நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
தாசர்வ காலமும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் மன்னன்தான் அவன்! நெற்றியில் திருநீற்றுப்பட்டை துலங்க, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்தபடி, 'இந்தத் தேசத்தைக் காப்பது தென்னாடுடைய சிவனார்தான்! நான் வெறும் கருவி மாத்திரமே...’ என்று அமைச்சர்களிடமும் சுற்றத்தாரிடனும் சொல்லிக் கொண்டிருப்பவன். அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில், சிவாலயங்களை எழுப்புவதையே கடமையெனக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

ஆனால் சமீபகாலமாக, அவனுக் குள் ஓர் எண்ணம்... 'ஹரியும் சிவனும் ஒண்ணு’ என்று சொல்லியிருக் கிறார்கள் பெரியோர். அப்படியெனில், ஹரியையும் வணங்குவதுதானே சரியானது என்று நினைத்தான். சிவனடியாராக இருந்தாலும் திருமாலையும் வணங்குவது என முடிவு செய்தான். சைவமும் வைணவமும் தனித்திருக்கலாகாது என நினைத்தபடி, வைணவக் கோயில்களின் திருப்பணிகளுக்கும் நித்தியப்படி பூஜைகளுக்கும் ஏராள மான நிதிகளை வாரி வழங்கினான்.

அந்த மன்னன், தென்காசி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அங்கிருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து தென்காசிக்குமாக அடிக்கடி வந்து செல்வான். மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து, சொக்கேசரைத் தரிசிப்பதில் அப்படியரு ஆனந்தம் அவனுக்கு!

ஆலயம் தேடுவோம்!

ஒருநாள்... மதுரையில் அம்மையையும் அப்பனையும் தரிசித்துவிட்டு, தேரில் ஏறி தென்காசி நோக்கிப் பயணப் பட்டான், மன்னன். குரா மரங்கள் சூழ்ந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தேரை நிறுத்தச் சொன்னான் மன்னன். இறங்கினான். இன்னும் காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டான்... அழகிய, மெல்லிய, இதமான ஓசை எங்கிருந்தோ கேட்டது. அது குழலோசை!

'குழல் வைத்திருப்பவன் கண்ணபிரானாயிற்றே... இங்கு வேணுகானம் கேட்கிறது என்றால்... இது தெய்வக் கட்டளை. பெருமாளுக்கு ஓர் ஆலயம் எழுப்பாத என் குறையைத் தீர்த்து வைக்கிற இடம் இதுதான்’ என்று நினைத்தபடி, பூரித்துப் போனான் மன்னன். குழலோசை கேட்டுக் கொண்டே இருந்தது.

'இதுதான்... இந்த இடம்தான்... திருமாலுக்குக் கோயில் எழுப்பும் கைங்கர்யத்தை நான் செய்ய வேண்டிய இடம் இதுதான்...’ என்று நெகிழ்ந்து நெக்குருகிய மன்னன், அந்த இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். சிவநாமத்தை மட்டுமே உச்சரித்து வந்தவன், அப்போது அந்தக் கணத்தில் சிவநாமத்தைச் சொல்லிவிட்டு, நாராயணனின் திவ்விய நாமத்தையும் உச்சரித்தான்.

ஆலயம் தேடுவோம்!

உடனே அமைச்சர்களை அழைத்து, விவரங்களைச் சொன்னான். அதையடுத்து, அந்த இடத்தில் அழகிய ஆலயத்தை உருவாக்கும் பணிகள் மளமளவென நடந்தன. குழலோசை கேட்டு நிறுத்திய இடம் என்பதால், மூலவராக ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி விக்கிரகத்தை நிறுவி, பிரதிஷ்டை செய்தான்.

இதோ... பாமா ருக்மிணி சமேதராக ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி இன்றைக்கும் அங்கிருந்தபடி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஊர்... குராயூர். அந்த மன்னன்... வென்று மாலையிட்ட வீரபாண்டிய மன்னன்.

மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கள்ளிக்குடி. அங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. பயணித்தால் குராயூரை அடையலாம்.

ஆலயம் தேடுவோம்!

குரா மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் குராயூர் என்றானதாகச் சொல்வர். தவிர, இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்தக் கோயிலை நிறுவிய மன்னன், கோயில் பூஜைகள் குறையற நடக்க வேண்டும் என்பதற்காக, அந்தக் கோயிலைச் சுற்றி ஏராளமான வீடுகளை அமைத்துக் கொடுத்தான். அந்த வீடுகளின் ஒரு பகுதியை அக்ரஹாரமாக்கி, அங்கே நிலமும் பொருளும், பொன்னும் மணியும் கொடுத்து, 99 அந்தணக் குடும்பங்களை குடியிருக்கச் செய்தான். நூறு எனும் எண்ணிக்கைக்கு ஒன்றே ஒன்று குறைவாக இருந்ததால், குறையூர் என்று சொல்லப்பட்டு, பிறகு குராவூர் என்றானதாகச் சொல்கின்றனர்.

