Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
'சி
ன்ன வயசுலேருந்தே ஆன்மிகத்துலயும் அரசியல்லயும் ரொம்பவே ஈடுபாடு உண்டு எனக்கு. கோயிலுக்குப் போறதும், வீட்ல பூஜை பண்றதும், பண்டிகை- திருவிழான்னா உறவுகளைக் கூட்டி உற்சாகமா கொண்டாடறதுமா இருக்கிறவ நான். தொடர்ந்து எங்க கிராமத்துல நான் நல்ல பேர் எடுத்திருந்தாலும், அரசியல்ல மட்டும் ஜெயிக்க முடியாமல் ஒரு வெற்றிடம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த வெற்றிடத்தை நிரப்பி, எனக்கும் என் குடும்பத்துக்கும் வெற்றியைத் தந்தது திருப்பட்டூர் பிரம்மாதான்!'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் செல்வமணி கந்தசாமி.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில் உள்ளது இறையூர் எனும் கிராமம். இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார் செல்வமணி.

''படைப்புத் தொழிலையே இழந்துட்டுத் தவிச்ச பிரம்மா வுக்கு திரும்பவும் வரம் தந்து, இழந்த பதவியைத் தந்தார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர். அந்த பிரம்மாதான், எனக்கு இந்தப் பதவியையும் அதிகாரத்தையும் தந்திருக்கார். எனது இந்தப் பிறவியின் கொடுப்பினை இது!'' என்று செல்வமணி, தொடர்ந்தார்...

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''பஞ்சாயத்துத் தேர்தல் நடக்கறப்பெல்லாம் வேட்பாளரா நிக்கறதும், ஆறு பத்து ஓட்டுக்கள்னு சொற்ப வித்தியாசத்துல தோற்கறதுமாவே இருந்துச்சு. எந்தக் கோயிலுக்குப் போனாலும், தேர்தல்ல ஜெயிக்கணும்னுதான் வேண்டிக்குவோம். வக்கீலா இருக்கிற எங்க மகனும் அப்படியே வேண்டிக்கிட்டான். ஒரு கட்டத்துல, இப்படிப் பிரார்த்தனை பண்றதுக்காகவே கோயில் கோயிலா போக ஆரம்பிச்சோம். அப்பத்தான்... 'திருச்சி - சிறுகனூருக்குப் பக்கத்துல இருக்கற திருப்பட்டூர் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. உங்க தலையெழுத்தே மாறிடும்’னு யாரோ சொன்னாங்க.

சரி... இந்தத் திருப்பட்டூருக்கும்தான் ஒரு நடை போய் சாமி கும்பிட்டு வந்துடுவோம்னு நினைச்சுக்கிட்டே போனோம். அங்கே... முத்து முத்தா ரெண்டு கோயிலுங்க. ரெண்டுமே ரெண்டு கண்கள் மாதிரி அத்தனைச் சிறப்பு! முதல் முறை, தரிசனம் பண்ணிட்டுத் திரும்பியதும், மனசுல அப்படியரு நிம்மதி.

அப்புறம், அடுத்தடுத்துப் போகணும், தரிசனம் செய்யணும்னு உள்ளே ஏதோ ஒண்ணு, என்னை உசுப்பிவிட்டுகிட்டே இருந்துது. அப்படித்தான் ஒருநாள், கோயி லுக்குக் கிளம்பலாம்னு வீட்டு வாசல் வரை வந்துட்டோம்... சட்டுனு ஒரு யோசனை, ஜாதகம் எடுத்துட்டுப் போய் பிரம்மா காலடியில வைக்கலாமேன்னு! அதன்படியே எங்க ஜாதகத்தை எடுத்துட்டுப் போய், பிரம்மாவோட பாதத்துல வைச்சு, வேண்டிக்கிட்டோம். அந்த நிமிஷம்... என் தலையெழுத்தையே மாற்றி எழுதினார் பிரம்மான்னுதான் சொல்லணும்'' என நெக்குருகப் பேசுகிறார் செல்வமணி.

உண்மைதான். திருப்பட்டூர் தலத்துக்கு வந்து, அங்கே ஸ்ரீபிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் அன்பர்கள்,  பிரார்த்தனை நிறைவேறியதும், ஸ்ரீவிசாலாட்சி  - ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீவியாக்ர பாதர் திருச்சமாதி, ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரி - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா மற்றும் ஸ்ரீபதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு வஸ்திரம் சார்த்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

கண்ணீரும் கம்பலையுமாக, மனதுள் துக்கத்துடனும் ஏக்கத்துடனும் பிரார்த்தனை செய்கிற பக்தர்களின் அனைத்துக் குறைக ளையும் தீர்த்து வைத்தருளும் திருத்தலம் இது! இங்கே... கண்ணீருடன் வந்து சென்றவர்கள், அடுத்த முறை சந்தோஷத்துடன் வருகின்றனர்.

துக்கம் பொங்க வந்து வேண்டிக் கொண்ட வர்கள், கவலையின்றி வாழ்கின்றனர். நிறைவேறாத ஏக்கங்களுடன் கோரிக்கை விடுத்தவர்கள், நிறைவேறிய பெருமையுடனும் குதூகலத்துடனும் வந்து செல்கின்றனர்.

''போன வருஷம் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தப்ப, மனசுக்குள்ளே ஒரு நாளைக்கு நூறு முறையாவது திருப்பட்டூர் பிரம்மாவை நினைச்சு வேண்டிக்கிட்டே இருந்திருப்பேன். கிட்டத்தட்ட இதுவரை மூணு முறை தேர்தல்ல நின்னு, மூணு முறையும் தோத்துப் போனவ நான். இந்த முறை தேர்தல் ரிசல்ட்ல வெற்றின்னு அறிவிச்சதும், நான் முதல்ல ஓடினது திருப்பட்டூருக்குத்தான். அந்த வெற்றி, நன்றி எல்லாமே ஸ்ரீபிரம்மாவுக்குத்தான்!'' என்று வார்த்தைக்கு வார்த்தை திருப்பட்டூரைப் புகழ்ந்து போற்றுகிறார் செல்வமணி.

''இங்கே... பிரதோஷத்தன்னிக்கு தரிசனம் பண்றது மிகப் பெரிய புண்ணியமாம். அந்த பாக்கியத்தை, திருப்பட்டூர் பிரம்மாதான் நிறைவேத்திக் கொடுக்கணும்'' என்று கையெடுத்துக் கும்பிட்டு வேண்டிக் கொள் கிறார் செல்வமணி.

இழந்த படைத்தல் பதவியை ஸ்ரீபிரம்மாவுக்கு வழங்கி அருளிய தலம்.  இன்று வரை... சிவ பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தருள்கிறார் ஸ்ரீபிரம்மதேவர். நம் தலையெழுத்தை மாற்றி எழுத, ஸ்ரீபிரம்மா காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள், வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பட்டூருக்கு  சென்று வருவோம்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக் என்.ஜி.மணிகண்டன்