Published:Updated:

மதிப்புக்குரிய வாசகர்களே!

மதிப்புக்குரிய வாசகர்களே!

மதிப்புக்குரிய வாசகர்களே!

மதிப்புக்குரிய வாசகர்களே!

Published:Updated:
மதிப்புக்குரிய வாசகர்களே!
மதிப்புக்குரிய வாசகர்களே!

ணக்கம். உங்கள் சக்தி விகடனுக்கு இப்போது ஒன்பது வயது.

தரையில் நெஞ்சு பட நீந்தி, மண்டியிட்டுத் தவழ்ந்து, நடைவண்டி பிடித்துத் தளர் நடை பயின்று... என, உங்கள் சக்தி விகடனின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் ஆசையோடு பார்த்து ரசித்து ஊக்குவித்து வந்திருக்கும் ஆன்மிக உள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மேலும் சில மகிழ்ச்சியான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

தொலைபேசி, இ-மெயில், கடிதம் உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு முழுக்கத் தொடர்பு கொண்டு சக்தி விகடன் வாசகர்களுடன் கலந்து பேசியதில், அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தெரிவித்த கருத்து, 'சக்தி விகடன் இதழ் அனைத்து அம்சங்களையும் குறைவறக் கொண்டு, பூரணமாகத் திகழ்கிறது' என்பதுதான். அதேநேரம், மிகச் சில வாசகர்கள் அக்கறையோடு சொன்ன விமர்சனங்களையும் நாங்கள் சிரமேற்கொண்டோம். ''சக்தி விகடனில் கோயில்கள் பற்றிய தகவல்கள் மிகப் பயனுள்ளவை. வடிவமைப்பும் தெய்வீகப் படங்களும் சிலிர்ப்பூட்டுபவை. எனினும், மிக எளிய நடையில் ஆன்மிக

##~##
இலக்கியத் தகவல்களை ஒரு கதை போலத் தொகுத்துத் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே'' என்றார்கள் அவர்கள். உடனே செயலில் இறங்கினோம். ஒன்றல்ல, 'நச்'சென்று நான்கு புதிய தொடர்களை இந்த இதழில் தொடங்கியுள்ளோம்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்: அகத்தியர், நக்கீரரில் தொடங்கி, திருமுருக கிருபானந்தவாரியார் வரையிலும், சேயோன் முருகனின் அடியார்கள் கதைத் தொடர் இது.

வானம் தொடுவோம்: ஆன்மிகம் என்பது பழம் பஞ்சாங்கமல்ல, அது இன்றைய கணினி உலக இளைஞர்களையும் மனநிறைவான வகையில் கைதூக்கி விடவல்லது என்பதைத் தக்க உதாரணக் கதைகளோடு விளக்கும் கட்டுரைத் தொடர் இது.

ஞானப் பொக்கிஷம்: நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், ஐங்குறுநூறு, கல்லாடம்... இப்படி, நம்மிடம் உள்ள நற்றமிழ் ஞானப் பொக்கிஷப் பெட்டிகளைத் திறந்து அறிவு விருந்து படைத்து, பெரியவர்கள், இளைஞர்கள் அனைவரையும் ஒருங்கே கவர்ந்திழுக்கப்போகும் அற்புதத் தொடர் இது.

மதிப்புக்குரிய வாசகர்களே!

கதை சொல்லும் கோயில்கள்: இன்றைய ஃபாஸ்ட் புட் யுகத்தில், கோயில் வழிபாட்டையும் நாம் ஃபாஸ்ட்டாகவே சடசடவென முடித்துக்கொண்டு, வெளியேறி விடுகிறோம். அப்படியல்லாது, நம்மை நிதானமாகக் கைப்பிடித்துக் கூட்டிச் சென்று, ஒவ்வொரு பிரசித்தி பெற்ற கோயிலிலும் நிறுத்தி, அங்குள்ள ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் ஒரு குழந்தைக்கும் புரிவது போன்று எளிமையாக ஒரு கதை போல் விவரித்துச் சொல்லும் கட்டுரைத் தொடர் இது.

என்ன வாசகர்களே, புத்துணர்ச்சியோடு இந்த இதழைப் புரட்டத் தொடங்கிவிட்டீர்களா? ஒவ்வொரு அம்சத்தையும் படியுங்கள்; ரசியுங்கள். உங்களின் மேலான கருத்துக்களைத் தயங்காமல் உடனுக்குடன் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாருங்கள், ஆன்மிகப் பெருங்கடலுக்குள் நீந்திக் களிப்போம்!

- ஆசிரியர்