Published:Updated:

மனவளக் கலை யோகா

மனவளக் கலை யோகா

மனவளக் கலை யோகா

மனவளக் கலை யோகா

Published:Updated:
மனவளக் கலை யோகா
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டந்த 19-ஆம் தேதி வேலூர் சத்துவாச்சாரி அறிவுத் திருக்கோயிலில், சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் மனவளக் கலை இலவச பயிற்சி முகாம் நடந்தது. ஆந்திராவின் சித்தூரில் இருந்தும் வாசகர்கள் பலர் வந்திருந்தனர்.

''சக்தி விகடனின் தீவிர வாசகன் நான். இந்த முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற என் ஆசை, இப்போதுதான் நிறைவேறியிருக்கு. இந்தப் பயிற்சி தந்திருக்கிற புத்துணர்ச்சி, இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று'' என்று சிலிர்ப்புடன் தெரிவித்தவர், சித்தூரில் உள்ள மனநல மருத்துவர் முரளி மோகன்.

''இந்தக் குளிர்காலத்துல எனக்கு மூச்சுத் திணறல் வரும். என்ன செஞ்சாலும் சரியாகறது ரொம்பக் கஷ்டம். அந்த நேரத்துல, என் கணவர் இந்த முகாமிற்குக் கூட்டிட்டு வந்தார். அதுல, மூச்சுப் பயிற்சியை செஞ்சு முடிச்சதும், நெஞ்சுக் கூட்டுல மிகப்பெரிய ரிலாக்ஸ் கிடைச்சுது. சக்தி விகடனுக்கு நன்றி'' என்று நெகிழ்ந்தபடி சொன்ன வாசகி விஜயலட்சுமி, தன் கணவருடன் வந்திருந்தார்.  

''இந்தப் பயிற்சியை வெறும் இலவசமா சொல்லிக் கொடுக்கறதா நினைக்காம, அவ்வளவு ஆத்மார்த்தமா சொல்லித் தந்த விதமே மனசுக்கு இதமா இருந்துச்சு. ஒவ்வொரு பயிற்சியும் அருமையா இருக்கு. எல்லாமே, உடலுக்கும் மனசுக்கும் ரொம்பவும் தேவையான பயிற்சிகள்!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் பெங்களூருவில் இருந்து வந்திருந்த சந்தியா எனும் வாசகி.

முகாம் நிறைவுற்று, இதே நிறைவுடன் கிளம்பிச் சென்றனர் வாசகர்கள்!

- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

மனவளக் கலை யோகா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism