Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை! ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வகுப்பறையின் அமைதியைக் கிழித்தபடி, மாணவரின் செல்போனில் இருந்து ரிங்டோனாக பீறிட்டு ஒலித்தது சினிமா பாட்டு. நான் கோபித்துப் பேசுவதற்கு முன் அந்த மாணவர் எழுந்து, 'ஐயா, மன்னிக்கவும், இது எங்க அப்பா செல்போன். அவர் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அவசரத்துல எடுத்துட்டு வந்துட்டேன்; சைலண்டுல போடத் தெரியல' என்று சைலண்டாகச் சொன்னார்.

##~##
நான் கோபத்தை அடக்கிக் கொண்டு, 'அதிருக்கட்டும்... இந்தப் பாடலில் உள்ளது போல், ஆணையிட்டால் அலைகடல் அடங்காதா?' என்று கேட்க, அந்த மாணவர் பெரிய கும்பிடு போட்டு, 'ஐயா! ஒய் திஸ் கொலவெறி?' என்று அழுகிற குரலில் கேட்க... நானே சிரித்துவிட்டேன். பிறகு வழக்கம் போல் விவரித்தேன். 'ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடல் 'அலை பாயாதே’ என்று சொன்னால் கேட்குமா? சீதை இருப்பது லங்காபுரியிலே என்பதை அறிந்த ஸ்ரீராமர், ராமேஸ்வரத்திலிருந்து பாலம் கட்டி படைகளோடு இலங்கை செல்ல முடிவு செய்தார். அப்போது அலை அடங்காமல் சீறிக்கொண்டு இருந்ததால் பாலம் அமைப்பதில் இடையூறு ஏற்பட்டது. உடனே ஸ்ரீராமர், தர்ப்பைப் புல்லை விரித்து அதில் அமர்ந்து சமுத்திரராஜனை நோக்கித் தவம் இருக்கத் தொடங்கினார். அவர் வரத் தாமதமானது; கோபம் கொண்ட ஸ்ரீராமன், தனது வில்லில் அம்பு பூட்டினார். மறுகணம் சமுத்திரராஜன் அங்கு தோன்றி, ஸ்ரீராமனைப் பணிந்தார்; கடலும் அமைதியானது என்கிறது புராணம். இன்றைக்கும் ராமேஸ்வரத்துக்கு அருகில் திருப்புல்லாணி (ஸ்ரீராமர், தர்ப்பை புல்லைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்ததால்) என்ற பெயரோடு விளங்கி வருகிறது'' என்று சொல்லி விட்டு, ''கேட்டீர்களா? ராமனின் அன்பினால் பலர் அடங்குவர்; அம்பினால் கடல் அடங்கியது' என்று முடித்தேன்.

அது பொதுத்தமிழ் கற்கும் வகுப்பானதால், அதில் இயற்பியல் படிக்கும் மாணவர் ஒருவர் தயக்கத்தோடு எழுந்து, 'சார், நீங்க சொல்ற விஷயம் பக்திக்கு வேணா பொருந்தலாம். அறிவியல் உலகம் இதை ஏற்குமா?' என்று கேட்டார். நான் மகிழ்ச்சியோடு, 'சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் நாட்டின் கப்பற்படைக் குழுவினர், கேரளாவில் இன்றைக்கும் முழுவதுமாக மரத்தில் குடைந்து செய்யப்படுகிற படகுகளின் தொழில் நுட்பத்தை அறிந்துகொள்ள  வந்தார்கள். அந்தப் படகுகளில் ஆணி, தகரம், பித்தளை போன்ற எந்த உலோகமும் பயன்படுத்தப்படுவதில்லையாம். பெரிய மரங்களைக் குடைந்து செய்யப்படும் அந்தப் படகுகளை வாங்கிச் செல்ல அவர்கள் வந்தார்கள். அந்தக் குழுவோடு உடன் சென்ற கேரளத்துப் பொறியியல் வல்லுநர் ஒருவர், ஜப்பான் நாட்டில் தான் கண்ட அதிசயக் காட்சியை,  வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதியிருந்தார்' என்று சொல்லி நான் நிறுத்த,

'ஐயா! வகுப்பு முடியப்போகுது. விளம்பர இடைவேளை இல்லாமல் சொல்லுங்க' என்றாள் மாணவி ஆர்வமாய். உடனே நான், 'கேரளத்துப் படகுகளை ஏற்றிச் சென்ற பிரமாண்டமான ஜப்பானியக் கப்பல், அவர்கள் நாட்டை நெருங்கியதாம். அந்த நாடு கடல் சூழ்ந்த தீவு என்பது உங்களுக்குத் தெரியும். இவர் களின் கப்பல் சென்ற நேரத்தில், கரையை நெருங்க முடியாத படி அலைகளால் கொந்தளித்ததாம் கடல். அப்போது கப்பலில் இருந்த அதிகாரிகள் கரைத்தளத்துக்குத் தொடர்பு கொள்ள, சில நிமிடங்களில் மூன்று ஹெலிகாப்டர்கள் தரையிலிருந்து தாழப் பறந்துவந்து, இவர்களின் கப்பலைச் சுற்றி நீர்க்குண்டு களைப் பொழிந்ததாம். சற்று நேரத்தில் கப்பலுக்கும் கரைக்கு மான இடம் முழுவதிலும் இருந்த அலைகள் நீருக்குள் கரைந்து போகக் கடல் ஏரி போல் அமைதியானதாம். அலைகளை அடக்க ஜப்பானியர்கள் செய்த செயலை அவர் வியப்புடன் குறிப்பிடுகிறார். இந்தச் செய்தி சமீபத்தில் இருபது ஆண்டு களுக்கு முன் நடந்தது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?' என்று நான் கேட்க, அத்தனைபேரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism