Published:Updated:

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

Published:Updated:
அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!
அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

தீர்த்தம், தலம், புராணக் கதைகளால் மட்டுமின்றி மூர்த்தங்களாலும் சிறப்பு பெற்ற திருக்கோயில்கள் பலவுண்டு. அவற்றுள் ஒன்பது தலங்களையும், அந்தத் தலங்களில் கோயில் கொண்டிருக்கும் தெய்வ மூர்த்திகளின் விசேஷ அம்சங்களையும் அறிந்து மகிழ்வோம்!

பழநி

##~##
அறுபடை வீடுகளில் ஒன்று பழநியம்பதி. இங்கே மலைக் கோயிலில் அருளும் முருகக் கடவுள், கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தியும் இடக் கையை இடையில் அமர்த்தியபடியும் ஸ்ரீஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி அருள்கிறார். ஸ்கந்த வடிவமான இவரின் விக்கிரகம், போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்பார்கள்.

பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள் ஆகும்.  

திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப் புற்று பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவ பாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு. சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியனவும் நவ பாஷாணங்கள் எனப்படுகின்றன.

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

நவ பாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வல்லமை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர். இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப்படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவ பாஷாணத்துக்கு உண்டு என்று சிலாகிப்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.

போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர்,  தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்தார் போகர் என்கிறார்கள்.

நவ பாஷாணத்தினாலான மூலவர் விக்கி ரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து  கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும். தினமும் இரவில் முருகப் பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்டபின், மறுநாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர்.

திருச்செங்கோடு

அம்மையும் அப்பனும் இணைந்த திருக் கோலம்- அர்த்தநாரீஸ்வர திருவடிவம்! இந்தத் திருவடிவம் குறித்து ஒரு கதை உண்டு.

சிவ- பார்வதி அருகருகே வீற்றிருந்தனர். சிவனை வழிபட பிருங்கி முனிவர் வந்தார். அவர் சிவபக்தர். எனவே, வண்டின் உருவம் கொண்டு அம்மைக்கும் ஐயனுக்கும் நடுவில் புகுந்து புறப்பட்டு, சிவபெருமானை மட்டும் வலம் வந்தார். இதனால் மனம் வருந்திய அம்மை, இறைவனிடம் இறைஞ்சினார். சிவனையும் பார்வதியையும் பிரிக்க முடியாது என்பதை உலகுக்கும் பிருங்கிக்கும் உணர்த்த விரும்பிய சிவனார், அம்மையிடம் வழிசொல்லிக் கொடுக்க, அதன்படியே அம்மையும் புரட்டாசி மாத வளர்பிறை தசமியில் தொடங்கி ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாள் வரை மரகதலிங்கத்தைக் கேதார கௌரி எனும் திருநாமத்துடன் வழிபட, நோன்பின் விளைவாக, அப்பனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அப்பனின் வாமபாகத்தைப் பெற்றாள் என்பது புராணம் (ஆதிகேசவப் பெருமாளே, பார்வதிக்கு இந்த நோன்பைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தவர் என்றும் சொல்கிறார்கள்).

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

திருச்செங்கோடு தலத்தில் அற்புதமான கோலத் தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு அருளும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம் என்பது விசேஷம்.

சுயம்பு என்று சிலரும், சித்தர்கள் உருவாக்கியது என்று சிலரும் விளக்குகிறார்கள். எப்படியாயினும், சொற்களுக்கு அடங்காத எழில் கொண்ட அதிசயத் திருமேனி. மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்தப் பிரசாதமாக எல்லோருக்கும் தருகிறார்கள்! அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகதலிங்கம் உள்ளது; தவ சீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது!

திருவிற்கோலம்

இறையனார், தேவர்களுக்கு 'விற் கோலம்’ அருளிய திருத்தலம் திருவிற்கோலம். ஆதியில் க்ஷீரா நதியாக விளங்கி, இன்று கூவமாகத் திகழ்கிற நதியின் கரையில் இருப்பதால், 'கூவம்’ என்றே அழைக்கப்படுகிற ஊர். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கத்தை அடுத்து, திருவள்ளூர் நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கூவம் கூட்டு ரோட்டை அடையலாம். அங்கிருந்து கூவம் ஊர் சுமார் 1 கி.மீட்டரில் உள்ளது.

