வேத நாயகனாக சிவனைப் போற்றுவார்கள் சிவபக்தர்கள். வேதங்கள் சிவனாரால் ஆதியில் அருளப்பட்டன. மரங்களாகவும், மலைகளாகவும் அமைந்து வேதங்கள் வழிபட்ட சிவத்தலங்களும் உண்டு. அங்கெல்லாம் வேதபுரீஸ்வரர் எனும் நாமத்துடன் எழுந்தருள்வார் இறைவன். சிவனாரின் மூச்சுக் காற்றாகவும், பாதுகைகளாகவும் வேதங்கள் திகழ்வதாக விவரிக்கின்றன புராணங்கள். இதுகுறித்த சில தகவல்களை அறிவோம்.

வேத மலைகள்...

நான்கு வேதங்களும் மலைகளாக நின்றிருக்கும் தலம் வேதகிரி எனப்படும் திருக்கழுக்குன்றமாகும். இதன் நான்கு சிகரங்களும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு வேதமலையின் மீதும் ஒவ்வொரு யுகத்தில் பெருமான் வீற்றிருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. இப்போது அதர்வண வேதத்தின் உச்சியில் பெருமான் எழுந்தருளியுள்ளார் என்பர். இந்தத் தலத்துக்கு வேதாசலம் என்றும் பெயர் உண்டு.

வேத வனம்...

நான்கு வேதங்களும் மனித வடிவில் சிவனைத் துதித்து வழிபட்டதலம் திருமறைக்காடு. மூடப்பட்டிருந்த கோயில் கதவுகள் திறக்க திருநாவுக்கரசர் பதிகம் பாடியருளியது இந்தத் தலத்தில்தான். திருஞான சம்பந்தர், 'சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்...’ என்று பாடி, மீண்டும் கதவுகள் திறக்கவும் மூடவும் செய்தார். இந்தத் திருத்தலத்தை வேத வனம் என்றும் போற்றுவர்.

வேத மான்...

சிவபெருமானின் திருக்கரத்திலுள்ள மான், வேதத்தின் குறியீடு ஆகும். அது எப்போதும் சிவபெருமானின் திருச்செவியில் வேதத்தை ஓதிக்கொண்டே இருக்கிறது. தமிழ் வேதமும், 'வேதம் மான்மறியே’ எனப் போற்றுகிறது. சிவபெருமான் கங்காள மூர்த்தியாகவும் பிட்சாடராகவும் விளங்கும்போது இந்த மானும் அவரைத் தொடர்ந்து செல்கிறது. ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக அவர் திகழும்போது, அவருடைய பீடத்தின் கீழ் படுத்துள்ளது. ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசோமாஸ்கந்தர் திருவடிவங்களில் இறைவனாரின் இடது திருக்கரத்தில், தாவி நிற்கும் கோலத்தில் உள்ளது.

வேதப் பாதுகை...

. சிவபெருமானின் திருவடிகளில் விளங்கும் பாதுகைகள் வேதங்களாகும். சிவபெருமான் திருமணக்கோலம் கொண்டபோது, தேவர்கள் வேதமாகிய பாதுகைகளை அவருக்கு அளித்ததாக சிவ மகா புராணம் சொல்கிறது. அந்தப் பாதுகைகளை திருமணம் முடிந்ததும் திருத்துருத்தி (குத்தாலம்) ஆலயத்தின் உத்தால மரத்தின் கீழ் விட்டுச் சென்றார் என்றும் கூறுவர். இதை நினைவுறுத்தும் விதமாக, குத்தாலம் எனப் படும் திருத்துருத்தி தலத்தின், சொன்னவாறு அறிவார் ஆலயத்தில் உத்தால மரத்தின் அடியில் பாதுகைகள் அமைக்கப்பட்டுள்ளன..
சிவபெருமானின் திருவடிகள் வேதங்கள் என்றும் போற்றுவர். திருநாவுக்கரசர், 'ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன... ஐயாறன் அடித்தலமே’ என்று பாடுகின்றார்.

வேத நந்தி...

ஒருமுறை வேதங்கள் நான்கும் பெரிய வெள்ளைக் காளையாகி சிவபெருமானைத் தாங்கின. இதனை 'வேதவெள்விடை’ என்று தேவாரம் குறிப்பிடுகிறது.

வேதக் குதிரைகள்...

திரிபுர தகனம் செய்யப் புகுந்த இறைவனுக்கு ஒப்பற்ற தேரை செய்து கொடுத்தனர் தேவர்கள். அதற்கு நான்கு வேதங்களுமே குதிரைகளாக இருந்தன. 'குன்றவில் ஏந்தி வேதப்புரவித் தேர்மிசை நின்றவன்...’ எனும் பாடல்வரி இதை உணர்த்துகிறது.

வேத மரங்கள்...

வேதாரண்யம் எனும் தலத்தில் நான்கு வேதங்களும் தல மரங்களாக உள்ளன. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு மரம் தல மரமாக உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாமரமும், திருக்குற்றாலம் தலத்திலுள்ள பலா மரமும் வேதத்தின் வடிவம் என்கின்றன புராணங்கள்.

வேதச் சிலம்பு...

காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் ஒன்று மறைநூபுரம் ஆகும். இந்தத் தலத்தில், யுக முடிவில் வேதங்கள் வழிபட்டுச் சிவபெருமானுக்கு காற்சிலம்பாயினவாம். சிவபெருமான், தமது தூக்கிய திருவடியை அசைத்து சிலம்பொலி மூலம் பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்த தலம் இது என்பார்கள்.

வேத வீணை...

வேதத்தை விரித்தோதும் ஆலமர் செல்வனான சிவபெருமானின் கரத்திலுள்ள வீணையும் வேத வீணை என்றே அழைக்கப் படுகிறது. இது வேதத்திலுள்ள சுரங்களை இனிமையாகப் பொழிவதாகும். தக்க யாகப் பரணியில் வேத வீணையைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.

- பூசை. ஆட்சிலிங்கம்