Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குதியும் திறமையும் இல்லாதவர்களுக்குக்கூட, கர்வம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு எந்தத் திறனும் இல்லை என்பது எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று இன்னும் அதீதக் கர்வத்துடன் ஆணவத்துடன் திரிகின்றனர் பலரும்! ஒரு குண்டூசியைக்கூட உற்பத்திச் செய்ய முடியாவிட்டாலும் செருக்குடன் திரிபவர்கள் இருக்கிற பூவுலகில், உலகையே படைத்த பிரம்மாவுக்கு ஆணவம் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர்; படைப்புக்கு அதிபதி என்று மகா பெருமையுடன் திகழும் ஸ்ரீபிரம்மாவுக்கு, ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவமே திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது.

கர்வம் என்பது நமக்கெல்லாம் அலட்டல். ஆனால் இறைவனின் கர்வத்தில், உலக உயிர்களுக்கான பாடம் அரங்கேறும் விளையாட்டு நிகழும். ஒருகட்டத்தில், உண்மையை உணர்ந்து கொண்ட ஸ்ரீபிரம்மா, தற்போதைய காஞ்சியம்பதிக்கு வந்து திருமாலை மனதில் நிறுத்தி, யாகம் ஒன்றை நடத்துவது என முடிவு செய்தார்.

மனைவியை அருகில் வைத்துக் கொண்டு யாகமும் பூஜையும் செய்வதுதானே மரபு! எனவே, ஸ்ரீசரஸ்வதி தேவியை யாகத்துக்கு வரும்படி அழைக்க... 'கர்வத்துடன் திரிவது கணவனேயானாலும் மன்னிக்க மாட்டேன்’ என்று சொல்லி, வர மறுத்தாள். உடனே, ஸ்ரீசாவித்திரியையும் ஸ்ரீகாயத்ரியையும் அழைத்துக் கொண்டு, யாகத்துக்குப் புறப்பட்டார் ஸ்ரீபிரம்மா. இதில் ஆவேசமானாள் ஸ்ரீசரஸ்வதி. அவளும் பூமிக்கு வந்தாள். நதியாக உருவெடுத்து, யாகம் நடைபெறும் இடத்தையே தண்ணீரில் மூழ்கச் செய்வது எனத் திட்டமிட்டாள்.

ஆலயம் தேடுவோம்!

பூமிக்கு வந்தவள், நதியானாள். கடும் உக்கிரத்துடன் மிக வேகமாகப் பாய்ந்து வந்தாள். இதனால், அந்த நதிக்கு, வேகவதி எனப் பெயர் அமைந்தது.

மனிதர்கள்தான் இனமும் குணமும் பார்ப்பார்கள். எந்தப் பாகுபாடுகளும் இன்றி, ஆட்கொள்பவன் ஆண்டவன் மட்டுமே! ஆகவே ஸ்ரீபிரம்மாவின் யாகத்தையும், அதனைக் கலைக்க ஸ்ரீசரஸ்வதிதேவி, நதியாக உருவெடுத்து வந்திருப்பதையும் அறிந்த திருமால், தன் பக்தனுக்கு வந்த சோதனையை முறியடிக்கத் திருவுளம் கொண்டார். யாகம் நடைபெறும் இடத்தை நோக்கி, சீறிப் பாய்ந்தபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த வேகவதி நதிக்கு முன்னே... தன் ஆதிசேஷனின் பிரமாண்டமான திருவுருவத்தை அப்படியே அணையாக்கிக் கொண்டு, அந்த ஆதிசேஷன் மீது மிக ஒய்யாரமாகச் சயனித்திருந்தார் திருமால். திருப்பாற்கடலில் சயனித்துள்ளதைப் போலவே எதிரில் வீற்றிருக்கும் பிரமாண்ட ஆதிசேஷனையும் பரம் பொருள் திருமாலையும் கடந்து வேகவதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

தன் தவற்றை உணர்ந்தாள். கணவரிடமும் கடவுளிடமும் மானசீகமாக மன்னிப்பு வேண்டி னாள். திருமாலும் ஸ்ரீபிரம்மனுக்குத் திருக்காட்சி தந்தார். அவரிடம், 'எனக்கு அருளியது போல், பூவுலகத்து மனிதர்கள் யாவருக்கும் இந்த க்ஷேத்திரத்தில் இருந்து அருள்பாலியுங்கள் ஸ்வாமி’ என்று வேண்டினார் பிரம்மன். அதை ஏற்று, இன்றும் அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார் ஸ்ரீபரந்தாமன்.

ஆலயம் தேடுவோம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாற்கடல். சென்னை - வேலூர் சாலையில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாற்கடல் திருத்தலம். வேகவதி ஆற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்த திருப்பாற்கடலில் இருப்பது போலவே ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஊரின் பெயர் திருப்பாற்கடல் என்றே அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம்.

பெருமாள் - ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் - ஸ்ரீகடல்மகள் நாச்சியார். பங்குனி மாத ரேவதி நட்சத்திர நன்னாளில், உபய நாச்சியாரின் உத்ஸவத் திருமேனிக்கு பால் திருமஞ்சனம் செய்து, படியை நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டுப் பிரார்த்தித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கவும் சிறக்கவும் செய்கிற குழந்தை பாக்கியத்தைத் தந்தருள்வாள் தாயார். அவளுக்குத் தேன் திரு மஞ்சனம் செய்து வணங்கினால், விரைவில் திருமண வரம் கை கூடும் என்பது ஐதீகம்.

