Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
யோத்தி மட்டுமல்ல, அண்ட பகிரண்டமும் ஆனந்தத்தில் திளைத்தது. புனித பாயஸத்தின் பலனாக... தசரதனின் தேவியர் மூவரும் நான்கு குழந்தைகளைப் பெற்றனர்.

மூத்தவள் கோசலைக்கு புனர்வஸு நட்சத்திரத்தில் ஸ்ரீராமனும், கைகேயி யிக்கு புஷ்ய நட்சத்திரத்தில் பரதனும், சுமித்ரைக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் லட்சுமண-சத்ருக்னனும் பிறந்தார்கள்.

ஸ்ரீவிஷ்ணுவின் நாலிலொரு அம்ச மாக லட்சுமணனும், எட்டிலொரு அம்சமாக பரத- சத்ருக்னனும் அவதரித் தார்களாம். அந்த மகிழ்ச்சியில் தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இன்னிசை கீதம் பாடினர், அப்சரஸ்கள் ஆனந்த நடனமாடினார்கள். வானமோ பூமாரிப் பொழிந்தது!

அனைத்தையும் கண்டு பஞ்சுப் பாதங்கள் உதைத்து, பிஞ்சுக் கைகள் அசைத்து, பொக்கைவாய் காட்டி... அன்றலர்ந்த செந்தாமரையாய் மலர்ந்து சிரித்தது ஸ்ரீராமக் குழந்தை! தாமரைப் பூவை பங்கஜம் என்பார்கள்.

பங்கஜம் என்றால் சேற்றில் முளைத்தது என்று அர்த்தம். ஆனால் இந்தத் தாமரை அப்படியா? இது, பாற்கடல் தாமரை ஆயிற்றே! அது, அயோத்தியில் மலர்ந்ததால் அந்த நகரமே தேவலோகம் ஆனது!

ஸ்ரீராம ஜனனத்தை சிலாகிக்கும் சான்றோர் ஒரு சுவாரஸ்யத்தை விவரிப்பார்கள்.

அயோத்தி அரண்மனையில் விண்ணோரும் மண்ணோரும் கூடித் திளைத்திருக்க... லட்சுமணக் குழந்தை மட்டும் ஓயாது அழுததாம். குழந்தைக்கு பசியெடுப்பதால் அழுகிறதா அல்லது தொட்டில் விரிப்பு குழந்தையின் பூமேனியை அழுத்துகிறதா... என்றெல்லாம் பார்த்துவிட்டார்கள். ம்ஹூம்... காரணம் பிடிபடவில்லை.

வசிஷ்டருக்குள் ஓர் எண்ணம் உந்தித்தள்ள, சட்டென்று எழுந்து அருகில் வந்தார். லட்மணக் குழந்தையின் தொட்டிலை, ஸ்ரீராமக் குழந்தையின் தொட்டிலுக்கருகில் நகர்த்தி வைத்தார். அழுகை குறைந்தது; ஆனாலும் சிணுங்கலாகத் தொடர்ந்தது. வசிஷ்டர், சட்டென்று குழந்தையைத் தூக்கி ஸ்ரீராமனின் தொட்டிலில், அவனுக்கு அருகிலேயே கிடத்தினாராம். இப்போது குழந்தையிடம் வாய்கொள்ளாச் சிரிப்பு! ராமண்ணாவின் மீதான பாசத்தை லட்சுமணன் அப்போதே உணர்த்தியதாகச் சிலாகிப்பார்கள் பெரியோர்கள்.

இப்படி பல சுவாரஸ்யங்கள் உண்டு ஸ்ரீராமனின் கதையில். அதை முழுமையாக விவரிப்பது எளிதன்று. கவிச்சக்ரவர்த்தி கம்பன் சொல்கிறார்...

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்(று) ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையல் உற் றேன் மற்(று) இக்
காசில் கொற்றத்(து) இராமன் கதை, அரோ!

- அதாவது, மலைபோல் அலை வந்து மோதுகின்ற பாற்கடலுக்குள் இறங்கி, ஒரு பூனை பாலை முற்றும் பருகிவிட நினைப்பது போலத்தான், ஸ்ரீராமனின் கதையை பாட ஆரம்பிப்பதும் என்கிறார்.

எனினும், ஸ்ரீராம காவியத்தை நித்தமும் நினைக்க வேண்டும், அதில் ஒரு வார்த்தையை யாவது நம் வாய் உச்சரிக்க வேண்டும், தினமும் அவன் அடியற்றி அருள் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில், சிறியதும் பெரியதுமாக ஆன்றோர் பலரும் பலவாறு பாடி வைத்துள்ளனர் ஸ்ரீராமனின் கதையை.  அவற்றுள் ஏக ஸ்லோக ராமாயணமும் உண்டு!

ஆதிகவியாகிய வால்மீகி 24,000 ஸ்லோகங்களில் பாடிய இந்த மகா காவியத்தை, கவி ஒருவர் ஒரே ஸ்லோகமாகப் பாடிவிட்டார். அதாவது, புண்ணிய ராமாயணத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்பதை மட்டும் வைத்துக்கொண்டு, சம்ஸ்கிருத மொழியை லாகவமாகக் கையாண்டு பாடியுள்ளார் அந்த ஸ்லோகத்தை. அற்புதமான அந்த ஸ்லோக விளங்கங்களும், அது விவரிக்கும் ராமாயணத்தின் ஒன்பது காட்சிகளும் இங்கே உங்களுக்காக!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!