Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திரை- கன்னி, துலாம் என்கிற இரண்டு ராசிகளில் சம பங்காக இடம்பிடித்த நட்சத்திரம். முழு நிலவுடன் இந்த நட்சத்திரம் இணைந்த மாதம் சித்திரை மாதம். நிலவுடன் அதாவது சந்திரனுடன் பௌர்ணமியில் இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் மாதங்களுக்கு சூட்டப்பட்டிருக்கின்றன.

ஜோதிடம் (அஸ்ட்ரானமி) மாதங்களுக்கு பெயர் சூட்டியது. ஆண்டின் துவக்க மாதத்துக்கு சித்ரா நட்சத்திரத்தின் பெயர் இருப்பது அதன் சிறப்பு. சித்ரா பௌர்ணமியில் சித்திரகுப்த விரதம் உண்டு. முதல் விரதமும் சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பமாகும். சித்திரையின் ஒரு பகுதியில் 'ரிதம்’; மறு பகுதியில் ஸத்யம்

பரவியிருக்கும். மனம் உண்மையை ஏற்பது- ரிதம்; சொல் உண்மையைத் தழுவுவது ஸத்யம். இப்படியரு விசித்திரம் இருப்பது இதற்கு மட்டும்தான்.

காலகஞ்ஜர்கள் விண்ணுலகம் செல்ல வேள்வியை ஆரம்பித்தனர். அது, விசித்ரமாக... ஆச்சரியப்படும்படியாக அமைந்ததால், அதற்கு 'சித்திரா’ என்ற பெயர் வந்ததாம். (ஏஷாவை சித்ரா நமேதி) ஸாங்கிரஹணி என்ற வேள்வியும் அந்த பெயரைத் தாங்கி நிற்கிறது என்கிறது வேதம் (சித்ரா நக்ஷத்ரம் பவதி. சித்ரம் வா ஏதத் கர்ம). வேள்வியைத் துவக்கும் பெருமை அதற்கு உண்டு. நட்சத்திரத்துடன் இணைந்த காலம், நமது முயற்சியைத் துவக்கப் பயன்பட்டது (நக்ஷத்ரேணயுக்த: கால:). ஜோதிடம் (அஸ்ட்ரானமி), முஹுர்த்த சாஸ்திரத்தில் நட்சத்திரத்தின் பங்கை சிறப்பாக எண்ணும். பிற்பாடு விளைந்த... தனி மனிதனின் விளைவுகளை விளக்கும் ஜோதிடத்தில் (அஸ்ட்ராலஜி) அதைச் சேர்த்தார்கள் என்பது பொய்யாகாது.

சித்திரா நட்சத்திரத்தின் ஒரு பகுதிக்கு தேவதை - த்வஷ்டா. அவனுக்கு விச்வகர்மா என்ற பெயரும் உண்டு. அவன் சிற்பக் கலையில் வல்லவன்; தேவலோக தச்சனாகவும் பெருமை பெற்றவன். மறு பகுதிக்கு தேவதை- இந்திரன். தோன்றும் உயிரினங்களுக்கு வடிவம் அமைப்பவன் 'த்வஷ்டா’ (த்வஷ்டா ரூபாணிபிம் சது); அவர்களின் உடல், உள்ளம் இரண்டுக்கும் பலம் அளிப்பவன் இந்திரன் (இந்திரோமே பலே சீரித:). இந்தப் பெருமையையும் சித்திரை நட்சத்திரம் பெற்றிருக்கிறது.

##~##
உலகத்தின் ஆன்மாவான சூரியன் அதாவது நவக்கிரக நாயகன் சித்திரை மாதத்தில் உச்சம் பெற்றுத் திகழ்வான் (சூரிய ஆன்மா ஜகத: தஸ்துஷ: ச). கன்னி - துலாம் இரண்டு ராசிகளின் அதிபதிகளான புதனும் சுக்கிரனும் பலனைப் பகிர்ந்தளிப்பர். பகுத்தறிவும் பளிச்சிடும்; படாடோபமும் வெளிப்படும். அம்சகத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய நால்வரின் தொடர்பு இருக்கும். சூரியன் செல்வாக்கை அளிப்பான். புதன் சிந்தனை வளத்தைப் பெருக்குவான். சுக்கிரன் செல்வத்தை நிறைவு செய்வான். செவ்வாய் உழைப்புக்கு ஊக்கம் அளிப்பான். கிரகங்களின் சுழற்சியில் இந்த நால்வரும் பலமாக இருந்தால், நல்ல விளைவுகளை எளிதாகப் பெற்றுவிடலாம். மாறாக அமைந்தால் விகிதாசாரப்படி பலனில் ஏற்றத்தாழ்வை சந்திக்க நேரிடும்.

