தெய்வப் பிரசாதங்கள்!

திருக்கதைகள், விருட்சங்கள், தீர்த்தங்கள் மட்டுமின்றி சில திருத்தலங்களின் தெய்வப் பிரசாதங்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அக்கார அடிசில் பிரசாதம்!

மதுரை கள்ளழகர் கோயிலில், ஸ்வாமிக்கு தோசை நைவேத்தியம் செய்வார்கள்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம். ஸ்யம்வக்த திருத்தலங்களில் ஒன்றான இங்கு, ஸ்ரீபூவராக மூர்த்தியாக அருள்கிறார் பகவான். வராக அவதாரத்தினராக அருளும் இந்த ஸ்வாமிக்கு கோரைக்கிழங்கு பிரசாதம் சமர்ப்பிக்கிறார்கள்.

அருள்மிகு உப்பிலியப்பன் கோயிலில் ஸ்வாமிக்கு உப்பில்லாத பதார்த்தங்களே நைவேத்தியம் ஆகின்றன!

நாகை மாவட்டம்- ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் அருளும் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிக்கு தினைமாவு, அப்பம், லட்டு ஆகியவற்றைச் சமர்ப்பிக்கிறார்கள்.

திருவாருர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமிக்கு புளியோதரை, பொங்கல், தேன்குழல் பிரசாதம்!

- ந.க.பரமசிவம், சென்னை-7

அரச மரமும் அற்புதத் தீர்த்தமும்!

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள திருத் தலம் திருப்புல்லாணி. இங்கு, அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயிலில், இரண்டாம் பிராகாரத்தில், தாயார் சந்நிதிக்கு அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. மகத்துவமான விருட்சம் இது!

படைப்புத் தொழில் புரியும் பிரம்மதேவன், தெற்கு திசையில் கோடி சூரியப் பிரகாசம் கொண்ட பிரமாண்டமான ஒளி தோன்றி மறைவதைக் கண்டார். ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சென்று, அந்த ஒளியைப் பற்றிக் கேட்டார். அவரிடம், ''அது ஒரு அரச மரம். அந்த மரத்தில்

தான் ஸ்ரீஜெகநாதர் நித்திய வாசம் செய்கிறார்'' என்று அருளினாராம் ஸ்ரீமகாவிஷ்ணு.

அந்த அரச மரத்துக்கும் அபிஷேகம் நடக்கிறது. அரச மரத்தடியில் இருக்கும் மண்ணையும், உலர்ந்த பட்டையையும் எடுத்துச் சென்று அருகில் இருக்கும் 'சக்கர தீர்த்தம்’ என்ற திருக்குளத்து நீரில் குழைக்கின்றனர். அதை நெற்றியில் பூசிக்கொள்கின்றனர்.

குளத்தின் நீரை அருந்திவிட்டு, அரச மரத்தை வலம் வந்து வணங்கி வழிபட்டால் நோய்கள் நீங்குமாம். சக்கர தீர்த்தத்தின் நீர் அடிக்கடி நிறம் மாறுமாம். அதற்கேற்ப நாட்டின் நடப்பு அமையும் என்பது நம்பிக்கை. நீர் தெளிவாக இருந்தால் தேசத்துக்கு நன்மை; பொன்னிறமாக மாறினால் விளைச்சல் குறையும்; பாசி படர்ந்தால் கால் நடைகள் நாசம்... என பட்டியலிடுகிறார்கள்!

- எம்.முருகேசன்

சித்திரையில் சந்தனக்காப்பு!

வேதாரண்யம் அருள்மிகு ஸ்ரீவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை, சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தைலக் காப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள், கையாலேயே சந்தனம் அரைத்து அம்பாள்-ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது!

இந்த சந்தனக்காப்பு அவர்கள் திருமேனியில் ஒரு வருடம் இருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை மாதமே களையப்பட்டு மீண்டும் பூசப்படுமாம். இறைவன் திருமேனியில் தினசரி மாலைகள் மட்டுமே அணிவிக்கப்படும். இங்கே இன்னுமொரு விசேஷம்... சிவனாருக்கு எந்தப் புத்தாடையாக இருந்தாலும் அதை நனைத்து காய வைத்துதான் சாத்துவார்கள்.

- கோவீ.இராஜேந்திரன், மதுரை

சுவாமிமலை படிக்கட்டுகள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி கோயில், கட்டுமலை ஆலயமாகும். அறுபது படிகள் ஏறிச் சென்றுதான் மூலஸ்தானத்தை அடைய இயலும். இந்தப் படிகளுக்குத் தமிழ் வருடங்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி-6

ஒன்பது பேறுகள்...

திருவருட்பிரகாச வள்ளலார் இறைவனிடம் ஒன்பது பேறுகளை வேண்டுகிறார்.