இங்கே கோயில் கொண்டிருக்கும் திருவிற்கோல நாதருக்கு திரிபுராந்தகேஸ்வரர் என்றும் பெயர் உண்டு. இவர், சுயம்பு லிங்கமாக, தீண்டாத் திருமேனியாகக் காட்சி தருவது சிறப்பு.

'ஐயன் நல் அதிசயன்...’ என இந்த இறைவனைப் போற்றுகிறார் திருஞானசம்பந்தர்.

அதென்ன அதிசயன்?!

சென்ற நூற்றாண்டு வரை, இந்த சிவலிங்கம், சில அறிகுறிகளைக்   காட்டியதாம். மழை மிகுந்து வெள்ளம் வருவதாக இருந்தால், முன்னதாகவே சிவலிங்கத்தின் மீது வெண்மை படருமாம்; அதே போன்று, போர் வரப் போகிறது என்றால், செம்மை படருமாம். இப்போது இந்த அறிகுறிகள் தென்படுவது இல்லை. இருந்தாலும், இதைக் குறித்தே ஞானசம்பந்தர் 'ஐயன் - அதிசயன்’ என்று பாடியதாகத் தெரிகிறது.

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!


பனையபுரம்

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியைத் தாண்டி னால் தஞ்சாவூர் செல்லும் பாதை பிரியும். அதில் சிறிது தூரம் சென்றால், விழுப்புரம்- வழுதாவூர் சாலை வரும். இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், முண்டியம்பாக்கத்துக்கு அருகில் உள்ளது பனையபுரம் எனும் சிற்றூர். இந்தத் தலத்தின் நாயகி- ஸ்ரீபுறவாம்பிகை. அழகுத் தமிழில் மெய் யம்மை, மெய்யாம்பிகை என்றெல்லாம் பெயர். இந்த அம்பாளின் முன் எவரும் பொய்சாட்சிகூற முடியாது என்பது நம்பிக்கை!

இறைவனின் திருநாமம்- ஸ்ரீபனங்காட் டீஸ்வரரான கண்ணமர்ந்த நாயனார். சம்ஸ்கிருதத்தில் சொன்னால், ஸ்ரீநேத்திர உத்தாரணேஸ் வரர். தட்ச யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், ஸ்ரீவீரபத்திரரின் தாக்குதலால் கண்ணொளி இழந்தார். அதன் பிறகு இந்தத் தலத்துக்கு வந்து இறையனாரை வழிபட்டு, அவன் தன் கண்ணொளியை மீண்டும் பெற்றானாம்.. எனவே, இந்த சுவாமி நேத்திரஉத்தார னேஸ்வரர் (கண்களைக் காத்து அருளியவர்) என்று பெயர் பெற்றார். இந்தத் தலத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், முதல் ஏழு நாட்கள் பனங்காட்டீஸ்வரர் மீது சூரியக் கதிர்கள் விழுவதைத் தரிசிக்கலாம்! கண் குறைபாடுகளைத் தீர்க்கும் திருத்தலம் இது.

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!


சோளிங்கர்

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். இங்கே ஒரு கடிகைப் பொழுது அதாவது 24 நிமிடங்கள் தங்கியிருந்தாலே போதும்; மோட்சம் நிச்சயம் என்கின்றன புராணங்கள்.

இந்தத் தலத்தில் இரண்டு மலைகள். பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மர். சின்ன மலையில் ஸ்ரீஆஞ்சநேயர். இருவரும் யோக கோலத்தில் அருள்வது விசேஷம்! பெரிய மலை, அடிவாரத்தில் இருந்து சுமார் 1305 படிகள் ஏறிச் சென்று ஸ்ரீயோக நரசிம்மரைத்  தரிசிக்க வேண்டும். தூணில் தோன்றி இரண்யகசிபுவை அழித்தும் ஆக்ரோஷம் தணியாத நரசிம்மருக்கு, பிரகலாதனின் பால் வடியும் முகம் கண்டு கோபம் தணிந்தது. பிறகு, உலக மக்கள் யாவருக்கும் அருள்புரியும்  விதம் கோயில் கொண்டு, யோகத்தில் ஆழ்ந்த தலமே இந்த சோளிங்கர். விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற இறையருள் கைகூடிய தலமும் இதுவே. சப்த ரிஷிகள், அனுமன் ஆகியோர் அருள் பெற்ற தலமும்கூட. இங்குள்ள நரசிம்மரை 'வெல்லத்தால் ஆன கனியே’ என்று புகழ்கிறார் திருமங்கையாழ்வார்.