கோயிலின் அழகையும் அதன் சாந்நித்தியத்தையும் உணர்ந்தபோது சிலிர்ப்புதான் ஏற்பட்டது. இந்த ஆலயத்தில் மிகப்பெரிய சக்தி ஒன்று உறைந்திருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லியது.

கோயிலின் பின்னே பிராகாரத்தை அடுத்துள்ள நந்தவனத்தில் புளியமரம் ஒன்று உள்ளது. இந்தப் புளியமரம், காய்க்காத கனி தராத மரம் என்றும், ஆழ்வார்திருநகரி தலத்துக்கு இணையானது இந்த மரம் என்றும் சொல்கிறார்கள் வைணவ அன்பர்கள். இந்த ஆலயத்தின் மகத்துவத்தை உணர்ந்த வென்று மான் கொண்ட பூதாள மார்த்தாண்டன் எனும் மன்னன், இந்தக் கோயிலுக்கு வந்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளான் என்கிறது ஸ்தல வரலாறு.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

குழலூதும் கோபாலன் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தில், பிறந்து மூன்று மாதமான குழந்தையை எடுத்து வந்து, சந்நிதிக்கு முன்னே வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால்... குழந்தை ஆரோக்கியமாகவும் ஞானத்துடனும் வளரும் என்பது ஐதீகம்!

ஒருகாலத்தில், இந்த குராயூர் பகுதியில் கமண்டல நதி ஓடியதாம்! அந்த நதி காசியில் கங்கை பாய்ந்தோடுவது போல, தெற்கில் இருந்து வடக்காகப் பாய்ந்தோடும் என்பதால் மிகப்பெரிய புண்ணிய நதியாகப் போற்றப்பட்டதாம்! அதேபோல், வடக்குப் பார்த்த இந்தக் கோயிலும், நம் பிறவிக் கடனையெல்லாம் நிவர்த்தி செய்தருளும் தலம் என்று சொல்லிச் சிலாகிக்கிறார், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி கைங்கர்ய சேவை சபையின் டிரஸ்டிகளில் ஒருவரான வெங்கட்ராமன்.  

கோயிலுக்கு அருகில் நதிக்கரை இருந்ததாகச் சொல்லும் இடத்தில், திருப்பாதங்கள் அமைப்பு ஒன்று உள்ளது. இதை அழகர் பாதம் என்பார்கள். கமண்டல நதியில் நீராடி, அழகர் பாதத்துக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால், அந்த வருடம்... மழை வெளுத்து வாங்கும்; காடு - கரையெல்லாம் நிறைந்திருக்கும்! இப்போது கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம்... கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் நடந்து, சுமார் நூறு வருடங்களாகி விட்ட நிலையில், வழிபாடுகளும் பூஜைகளும் இன்றி நித்தியப்படி பூஜைக்காகக் காத்திருக்கிறார், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி!

கோபுரம் இல்லாத நுழைவாயில். அந்தக் கதவுகள் கூட எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்பது போல் இருக்கிறது. சில வருடங் களுக்கு முன்பு வரை, கோயிலுக்கு மதில் கூட இல்லை. ஒருகாலத்தில், உத்ஸவங்களும் திருவிழாக்களுமாக அமர்க்களப்பட்ட இந்தக் கோயிலின் உத்ஸவ மூர்த்தங்கள் திருடு போய்விட்டன. அவை பல வருடங்களுக்குப் பின்னர் திரும்பக் கிடைக்கப் பெற்றன (இதுகுறித்து அப்போது ஆனந்த விகடனில் எழுதப்பட்ட கட்டுரை, கடந்த 14.12.2011 தேதியிட்ட ஆனந்த விகடனில் பொக்கிஷம் பகுதியில் வெளியாகி உள்ளது).

ஆலயம் தேடுவோம்!

வேணுகானம் கேட்ட கோயிலில், வேத மந்திர கோஷங்கள் கேட்க வேண்டாமா? ஸ்ரீபாமா ஸ்ரீருக்மிணி சமேதராகக் காட்சி தரும் ஸ்ரீவேணு கோபால ஸ்வாமிக்கு நித்தியப்படி பூஜைகளும் அலங்காரமும் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டாமா?

சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக, கும்பாபிஷேகம் நடைபெறாத ஆலயத்துக்கு திருப்பணிகளும் கும்பாபிஷேகமும் நடைபெற்று, பொலி வுடன் திகழ வேண்டாமா?

ஒரு கை வெண்ணெய் தந்து, மனமுருகி வேண்டிக் கொண்டாலே, நம்மை வாழ்வாங்கு வாழவைத்து அருள்பவன், கண்ணபிரான். அவன் குடிகொண்டிருக்கும் திருவிடத்துக்கு நம்மால் இயன்றதைச் செய்தால், நம்மையும் நம் சந்ததியினரையும் ஏழேழு ஜென்மத்துக்கும் குறையன்றுமில்லாமல் வாழவைப்பான், அந்த மறைமூர்த்திக் கண்ணன்!

படங்கள்: பா.காளிமுத்து