நால்வரும் அனுகூலமாக அமைவது அரிது. நல்லதும் கெட்டதும் இணைந்த பலனைச் சந்திப்பதில் சுணக்கம் ஏற்படாது. 'அறத்தை நிலைநாட்ட, எங்கள் குலத்தில் தோன்றும் குழந்தைச் செல்வங்கள் லட்சணத்துடனும் வீரத்துடனும் அமைய சித்ரா நட்சத்திரத்தோடு இணைந்த த்வஷ்டா அருள வேண்டும். மறு பகுதி யுடன் இணைந்த இந்திரன், உடல் வளத்தைப் பெருக்கி உள்ளத் தூய்மையை அளிக்க வேண்டும்’ என்ற வேண்டுகோள் வேதத்தில் உண்டு (த்வஷ்டா நக்ஷத்திரம்...). 'சித்திரா நட்சத்திர தேவதை எங்களது விருப்பங்கள் அத்தனையிலும் நிறைவை அளிக்க வேண்டும்’ (தன்னஷத்திரம் பூரிதா அஸ்து மஹ்யம்) என்ற வேண்டுகோளும் உண்டு.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது செவ்வாய் தசை.  ஏழு வருடங்கள் அவனது ஆதிக்கம் இருக்கும். அவிட்டம், மிருகசீர்ஷம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் இந்த தசை பொருந்தும். இந்த மூன்று நட்சத்திரங்களும் இரண்டு ராசிகளில் சம பங்காகப் பரவிய நட்சத்திரங்கள். பலனை ஏற்பதிலும் இரண்டு ராசிகளுக்கும் பங்கு இருக்கும். 'அர்ததபம்’ என்று இவர்களுக்குத் தனிப்பெருமை உண்டு. இந்த மூன்றும் சிரோ ரஜ்ஜுவில் அடங்கும் என்பார்கள், பொருத்தத்தை விளக்குபவர்கள். உடல் உறுப்புகளில் உயர்ந்த பகுதி சிரஸ்ஸு (உத்தமாங்கம் சிர:சீர்ஷம்). இயக்கும் பகுதி (மஸ்திஷ்கம்) சிரஸ்ஸில் அமைந்துள்ளதால் அதற்கு உயர்வு வந்தது. செவ்வாய் சுறுசுறுப்புடன் இயங்க வைப்பான். ரஜோ குணமும் தமோ குணமும் அவனிடம் கலந்திருப்பதால், போரில் நேர்மையோடு அர்ஜுனன் போல் வெற்றி வாகை சூடுவான். கோணல் வழியில் அச்வத்தாமாவைப் போல்

செயல்பட்டு துயரத்தையும் சந்திப்பான். சட்டதிட்டங்களை மதித்து நேர்மையாகச் செயல்படு வதைத் தவிர்த்து, அதில் இருக்கும் ஓட்டையை உற்றுநோக்கிப் பயன் படுத்தும் விபரீத எண்ணம் செவ்வா யின் பங்கில் அரங்கேறும்.

'சித்திரை அப்பன் தெருவிலே’ - என்ற சொல் வழக்கு உண்டு. 'சித்திரா நட்சத்திர ஜனன சாந்தி’ என்று குறிப்பிட்டு பரிகாரம் செய்யப் பரிந்துரைக்கும் சாந்திரத்னாகரம். தகப்பனாரின் காரக க்ரஹமான சூரியன், துலாத்தில் நீசம் பெற்று, அங்கு சந்திரனுடன் இணைவதால், மனபலமும் குன்றி சிந்தனை மாற்றத்தில் தகப்பனாரின் துயரத்துக்கு தனயன் காரணமாகலாம் என்கிற விளக்கத்தை ஒட்டுமொத்தமாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவனில் சேர்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. 'சூரியனும் செவ்வாயும் சுக்கிரனும் அனுகூலமாக இருந்தால் செல்வச் சீமானாகப் பெயரும் புகழும் பெற்று விளங்குவான் அவன் தகப்பன்’ என்ற ஜோதிடக் கணிப்பும் வழக்குச் சொல்லைப் பொய்யாக்குகிறது.