தக்கோலம்

நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் பெருகியதால் திருஊறல் என்று பெயர் பெற்ற தலம் தக்கோலம். தட்சன் ஓலமிட்ட இடம் என்றும் கூறுவர். உத்தராயணத்திலும், தட்சி ணாயணத்திலும் வண்ணம் (நிறம்)மாறி வடிவம் காட்டிய சிவலிங்கம் எழுந்தருளியுள்ள தலம் என்றும் போற்றுவர். அரக்கோணத்திலிருந்து சுமார் 16 கி.மீ.  தூரத்தில் உள்ளது தக்கோலம்.

இங்குள்ள ஈஸ்வரரை அருள்மிகு ஜலநாதேஸ் வரர். ஊறல்நாதர், ஊறல்நாயகர், ஊறலீசர், ஜலேஸ்வரர், ஜலநாத உடையார், ஜலகண்டர் என்றெல்லாம் விழித்து வழிபடுகிறார்கள். இவரின் லிங்க பாணத்தில் இரண்டு பள்ளங்கள் காணப்படுகின்றன. ஏன்?

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!

குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். இங்கே, மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டாள் அம்பிகை. சிவனாரின் திருவிளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க, மணல் லிங்கம் கரையத் தொடங்க... இறைய னாரை விடமாட்டேன் என்று அம்பிகை லிங்கத்தை ஆலிங்கனம் செய்ய... அழுத்திப் பிடித்துக் கொண்ட அம்பிகையின் மார்பு பதிந்த தடங்களையே, பள்ளங்களாகப் பார்க்கிறோம். மூலவருக்குப் பின்புறம், சுவரில் பார்வதியும், பரமேஸ்வரரும் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ஜலநாதேஸ்வரர் என்று அழைக்கப்பட்டாலும், மக்கள் புழக்கத்தில் உமாபதீஸ்வரர் என்றே இவர் வழங்கப்படுகிறார்.

திருமாதலம்பாக்கம்

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து தக்கோலம் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். இங்குள்ள சிவாலயத்தில், தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீநிவாசப் பெருமாள். சங்கு- சக்ரதாரியாக நான்கு  கரங்களுடன் அருளும் ஸ்ரீநிவாசரின் விக்கிரகம்,

நவ பாஷாண மூர்த்தங்களுக்கு இணையான மகத்துவம் கொண்டதாம். இவருக்கு பாலபிஷேகம் செய்விக்கும்போது, பெருமாளின் திருமேனியும், வழிந்தோடும் பாலும் நீலநிறத்தில் தோன்றுவதை இன்றும் தரிசிக்கலாம். தன்வந்திரி அம்சமாக அருளும் இந்தப் பெருமாளுக்கு தொடர்ந்து 11 ஏகாதசி நாட்கள் அல்லது 11 சனிக்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வழிபட்டு, அந்தப் பாலைப் பருகி வந்தால் சரும நோய்கள் நீங்கும்; ஏகாதசித் திருநாளில் இவருக்கு சந்தான ஹோமம் செய்து வழிபட, விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!


திருமால்பேறு

இந்தத் தலத்திலும் பார்வதியாள் வழிபட்ட மணல் லிங்கமே மூலவராக உள்ளது. எனவே, லிங்கத் திருமேனியின் மீது செம்பால் செய்யப்பட்ட கவசம் (குவளை) சாத்தியே அபிஷேகம் நடை பெறுகிறது. இவரின் சந்நிதி அருகில் வணங்கிய நிலையில் இருக்கும் ஸ்ரீசெந்தாமரைக்கண்ணப் பெருமாளையும் தரிசிக்கலாம். இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்க, நற்காரியங்கள் அனைத்தும் தடையின்றி ஸித்திக்குமாம்!


இலம்பையங்கோட்டூர்

திருவிற்கோலம் ஊரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. அரம்பையர் வழிபட்ட இந்தத் தலத்தின் ஈஸ்வரனுக்கு, ஸ்ரீதெய்வ

நாயகேஸ்வரர், அரம்பேஸ்வரர் என்றெல்லாம் திருநாமம். சந்திரனுக்கும் அருளிய பெருமான் இவர். கிழக்கு நோக்கி வெளிர் சிவப்பு நிறத்துடன் காட்சிதரும் மூலவரின் ஆவுடையார் -அடிப்பாகம் தாமரை வடிவில் காணப்படுவது சிறப்பு. மனதுக்கு சந்திரனே பொறுப்பு. ஆகவே, திங்கட்கிழமைகளில் இவரை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்!