சுட்டிக் குழந்தைகளின் சேட்டை குறையணுமா?

. திருச்சிராப்பள்ளியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் 3கி.மீ தொலைவிலுள்ளது உய்யக்கொண்டான் திருமலை ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீஅஞ்ச னாட்சி உடனுறை ஸ்ரீஉஜ்ஜீவன நாதர் திருக்கோயில். இத்தல ஈசனிடம் வேண்டிக் கொள்ள ஆயுள் பலம் கூடும். ஈசனுக்கு பானகம் படைத்து வழிபட ஆயுள் விருத்தியாகும். அஞ்சனாட்சி அம்பாளை வழிபட கண் சம்பந்தமான நோய்கள் அகல் கின்றன. இத்தல பாலாம்பிகை குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பாலாரிஷ்ட தோஷத்தை அறவே களைபவள். ஜாதகரீதியாக லக்னத்தை செவ்வாய் பார்த்தால் குழந்தைகள் துறுதுறுவென இருப்பர்; ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால் அவர்களின் சேஷ்டை அடக்க முடியாத அளவு போகும். இத்தகைய குழந்தைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து ஸ்ரீபாலாம்பிகையிடம் சேஷ்டை குறைய வேண்டிக் கொள்ளலாம். இதனால் குழந்தைகளுக்கு தீர்க்காயுளும் கிட்டும். இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தில் பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கலந்து கொண்டு ஈசன், அம்பாள் அருள் பெறுவோம்..
மூன்று நாட்கள் மட்டுமே முழு அபிஜேகம்!

திருக்கழுக்குன்றம் தாழக்கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம். பிற நாட்களில் அம்மனின் பாதத்துக்கே அபிஷேகம் நடைபெறுகிறது. நவராத்திரி இறுதி நாளில் ஒன்று, ஆடிப்பூர நாளில் ஒன்று, பங்குனி உத்திர திருநாளில் ஒன்று என வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டும் அம்பாளுக்கு முழு அபிஷேகம். இந்த அபிஷேக தீர்த்தம் கண் நோய்களை நீக்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை!

பறந்து வந்த கருட சிற்பம்!

நாகர்கோவிலிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலை விலுள்ள ஊர் பறக்கை. ஸ்ரீமதுசூதனப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. இந்தக் கோயிலின் கருடாழ்வார் சிலையை சிற்பிகள் வடிவமைத்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சிற்பக் கூடத்திலிருந்து கருடாழ்வார் பறந்து வந்து இந்தப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துகொண்டார்.

கருடாழ்வார் பறந்து வந்ததால் இந்த ஊர் 'பறக்கை’ என்றானது. இங்குள்ள கருடனை வழிபட நாக தோஷங்கள் அகலும். ஆண்டு தோறும் இங்கே பங்குனி உத்திர திருவிழாவையட்டி, தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. அன்று தெப்பத்தில் விளக்குகள் வைத்துப் பெண்கள் தீபமேற்றி வழிபடுவர். இதனால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடிவரும்; செல்வ வளம் உயரும் என்பது ஐதீகம்.

தொகுப்பு: அ.விஜய் பெரியசுவாமி