Published:Updated:

9 ஒப்பில்லா

9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

9 ஒப்பில்லா

9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

Published:Updated:

அட்டையிலும், இங்கும் பிரபல கார்ட்டூனிஸ்ட்,
ஓவியர் கேசவ் வரைந்த படங்கள்.

9 ஒப்பில்லா
9 ஒப்பில்லா

ன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். 'நவ’ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது. வாழ்வில் புதிய திருப்பங்கள் தரப்போகும் இந்த நந்தன வருட துவக்கத்தில், நமது சக்தி விகடன் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில்... எண் 9 குறித்த சுவாரஸ்யமான சில ஆன்மிகத் தகவல்களை அறிவோமா?!

நவவித பக்தி

சிரவணம்  காதால் கேட்டல்; ஸ்ரீபாகவதம் கேட்டு அருள் பெற்றவன் பரீட்சித்து மகாராஜா. கருவில் இருக்கும்போதே பகவானின் பெருமைகளை, நாராயண நாம மகிமையைக் கேட்டு உய்வடைந்தவன் பக்த பிரகலாதன்.

கீர்த்தனம்  பாடுதல்; எப்போதும் நாராயண மந்திரத்தையே உச்சரித்து மகிமை பெற்றவர், தேவரிஷி நாரதர்.

ஸ்மரணம்  மனதால் நினைத்தல்; பூசலார் நாயனார் மனக் கோயில் எழுப்பி இறைவனை வழிபட்டு பேறுபெற்றவர்.

பாத சேவனம்  திருவடிதொழுதல்; 'எடுத்தப் பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே...’ எனும் அப்பரின் வரிகளுக்கேற்ப, இறைவனின் திருவடி தரிசனத்தில் மகிழ்ந்திருத்தல்.

அர்ச்சனம்  பூஜித்தல்; கற்களையும் மலர்களாக பாவித்து, அதைக் கொண்டு சிவனாரை அர்ச்சித்து சிந்தை மகிழ்ந்தவர் சாக்கிய நாயனார்.

வந்தனம்  வணங்குதலால் செய்யும் பக்தி வகை இது.

தாஸ்யம்  தொண்டு செய்தல்; இதற்கு உதாரணமாக அனுமனைச் சொல்லலாம். அவன் ஸ்ரீராமனுக்கு தாஸனாகப் பணி செய்த பக்தன் அல்லவா?!

சக்கியம்  தோழமை; இந்த பக்திக்கு நல்ல உதாரணம் சுந்தர மூர்த்தி நாயனார். இவருக்காக இறைவனாரே காதல் தூது சென்றார் எனில், இருவருக்குமான நட்பை நாம் அறியலாம்!

ஆத்ம நிவேதனம்  தன்னையே அர்ப்பணித்தல்; அர்ஜுனனே இந்தப் பக்திக்குச் சான்றானவன். அவன் தன்னை முழுவதுமாக பகவான் கண்ணனிடம் அர்ப்பணித்து அருள்பெற்றவன்.

##~##
நவ ரசம்:
இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி

நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்

நவ அபிஜேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.

நவ குண்டங்கள்: யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:

சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.

சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்

அடியார்களின் குணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மௌனம்.

அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்

தொகுப்பு: வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்