கால புருஷனின் வயிறு அதன் கீழ் இருக்கும் பகுதி (வஸ்தி) இவற்றைச் சுட்டிக்காட்டும், கன்னியும் துலாமும். புதனும் சுக்கிரனும் வலுப் பெற்றிருந்தால், உடல் ஆரோக்கியம் உறுதியாக இருக்கும். வெளியே இருந்து திணிக்கப்படும் பிணிகள்... அலர்ஜி போல் உமிழ்ந்து விடும் அவன் உடல்வாகு. வெட்பதட்பங்களைச் சமமாக இருக்கச் செய்யும் சுக்கிரனும் செவ்வாயும் அவனது ஆரோக்கியத்துக்கு பாதுகாவலனாக மாறுவார்கள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

அழகானத் தோற்றம். வசீகரமான கண்கள். வண்ண வண்ண ஆடை- அணிகலன்களில் ஆர்வம். ஆடம்பரப் பொருட்களை ஏற்று மகிழ்வதில் அலாதியான விருப்பம் ஆகிய வற்றை சித்ரா நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம் என்பார் வராஹமிஹிரர்.

வேதம், அதை ஒட்டிய சாஸ்திரம், நீதிநெறிகள், கலைகள் ஆகியவற்றில் தேர்ச்சி, செயல்பாடு அத்தனையும் இருக்கும் என்கிறார் பராசரர். முகத்தின் அழகை நிறைவு செய்வது கண்கள். லட்சணமான கண்களும், பிறரை ஈர்க்கும் அழகும் அவனிடம் இருக்கும் என்கிறது பிருஹத்ஸம்ஹிதை. மனதின் ஆழம் புலப்படாது, சுய மரியாதையைக் கைவிட மாட்டான், பெண்ணாசையில் திளைப்பான், செல்வச் சீமானாக மாறி வாழ்க்கையில் வளம் பெறுவான் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

ஒரு தாரையை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். முதல் பாதத்தில் பிறந்தவன், பிறர் பொருளை தனதாக்கிக் கொள்வான். 2-வதில்- சித்திரக் கலையில் தேர்ச்சி பெற்று பெருமை பெறுவான். 3-வதில் பெண்ணாசையில் பெயரைக் கெடுத்துக்கொள்வான். 4-வதில் கால்களில் பிணி தோன்றி நடப்பது நிலைத்து விடும் என்கிறார் வராஹமிஹிரர்.

முதல் பாதத்தில் பிறந்தவன் குரூரமான செயலில் ஈடுபடுவான், சண்டை சச்சரவை வலுக்கட்டாயமாகத் தோற்றுவிப்பான், சொல் லில் இனிமையும் செயலில் கடுமையும் இருக்கும், பழி- பாபம் ஏற்பதில் வெட்கம் இருக்காது. 2-வதில் பிறந்தவன் தவம் மேற்கொள்வான், துயரத்தில் மனம் தளர மாட்டான், ஏழ்மையைத் தழுவுவான், சொல்லிலும் செயலிலும் இனிமை இருக்கும், எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை இருக்கும். 3-வதில் அறிஞனாகத் திகழ்வான், புகழோடு விளங்குவான், சீமானாக இருப்பான், சிறந்த சிந்தனையாளனாக மாறுவான். 4-வதில் வியாபார நோக்கில் செயல்படுவான், உழைக்காமல் ஊதியத்தை எதிர்பார்ப்பான், பிடிவாதத்தால் காரியம் சாதிப்பான் என்ற மாறுபட்ட பலனை விளக்குகிறது பலசார ஸமுச்சயம்.

