இல்லாத நிலையில், 'பகம் மேகுரு பக:’ என்று 108 தடவை... நீராடி, உடையணிந்து மனதில் அசை போடலாம்.

சர்வசாதாரணமாக நாம் சொல்லும் 'பகவான்’ எனும் வார்த்தை,  பரம்பொருளைக் குறிக்கும். இது, 'நமது விருப்பத்தை நிறைவு செய்பவர்’ என்கிற கருத்தை உள்ளடக்கியது. மனதுடன் இணைந்த வழிபாடு பலன் அளிக்கும். இயற்கையின் படைப்பான நீர், புஷ்பம், இலை, பழம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இவை இயல்பாகவே தூய்மை பெற்று இருப்பதால், அதற்குச் சிறப்பு உண்டு.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நீரால் நீராட்டி, புஷ்பத்தாலும் இலையாலும் (துளசி - வில்வம்) அவன் சிரஸ்ஸில் சொரிந்து, பழத்தை நிவேதனமாக அளிக்கலாம். 16 உபசாரங்களை விரிவாகச் செய்யும் தருணம் கிடைக்கவில்லை என்று அதை மறக்கக்கூடாது; சுணக்கமும் வரக்கூடாது.

காய்ந்த த்ரா¬க்ஷ பழத்துக்குப் பதிலாக வைக்கலாம். புஷ்பம் கிடைக்கவில்லை எனில், துளசியைப் பயன்படுத்தலாம். அதுவும் இல்லை யெனில், அட்சதையை ஏற்கலாம். இன்றைய கோலாகலமான சூழலிலும் தினமும் பகவானை வணங்குவது சாத்தியமே. தினமும் சுருக்கமாகச் செயல்பட்டு, விடுமுறை நாளில் விஸ்தாரமாகச் செயல்படலாம். உள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை நினைவுக்குக் கொண்டு வர, பூஜை ஒன்றே சுலபமான வழி.

பரம்பொருளை மனதில் குடியிருத்தி, வெளியே தெரியும் திருவுருவத்துக்கு நீராடல், புஷ்பச் சொரியல், நிவேதனம் ஆகிய மூன்றையும் நிகழ்த்தினால் போதுமானது. ஆன்மிகம் கலக்காத வாழ்க்கை நிறைவை எட்டாது. தவறான சிந்தனைகளுக்கு செவி சாய்த்து, உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனை நினைக்காமல் இருந்தால் மகிழ்ச்சி நம்மை விட்டு விலகிவிடும்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism