நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

'என் எல்லாப் பிரார்த்தனையும் நிறைவேறிருச்சு!'

திருவிளக்கு பூஜை

'என் எல்லாப் பிரார்த்தனையும் நிறைவேறிருச்சு!'
##~##
தி
ருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- திருவத்திபுரத்தில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில், 13.3.12 அன்று சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. சக்தி விகடனின் 82-வது திருவிளக்கு பூஜை இது!

இந்தப் பக்கம் சென்னையில் இருந்தும் அந்தப் பக்கம் திருநெல்வேலியில் இருந்தும் என... பல ஊர்களில் இருந்தும் வாசகியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ''சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜையில் நான் கலந்து கொள்வது, இது 6-வது முறை. வீடு வாங்கணுங்கற பிரார்த்தனை முதல் எல்லாமே நிறைவேறிருக்கு'' என்றார் சென்னை வாசகி லீலாவதி. ''சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக்கணும்னு ரொம்பநாள் ஆசை. என் அப்பா விபத்துல சிக்கி படுத்த படுக்கையாக் கிடக்கார். அதான், தூரத்தையெல்லாம் பாக்காம இங்கே வந்து கலந்துக்கிட்டேன்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார் நெல்லை - பாளையங்கோட்டை வாசகி மாரீஸ்வரி.

மருமகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, வாசகி சாந்திப்ரியா, தங்கையின் மகனுக்குத் தடையின்றிக் கல்வி கிடைக்க வேண்டும் என புதுச்சேரி வாசகி அருந்ததி, பிள்ளை வரம் வேண்டி திருவத்திபுரம் வாசகி சரிதா, என வாசகியர் பலரும் உருக்கமாகவும் ஆத்மார்த்தமாகவும் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தனர்.  

கட்டுரை, படங்கள்: ரா.ராபின் மார்லர்