முற்பிறவியில் விளைந்த மாறுபட்ட செயல்பாடுகள், வாசனை வடிவில் மனதில் பதிந்திருக்கும். வாசனையுடன் இணைந்த சிந்தனை, மாறுபட்ட எண்ணங்களைத் தோற்றுவிக்கும். நல்ல சிந்தனையும் வாசனை யின் இணைப்பில் திசை மாறிவிடும். தவத்தில் ஆழ்ந்தவர்கள் அருள்வதும் உண்டு, சபிப்பதும் உண்டு. கூடப்பிறப்புகளை எதிர்த்த துரியோ தனன், மாற்றான் கர்ணனுக்கு அடைக்கலம் அளித்தான். எதிரிடையான சிந்தனைகள் ஓர் இடத்திலிருந்து வெளிவருவதற்கு அவனது வாசனையின் தரம் காரணமாகும் என்று ஜோதிடம் சொல்லும். கிரஹங்களின் தரத்தை வைத்து, அவனது வாசனையை வரையறுப்ப தில் இருக்கும். திறமை, துல்லியமான பலனைச் சொல்லிவிடும். மாறுபட்ட பலன்களுக்கு வாசனையே காரணம் என்று வராஹ மிஹிரனின் புதல்வன் பிருதுயசஸ் சொல்வார் (யது பசிதமன்யஜன்மனி...).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மென்மையான நட்சத்திரம் இது. நட்பு, தாம்பத்தியம், ஆடை- அணிகலன்கள், அலங்காரம் (மேக்அப்) மங்கள காரியங்கள் ஆகியவற்றுக்கு சித்திரையின் இணைப்பு சிறப்பைத் தரும் என்கிறார் வராஹமிஹிரர். பூணூல், குடுமிக் கல்யாணம், விரதங்கள், வாகனம், வேள்வி, கல்வி கற்றல், திருமணம், கொடுக்கல் - வாங்கல், பாட்டு, வாத்தியம், நாட்டியம், கலைகள், சிற்பம், ரத்னாபரணம் போன்றவற்றில் சித்திரை நட்சத்திரத்தின் இணைப்பு நல்ல முன்னேற்றத்தைத் தரும் என்கிறார் பராசரர்.

'த்வம் த்வஷ்ட்ரே நம: இம் இந்த்ராய நம:’ என்று சொல்லி வழிபடலாம். ’த்வாஷ்டா நக்ஷத்திரமப்யேதி’ என்ற மந்திரத்தைச் சொல்லி 16 உபசாரங்களைச் செய்ய லாம். 'இந்த்ரோ ராஜா ஜகதோ’ என்கிற மந்திரம் வாயிலாகவும் செயல்படலாம்.

  மந்திரம் தெரியாதவர்கள்,

'பக்த்யா பிரபன்னோஸ்மி தயாநிதே
த்வாம் ப்ரயச்ச மஹ்யம் வரமீப்ஸிதம் சுபம்’

என்று சொல்லி, 16 முறை அடிபணிந்து வணங்கலாம். இரண்டு கைகளால் புஷ்பத்தை அள்ளி எடுத்து, 'சித்ரா நக்ஷத்திர தேவதாயை நம:’ என்று புஷ்பாஞ்சலி செய்யலாம்.

அலைபாயும் மனதை அடக்கி வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அது மனம் சார்ந்த விஷயம்; உடல் சார்ந்த விஷயம் அன்று. கண் இறையுருவத்தைப் பார்ப்பதும், வாய் அவனது நாமத்தை உச்சரிப்பதும், கைகள் புஷ்பங்களை அள்ளி அளிப்பதும், மனதின் ஏகாக்ரதையை சிதறாமல் செய்ய உதவும். புலன்களுக்கு இறைப்பணியில் வேலை கொடுத்து ஒதுக்கி விட்டால், மனம் தன்னிச்சையாகவே தடங்கலின்றி இறையுருவில் ஒன்றிவிடும்.

'மற்ற அலுவல்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு, என்னில் சிந்தனையை நிலைத்து இருக்கும்படி செய்துவிடு’ என்கிறான் கண்ணன் (அனன்யா: சிந்தயந்தோ...). புலன்கள் சொல்வதை மனம் கேட்டுச் செயல்படும். ஆனால், மனதின் சொல்லுக்குப் புலன்கள் கட்டுப்பட வேண்டும். அந்தக் கட்டுப்பாடு நிலைத்திருக்க, செயல் புலன்களுக்கு வழிபாட்டில் ஈடுபாட்டை நடைமுறைப்படுத்துகிறோம்.

- வழிபடுவோம்