. மு.ன்னொரு காலத்தில், குடமூக்கு என அழைக்கப்பட்ட நகரம், கும்பகோணம். பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம்..
கி.பி.9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமாரி, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பதும் புண்ணிய நதிகள். இவர்களுக்கு ஒரு கவலை. மக்கள் தங்களின் பாவங்களை நம்மிடம் சேர்க்கிறார்கள். அந்தப் பாவங்களை நாம் எங்கு தொலைப்பது எனப் புரியாமல் வருந்தின. அதற்கான தீர்வு வேண்டி ஒன்பது நதிகளும் தவமிருந்ததும், ''மகாமக புண்ணிய தினத்தில் குடந்தை மகாமகக் குளத்தில் மூழ்கி, உங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ளுங்கள்’ என அவர்களுக்கு சிவனார் அருளியதும் நாமறிந்த கதையே. அப்படி அந்த நதிகள் தவமிருந்து அருள்பெற்ற தலம்... குடந்தை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக்கோயில்!

மகாமக வைபவத்தின்போது, யாகசாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் விசேஷம்... நவகன்னியர் தரிசனம். இங்கே, ஒன்பது நதிகளும் நவகன்னியராக அருள்பாலிப்பதாக ஐதீகம்!

குறிப்பிட்ட வயது வந்தும் பூப்படையாதவர்கள், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தைச் செல்வம் இல்லையே எனக் கலங்குபவர்கள் எனப் பெண்கள் பலரும் இங்கு வந்து நவகன்னியரை வணங்கினால், விரைவில் நல்லது நடக்கும். மேலும், தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் மகாமகக் குளத்தில் நீராடி, நவகன்னியரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். திருக்குளத்தில் நீராடி பொங்கல் படையலிட்டு நவகன்னியரை வழிபட, விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும்.

நவக்கன்னியருக்கு வாசனை மலர்கள், எண்ணெய், மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றுடன் பால்சாதம் மற்றும் வெற்றிலை- பாக்கு வைத்து நமஸ்கரித்தால், விரைவில் திருமணத் தடைகள் விலகி, நல்ல கணவன் அமையப் பெறுவார்கள்.

கங்கையை வணங்கினால், சாயுச்சிய பதவி கிட்டும்; யமுனையை வணங்கினால், நிறைந்த பொன்னையும் ஆபரணத்தையும் அள்ளித் தருவாள்; நர்மதையை வணங்கினால் பாவத்தைத் தீர்ப்பாள்; சரஸ்வதியை வணங்கினால் மெய்ஞ்ஞானமும், வைராக்கியமும் தருவாள்; காவிரியை வணங்கினால் அகம்பாவத்தை அழிப்பாள்; கோதாவரியை வணங்கினால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்; துங்கபத்ராவை வணங்கினால் 16,000 அசுவமேத யாகங்கள் செய்த பலன்கள் கிட்டும்; கிருஷ்ணாவை வழிபட்டால், காமதேனு வாழும் உலகத்தை அடையலாம்; சரயுவை வணங்கினால், சனியால் படும் துயரத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார் கோயிலின் அர்ச்சகர் சுந்தர குருக்கள்.

- மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா