Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வாழ்க்கைல நல்ல விஷயங்கள் எப்ப, எங்கே, யாரால கிடைக்கும்னு சொல்லவே முடியாது. அந்தத் தேடலோடயும் தவிப்போடயும்தான் நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நகர்ந்துக்கிட்டிருக்கு. என் வாழ்க்கையில, சமீபத்துல அப்படியரு சத்காரியம் நடந்திருக்குன்னா... அது திருப்பட்டூர்லதான். ஐ லவ் திருப்பட்டூர். அந்த ஊரும் கோயிலும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு'' என்று நெகிழ்ந்து சொல்லும் உஷா முரளி, அமெரிக்காவில் வசிக்கிறார்.

''எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். பிறந்தது இங்கேன்னாலும் வளர்ந்ததும் படிச்சதும் சென்னைல. அப்புறமா, எனக்கும் கணவர் முரளிக்கும் அமெரிக்கால வேலை கிடைச்சு, அங்கே இருக்கோம் நாங்க! ஆனாலும் என் மனசெல்லாம், நம்மூர்ல இருக்கற அம்பாள் ஸ்தலங்கள்லயே லயிச்சு நின்னுண்டிருக்கு. அந்த அளவுக்கு அம்பாள் பக்தை நான்! இதோ... திருப்பட்டூருக்கு வந்ததுக்கு ஸ்ரீபிரம்மாவை தரிசனம் பண்றதுங்கறதுதான் காரணம்னாலும் அங்கே... ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரிதான் என்னை பரிபூரணமா, ஆட்கொண்டா; அருள்பாலிச்சா!'' என்று கண்களில் நீர் திரையிடச் சொல்கிறார் உஷா.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''அமெரிக்காலேருந்து இங்கே இருக்கற சகோதரிகிட்டயும் நண்பர்கள்கிட்டயும் அடிக்கடி பேசிக்கறதுதான்! அப்படிப் பேசுறபோது, பேச்சு தடால்னு கோயில்கள் பத்திப் போயிரும். அப்படியரு பேச்சுலதான், இந்தத் திருப்பட்டூர் கோயில் பத்திச்

சொன்னாங்க! ஆனால் என் காதுல திருப்பட்டூர்னு விழலை. திருப்பத்தூர்னு விழுந்துச்சு. அடுத்த முறை இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு வந்தப்ப... வேலூர் பக்கம் இருக்கற திருப்பத்தூருக்குப் போய் கோயில் கோயிலா, தெருத் தெருவா அலையறோம். அக்கம் பக்கத்து கிராமத்துல அந்தக் கோயில் இருக்குமோனு அங்கேயும் போய்ப் பார்த்தோம். 'சிவகங்கை மாவட்டத்துல காரைக்குடிக்குப் பக்கத்துல ஒரு திருப்பத்தூர் இருக்கு. அங்கே போய்ப்பாருங்க’ன்னு சொன்னாங்க.

அப்புறமா, காரைக்குடி போனோம். பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கொப்புடையம்மாள்னு தரிசனம் பண்ணினதுதான் மிச்சம். அந்தத் திருப்பத்தூர்லயும் ஒரு தெரு விடாம தேடினோம். அப்புறம், ஊருக்குக் கிளம்பற முத நாள்... அது திருப்பட்டூர்னும், திருச்சிக்குப் பக்கத்துல இருக்கு அந்த ஊர்னும் அக்கா தகவல்கள் சொன்னா. ஆனா, அன்னிக்கி மிட்நைட்ல ஃபிளைட்! அதனால ஏக்கமும் துக்கமுமா ஊர் திரும்பினேன்'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவிக்கிறார் உஷா.

''என் பையனுக்கு மெடிக்கல் படிக்கணும்னு ஆசை. ஆனா கிடைக்காமப் போயிருச்சு. அப்பத்தான் முதன்முதலா, பிரம்மாவை மானசீகமா வேண்டிக்கிட்டேன். 'உன் சந்நிதி எங்கே இருக்குன்னு கூட எனக்குத் தெரியலை. என் பையனோட ஆசையை நிறைவேத்தி வைப்பா'னு பிரார்த்தனை பண்ணினேன். அடுத்தாப்ல அவனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சது. இன்னிக்கி, லிவர் ஸ்பெஷலிஸ்ட்டுக்கான படிப்பும் கிடைச்சு, அது முடியப்போகுது. உலக அளவுல லிவர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள்ங்கறது ரொம்ப ரொம்பக் குறைவு தெரியுமோ?!'' என்று வியப்புடன் தெரிவித்தவர் தொடர்ந்தார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''அடுத்த முறை அவசர வேலையா சென்னை வந்தவ, அக்காவையும் கூட்டிக்கிட்டு இரவு ஏழே முக்கால் மணிக்கு கோயில் நடை சார்த்துற நேரத்துல, உள்ளே போனோம். ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரியோட சந்நிதி. அடடா... அம்பாளோட அழகுல லயிச்சு அப்படியே உக்கார்ந்திருந்தேன். அப்ப ஒரு அம்மா... 'நீ வந்திருக்கே... உன் புருஷன் எங்கே?’னு கேட்டாங்க. வரலைன்னு சொன்னேன். 'போ... முதல்ல பிரம்மாகிட்ட மன்னிப்புக் கேளு... 'என்புருஷனை அடுத்தமுறை கூட்டிட்டு வரேன்’னு சொல்லிருன்னாங்க.

வாழ்க்கையில அம்பாள்... இப்படி எனக்கு தடக்தடக்குன்னு எதுனா சொல்லிக்கிட்டிருப்பா. அதன்படியே, திரும்பவும் பிரம்மா சந்நிதிக்குப் போய் நின்னு, மன்னிப்பும் கணவருக்கான பிரார்த்தனையுமா இருந்தேன். 'எங்களையெல்லாம் படைச்சவனே... உன்னைத் தேடி வந்திருக்கற இந்தப் பொண்ணும் அவ புருஷனும் அவங் களோட பசங்களும் நல்லாருக்கணும். நீதான் அருள்புரியணும்’னு பின்னாடி இருந்துக்கிட்டு சொன்னாங்க அந்த அம்மா!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அந்த அம்மாகிட்ட சாமியெல்லாம் கும்பிட்டுட்டு வந்துடுறேன். கார்ல புடவை இருக்கு, வாங்கிக்கங் கம்மான்னு சொன்னேன். சரின்னாங்க. அவங்க பேரைக் கேட்டேன். மகமாயின்னாங்க. பெருசா, வட்டமா குங்குமமும் முகம் முழுக்க மஞ்சளுமா, சிவப்புக் கலர் புடவைல அப்படித்தான் இருந்தாங்க. அப்புறம் வாசலுக்கு வந்து பார்த்தா, அவங்களைக் காணவே காணோம். வெளிய நிக்கும்போது, யாரோ ஒரு சின்னப்பொண்ணு ஓடி வந்து, ஒரு தாமரைப் பூவைக் கொடுத்துட்டுப் போனா. உடலே நடுங்கிப் போட்ருச்சு எனக்கு!

அப்புறமென்ன... திரும்பவும் என் கணவரோட திருப்பட்டூருக்கு வந்தேன். பிரம்மாவுக்கும் ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரிக்கும் 108 தாமரைப் பூக்களால் அர்ச்சனை பண்ணினேன். பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு அலங்காரம் செஞ்சு வேண்டிக்கிட்டேன். அம்பாள், சிவலிங்கம், பிரம்மான்னு எல்லாருக்கும் புது வஸ்திரம் சார்த்தினேன்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

வாழ்க்கைல பெருசா எந்த எதிர்பார்ப் புகளும் ஆசைகளும் இல்லாம இருக்கறவ நான். கோயில்- குளத்துக்குப் போறதும் அம்பாளை ஆராதனை பண்றதும் என் வாழ்க்கையாவே ஆகிட்ட ஒரு விஷயம். இங்கே... இந்தத் திருப்பட்டூர், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு என்னை நகர்த்தியிருக்கறதா உணர்றேன். கணவருக்கு ஆபீஸ்ல கிடைச்ச சின்னதான பாராட்டு, 'அநேகமா, உனக்கு பதவி உயர்வு நிச்சயம்’னு கைகுலுக்கி இப்பவே டிரீட் கேக்கற என் அலுவலகத் தோழிகள், பையனும் பொண்ணும் காணக் கிடைக்காத அளவுக்கு அவங்கவங்க துறையில, முன்னுக்கு வந்துக்கிட்டி ருக்கிற ஸ்டேஜ்... இது எல்லாமே, திருப்பட்டூர் பிரம்ம சம்பத்கௌரியாலயும் ஸ்ரீபிரம்மாவாலயும் கிடைச்சதா சொல்லிப் பூரிக்குது மனசு!

முன்னெல்லாம், சந்தர்ப்பம் கிடைச்சுதுன்னா இந்தியாவுக்கு வரணும்னு தோணும். இப்ப, திருப்பட்டூர் தரிசனத்துக்காகவே ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கணுமேனு பரபரத்துக் கிடக்கறேன் நான்!'' என்று கூடை நிறைய தாமரைப் பூக்களை அப்படியே நெஞ்சில் அணைத்தபடி, கண்ணீர் மல்கப் பரவசத்துடன் சொல்கிறார் உஷா முரளி.

திருப்பதிக்கு நிகரானதாக புகழ் பெற்றுக் கொண்டிருக்கிற அருமையான திருவிடத்துக்கு, இன்றைக்கு எங்கிருந்தெல்லாமோ வருகிறார் கள் அன்பர்கள்! உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களை, தன்னிடம் வரவழைத்து ஆசியும் அருளும் வழங்குகிற அற்புதத் தெய்வம் ஸ்ரீபிரம்மா. அவர்... ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மூலமாகவும் உணர்த்துவார்; சமயபுரம் ஸ்ரீமாரியம்மனாகவும் வந்து காட்டி அருள்வார்!

நமக்குத்தான் தெய்வங்களிலும் மனிதர் களிலும் பேதங்கள் உண்டு. தெய்வங்களுக்குள், தெய்வ சக்திக்குள் எந்த பேதங்களும் இல்லை. இறைவனுக்கு பல திருவுருவங்கள் உண்டு. இறைச் சக்திக்கு உருவமே இல்லை. ஆகவே, இறைச் சக்தி என்பது ஒன்றுதான்!  

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக் என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism