Published:Updated:

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

Published:Updated:
நல்லது நடந்தது!
##~##
'க
ருணையே வடிவான ஈசன்... அமைதியே வடிவான அம்பிகை...’ என்று தலைப்பிட்டு, 'திருப்பணிக்கு பொருள் தருவோம்... கருணாமூர்த்தியின் அருள் பெறுவோம்’ என்று சென்னை - பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயில் குறித்து, கடந்த 5.11.10 இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம்.

''கோயிலுக்குக் கும்பாபிஷேகம் எப்ப நடந்துச்சுன்னே தெரியலை. ரொம்ப வருஷமா சிதிலம் அடைஞ்ச நிலையில, மதில் முழுசும் பொலபொலன்னு விழுந்து, வழிபாடே இல்லாம இருக்குது. இந்தக் கோயிலுக்கு நல்ல வழி கிடைச்சா, அது இந்த ஊருக்கே கிடைச்ச மாதிரி...’ என்று பள்ளிக்கரணை பக்தர்கள் புலம்பலும் வேண்டுதலுமாகத் தெரிவித்திருந்தனர்.

''ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீஆதிபுரீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீசாந்தநாயகி. சக்தி வாய்ந்த தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் கோயில் பரிதாபமாக இருப்பது வேதனையாக இருக்கிறது'' என்று அறக்கட்டளையின் தலைவர் முருகேசன் தெரிவித்திருந்தார்.

''ஆதிபுரீஸ்வரரின் ஆலயத்தை அழகுபடுத்துவது நம் கைகளில்தான் இருக்கிறது. ஸ்ரீசாந்தநாயகி குடிகொண்டிருக்கும் கோயிலில் சகல விழாக்களும் விமரிசையாக நடைபெறுவதற்கு ஏதேனும் ஒருவகையில் நாமும் காரணமாக இருக்க வேண்டாமா?'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள சக்தி விகடன் வாசகர்களிடம் இருந்து மளமளவென நீண்டன, ஆதரவுக் கரங்கள். சிறிதும் பெரிதுமாக, பணமும் பொருளுமாகக் குவியவே... விறுவிறுவென திருப்பணிகள் துவங்கி, நடந்தேறின.

''சக்தி விகடன் வாசகர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அவங்களோட உதவி அளவிட முடியாதது. மதில், சந்நிதிகள், அறுபத்து மூவர் விக்கிரகங்கள், பிராகாரம்னு பல வேலைகளை முடிச்சாச்சு. இப்ப... கோபுரம் அமைக்கும் பணியில் இறங்கியிருக்கோம். அதற்கான பூமி பூஜையும் ஹோமமும் செஞ்சு, வேலைகள் வேகமாப் போயிட்டிருக்கு. கோபுரம் அமைக்கறதுக்குத்தான் இன்னும் கொஞ்சம் நிதி தேவையா இருக்கு. சக்தி விகடன்ல எப்பவோ எழுதியிருந்தாலும், இப்பக்கூட யாராவது அந்தக் கட்டுரையைப் பார்த்துட்டு, அவங்களால முடிஞ்ச கைங்கர்யத்தைச் செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. அதேபோல, கோபுரப் பணியும் அவங்க பேருதவியோடு முடிஞ்சிடும் நம்பறேன். சீக்கிரமே கும்பாபிஷேகமும் நடந்துடும். எல்லாம் சிவனருள்!'' என்று சொல்லிச் சிலிர்த்தார் முருகேசன்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! அந்தக் கோபுரப் பணிக்கு உதவுவதும் மகா புண்ணியம்தான்.

- வி.ராம்ஜி
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்