உலக மனிதர்களிடம் சாந்தமும் அமைதியும் ஏற்படுவதற்கு ஐந்து சக்திகள் மிக அவசியம். பக்தி, தைரியம், விஷம் தீண்டாமை, செழிப்பான பூமி, கல்வி ஆகிய ஐந்தும் இருந்தால், அகிலத்தில் நிம்மதிக்குப் பஞ்சமில்லை. அவை அனைத்தையும் தந்தருளும் ஒன்பது ஆஞ்சநேயர்களை ஒரே இடத்தில் தரிசிக்க முடியும் என்பது எத்தனை பெரிய பாக்கியம்!

திண்டுக்கல் ராம்நகர் பகுதியில், ஸ்ரீவல்லப மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. மடியில் தேவியை அமர வைத்தபடி, திருமாலிடம் உள்ள சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறார் கணபதி. அருகம்புல், எருக்கம்பூ, வன்னி இலை ஆகியவை கொண்டு இவரை வணங்கினால், எடுத்த காரியம் யாவற்றிலும் வெற்றியைத் தருவார் விநாயகப் பெருமான்.

இங்கே, ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீசத்யநாராயணர், ஸ்ரீகேதாரீஸ்வரர், ஸ்ரீசண்முகர், ஸ்ரீசந்தான கோபாலன், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

ஸ்ரீசத்யநாராயணா சேவா டிரஸ்ட் எனும் அமைப்பினரால் அமைக்கப் பட்டுள்ள இந்தக் கோயிலில், ஒன்பது அனுமனையும் ஒருசேரத் தரிசிக்கலாம். ஸ்ரீபால மாருதி, ஸ்ரீயோக மாருதி, ஸ்ரீதீர மாருதி, ஸ்ரீபஜனை மாருதி, ஸ்ரீவீர மாருதி, ஸ்ரீதியான மாருதி, ஸ்ரீபக்த மாருதி, ஸ்ரீபவ்ய மாருதி, ஸ்ரீசஞ்ஜீவி மாருதி என ஒன்பது ஆஞ்சநேயர்களும் நவக்கிரகங்களைப் போல் நவமாருதிகளாகத் தரிசனம் தருகின்றனர். ஆக, நவமாருதியையும் ஒவ்வொரு கிழமைகளில், அவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால், எல்லா வளங்களும் பெறலாம்.

எதிரியின் தொல்லை நீங்க... ஸ்ரீதீர மாருதி!

புத்திர்பலம் யசோ தைர்யம் நிப்பயத்வம் அரோகதா:
அஜாத்யம் வாக் படுத் வம்ச ஹனூமத் ஸ்மரணாத்பவேத்

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய்க்கிழமையன்று ஸ்ரீதீர மாருதிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனை செய்து வணங்கினால், எதிரிகள் தொல்லைகள் யாவும் நீங்கும். வழக்கில் வெற்றி நிச்சயம்!

மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!

குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம:
விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ
நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும். சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி, மனத் தூய்மை அடைவோம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.

. பாவம் போக்கும் ஸ்ரீபஜனை மாருதி!.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம்

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபஜன மாருதியை புதன் கிழமையன்று வணங்கினால், பாபங்களும் தோஷங்களும் விலகும்.

தைரியம் தரும் ஸ்ரீவீர மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபக் கணமாருதம்!
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, வியாழக்கிழமையன்று ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும். கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.

தம்பதி ஒற்றுமைக்கு... ஸ்ரீதியான மாருதி!

ப்ரிய மாக்யதே தேவீ த்வாம்துபூப: ஸபாசநேய
திஷ்ட யா சீவஸி தர்மஞ்நே ஜயமெப்ரதி க்ருஹ்யதாம்

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீதியான மாருதியை வெள்ளிக்கிழமைகளில் வணங்கினால், தம்பதி வேற்றுமை நீங்கும். மனத்துள் அமைதி நிலவும்.

சனியிடம் இருந்து காக்கும் ஸ்ரீபக்த மாருதி!

உல்லங்கிய ஹிந்த்தோ:ஸலிலம் ஸலீலம்
யஸ்ஸோக வஹ்ணிம் ஜனகாத்மஜாயா
ஆதாயதே நைவ ததாஹ லங்காம்
நமாமி ப்ராஜ்ஜலிம் ஆஞ்சநேயம்.

சனிக்கிழமைகளில் இங்கு வந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீபக்த மாருதிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, வன்னி இலையால் பூஜித்து வணங்கினால், சனி பகவானின் தொல்லையில் இருந்து காத்தருள்வார், ஸ்ரீபக்த மாருதி.

ராகு தோஷம் நீக்கும் ஸ்ரீபால மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் குமாரம் ப்ரும் ஹசாரினம்
துஷ்ட க்ரஹ விநாசய ஹனுமந்தம் உபாஸ்மஹே!

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின்போது இங்கு வந்து வணங்கி வழிபட்டால், தேக ஆரோக்கியம் கூடும். ராகு மற்றும் கிரக தோஷங்கள் விலகும்.

லாபம் தரும் ஸ்ரீபவ்ய மாருதி!

அஸாத்ய ஸாதக ஸ்வாமி அஸாத்யம் தவகிம்வத
ஸ்ரீராமதூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் சாதகப்ரபோ!

என்ற ஸ்லோகத்தை எல்லா தினங்களிலும் சொல்லி, ஸ்ரீபவ்ய மாருதிக்கு சிவப்பு நிற புஷ்பங்களைச் சார்த்தி மனதார வழிபட, தொழிலில் வெற்றி உண்டாகும்.

நோய் நீக்கும் ஸ்ரீசஞ்ஜீவி மாருதி!

மனோஜவம் மாருத துல்யவேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸாம் நமாமி

என்ற ஸ்லோகத்தை, பிரதோஷ வேளையில் சொல்லி, ஸ்ரீசஞ்ஜீவி மாருதியைத் தரிசித்து, கருநீல புஷ்பம் சார்த்தி, வடைமாலை சார்த்தி வணங்கினால், சகல நோய்களும் நீங்கும்.

நவக்கிரகங்கள் அமைந்திருப்பது போல், இங்கு காட்சி தரும் நவ மாருதிகளையும் வணங்கினால், சகல வளமும் கிடைக்கப் பெறலாம்.

- ரா.அண்ணாமலை
படங்கள்: வீ.சிவக்குமார்