ஈயென்று (கொடு என்று) நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பு; என்னிடம் ஒருவர் கொடு என்றபோது அதற்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறம்; இறையாய் நீ என்றும் எனை விடா நிலை; என்றும் உன் நினைவை விடாத நெறி; அயலார் நிதியை என்றும் விரும்பாத மனம்; மெய்ந்நிலை என்றும் நெகிழாத திடம்; உலகில் 'சீ’ என்றும் 'பேய்’ என்றும் 'நாய்’ என்றும் பிறர்தமை தீங்கு செய்யாத தெளிவு; திறம் ஒன்று வாய்மை (வாய்மையே மேன்மை என்ற எண்ணம்); தூய்மை... ஆகிய ஒன்பது பேறுகளையும் தந்து, 'உமது திருவடிக்கு ஆளாக்குவாய்’ என்று அவர் இறைவனை வேண்டும் அந்தப் பாடல்...

ஈஎன்று நான் ஒருவரிடம் நின்று கேளாத

இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது
இடு என்ற போது அவர்க்கு இலைஎன்று சொல்லாமல்
இடு கின்ற திறமும் இறையாம்
நீ என்றும் எனைவிடா நிலையும் நான் என்றும் உள்
நினைவிடா நெறியும் அயலார்
நிதியன்றும் நயவாத மனமும் மெய்ந் நிலையென்றும்
நெகிழாத திடமும் உலகில்
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்தமைத்
தீங்கு சொல் லாத தெளிவும்
திறம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக்கு ஆளாக்கு வாய்
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!

இது, திருவருட்பா- தெய்வமணி மாலையில் 9-வது பாடலாக அமைந்திருப்பது சிறப்பு!

- திருப்புகழ் அமுதன்

திருக்கோயில்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் அங்கங்களில் குறிப்பிடத்தக்கவை அதன் மண்டபங்கள். கலையம்சம் மிகுந்த சிற்பங்களுடன் கூடிய மண்டபங்களை 9 வகையாகப் பிரித்துச் சொல்கின்றன ஞான நூல்கள்.

அர்த்த மண்டபம்: மூலவர் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபம்.

மகா மண்டபம்: அர்த்த மண்டபத்தை அடுத்து அமைவது.

ஸ்நபன மண்டபம்: அழகுற அமைக்கப்படும் இந்த மண்டபத்தில் வைத்தும் அபிஷேக-ஆராதனைகள் நிகழும்.

நிருத்த மண்டபம்: சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் சந்நிதி அமைந்திருப்பது இந்த மண்டபத்தில்தான்.

கல்யாண மண்டபம்: திருக்கல்யாண கோலத்தில் ஸ்வாமி-அம்பாள் இங்கு எழுந்தருள்வார்கள்.

நீராழி மண்டபம்: தீர்த்தக் குளத்தின் நடுவே அமைவது.

தசூத்ர மண்டபம்: அதிகபட்சமாக 28 தூண்களுடன் திகழும் மண்டபம்.

சாதா மண்டபம்: 28,100 தூண்களுடன் திகழ்ந்தனவாம் இவ்வகை மண்டபங்கள்.

திவ்ய மண்டபம்: முற்காலத்தில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்டபங்கள் இவை. 10,81,008 தூண்களுடன் இந்த மண்டபங்கள் திகழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுவர்.

- ராஜி, நெல்லை

. கே.ரளத்திலும் கேரளத்தை ஒட்டிய தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், முதல்நாள் இரவு பூஜை அறையை சுத்தம் செய்து, திருவிளக்கின் முன் கோலமிட்டு பூ, பழங்கள், வெற்றிலை, அணிகலன்கள், முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை வைப்பார்கள். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை, வீட்டிலுள்ள பெரியவர் ஒருவர் எழுந்து குளித்து பூஜை அறையில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வார். அதன் பிறகு வீட்டிலுள்ள அனைவரையும் எழுப்பி, பூஜை அறைக்கு அழைத்து வருவார். அதுவரையிலும் கண்களை மூடிக்கொண்டு வருபவர்கள், பூஜை அறைக்கு வந்ததும் கண் விழிப்பர். முதலில் தெய்வத் திருவுருவப் படங்களையும், தீபமேற்றிய திருவிளக்கினையும், மங்கலப் பொருட்களையும் பார்ப்பதால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இதையே விஷ§க்கனி காணல் என்பர்..
விஷு அன்று வீட்டில் உள்ள பெரியவர், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆசியளித்து, கை நீட்டி அன்பளிப்பு கொடுப்பார். இது அவரவர் குடும்ப நிலைக்கேற்ப ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை இருக்கும். இவ்வாறு விஷ§ அன்று கை நீட்டி அன்பளிப்பு தரும் இந்தச் சம்பிரதாயத்துக்கு, விஷ§ கை நீட்டம் என்று பெயர்!

- ஆர்.ஜெயலட்சுமி, நெல்லை-6