ஆதிசேஷனின் மேல் சயனித்த திருக்கோலத்தில், சுமார் 9 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீரங்கநாதர். அதுவும் எப்படி? 'அத்தி ரங்க அத்தி ரங்க ஆதிமூல ஸ்வாமியாம்; இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம்’ என்பதற்கு ஏற்ப, அத்தி மரத்தாலான மூர்த்தமாக சேவை சாதிக்கிறார். அத்தி ரங்க தரிசனம், பாவ வினைகளை எல்லாம் போக்கும் என்பர்.

ஆலயம் தேடுவோம்!

சித்ரகுப்தன், அத்தி மர சமித்து களைக் கொண்டு மிகப்பெரிய ஹோமம் நடத்தி திருமாலை வழிபட்டிருக்கிறான். எனவே, திருப்பாற்கடல் தலத்துக்கு வந்து, ஸ்ரீரங்கநாதரை பிரார்த்திக்க, சித்ரகுப்தன் எழுதி வைத்துள்ள மொத்தப் பாவக் கணக்குகளும் நீங்கும்; வைகுண்டப் பதவியை அடையலாம் என்று நிகமாந்த மகாதேசிகர் தனது மெய்விரத மான்யத்தில் அருளிச் சென்றுள்ளார்.

நாராயண சதுர்வேதிமங்கலம் என ஆதியில் அழைக் கப்பட்டு, தற்போது திருப்பாற்கடல் என அழைக்கப்படும் இந்தத் தலத்தின் பெருமையை உணர முடிகிறதா உங்க ளால்? ஆனால் பல வருடங்களாக நித்திய பூஜையே அரிதாகி, வழிபாடுகளுக்கே வழியின்றி, ஆலயத்தினுள் நுழைவதற்கே பெரும்பாடு படுகிற சோகநிலையில் இருந்த ஆலயம் இது என்றால், உங்கள் மனம் என்ன பாடுபடும்? தற்போது மெள்ள மெள்ள திருப்பணிகள் நடந்தேறி வருகின்றன.

சப்தக விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார் திருமால். சப்த ரிஷிகளும் இங்கு வாசம் செய்து, பரம்பொருளை வழிபடுவதாக ஐதீகம். விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில் இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட, சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை.

ஆலயம் தேடுவோம்!

கல்வியில் மேன்மை பெறவும், மனச் சஞ்சலத்தில் இருந்து விடுபடவும், கால் கள் சம்பந்தமான பிரச்னைகள் நீங்கப் பெறவும் நல்லெண்ணெய் தானம் செய்து, அத்தி ரங்கனை வழிபடுவது சிறப்பு என்கின்றனர். இங்கே, 116 விரலி மஞ்சளைக் கொண்டு மாலையாக்கி ஸ்ரீஅத்திரங்கப் பெருமாளுக்கு சார்த்தி வழிபட, திருமணமாகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.கருடாழ்வாருக்கு ராகு காலத்தில் தேன் திருமஞ்சனம் செய்து வழிபட்டால், நோய்களும் தோஷங்களும் நீங்கும்; சிறிய திருவடியான ஸ்ரீஆஞ்சநேயருக்கு கூழ்பாண்டம் செய்து (11 எண்ணிக்கை கொண்ட பூசணிக்காய் மாலை) மாலை சார்த்திப் பிரார்த்தித்தால், ம்ருத்யு தோஷங்கள் விலகும் என்கிறார் நந்த குமார் பட்டாச்சார்யர்.

மிகப் பெரிய புண்ணிய க்ஷேத்திரம்; நம் மொத்தப் பாவக் கணக்குகளையும் தீர்க்கும் தலம் இது. 116 விரலி மஞ்சளைக் கொண்டு மாலையாகச் சார்த்துகிற அதே நேரத்தில், அந்த எண்ணிக்கை யில் கல்லோ சிமென்ட் மூடைகளோ கோயிலுக்கு வாங்கிக் கொடுங்கள். பாலும் தேனும் திருமஞ்சனம் செய்து, நல்லெண்ணெய் தானம் தருகிற அதே வேளையில்... கோபுர திருப்பணிக்கோ, பிராகார நடைபாதைக்கோ உங்களால் முடிந்த நன்கொடையைத் தாராளமாகச் செய்யுங்கள்.

பூலோக திருப்பாற்கடல் எனப் போற்றப்படும் இந்தத் திருப்பாற்கடல் கிராமத்துக்கு, பூவுலகின் பக்தர்கள் எல்லோரும் வந்து பாவங்களைப் போக்கிக்கொண்டு, புண்ணியங்களைப் பெருக்கி நலமுடன் வாழ... அங்கே திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெற... அத்தி ரங்கனை ஆத்மார்த்தமாகத் தொழுதபடியே வெளியே வந்தோம்.

அத்தி ரங்கா... அத்தி ரங்கா... அத்தி ரங்கா!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism