Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைமையான திருக்கோயில் ஒன்றைப் புனரமைத்து வருகிறோம். இறையருளால் விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆனால், இந்தக் கோயிலுக்கான ஸ்தல விருட்சம் எதுவென்று தெரியவில்லை. புதிதாக விருட்சம் நடவேண்டும் எனில், எந்த மரத்தை நட்டு வளர்க்கலாம்?  ஒரே கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட விருட்சங்கள் வைக்கலாமா?

- எம்.தாமோதரன், தென்காசி

##~##
கோயிலைப் புதுப்பித்து இறையுருவத்தை இருத்துவது என்பது ஒருவனுடைய குலத்தையே செழிப்பாக்கும். வருங்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தப் பயன்படும் கோயில்கள், நம் நாட்டின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்கின்றன.

ஆன்மிக அறிவை ஆழமாக வளர்த்து, பிறவிப் பயனை எட்ட வைக்கும் கோயில்கள், நமது பரம்பரையை வாழ வைக்கும்.

ஸ்தல விருட்சமாக அரச மரத்தை நட்டு வளர்ப்பது சிறப்பு. அதோடு வேப்ப மரமும் ஆலமரமும் இருக்கலாம்.

கேள்வி-பதில்

அரச மரம் ஸ்தல விருட்சம்; அதோடு மற்ற விருட்சங்களையும் இடம் இருந்தால் வளர்க்கலாம். அதனால் சுகாதாரம் வளர்வதுடன், பல பறவை இனங்களுக்கும் அடைக்கலமாகத் திகழும்.

ஆலும், அரசும்  வேம்பும் ஆயாசத்தை அகற்றி ஆனந்தத்தை அளிக்கும். இறைப் பணியில் முனைந்து செயல்படுங்கள்; நன்மை உண்டு.

குழந்தையின் ஜனன நட்சத்திரம் ஒரே மாதத்தில் இரண்டு முறை வரும்போது எந்த நாளை பிறந்த தினமாக ஏற்பது? இதுபோன்ற சூழலில் திதி அல்லது லக்னத்தை வைத்து, அதையட்டி வரும் நட்சத்திர நாளை ஏற்கலாமா?

- கே.வடிவேல், நெல்லை-2

கேள்வி-பதில்

தர்மசாஸ்திரத்துக்கு தாங்கள் அளிக்கும் பரிந்துரை, மேலும் சிக்கலைத் தோற்றுவிக்கலாம். இரண்டு முறை வரும் நட்சத்திரத்துடன் லக்னமும் திதியும் ஒட்டாமல் இருக்கலாம்; இரண்டிலும் ஒட்டிக்கொண்டும் இருக்கலாம். பிறந்த நாள் நட்சத்திரத்தை வைத்து வரும் அது... திதி, லக்னம், கிழமை மற்றும் தேதியுடன் சம்பந்தத்தை எதிர்பார்க்காது.

புனர்வசு நட்சத்திரம் மதியம் இல்லாத நாளிலும் ஸ்ரீராம நவமி வரும். நவமி கடக லக்னத்தைத் தொடாமலும் வரும்.

இரவு அஷ்டமி பிறக்கும் வேளையில் இல்லாமலும், ரோஹிணி நட்சத்திரம் அந்த வேளையில் இல்லாமலும் ஜன்மாஷ்டமி வரும். அவற்றில், பொதுமக்களின் பரிந்துரையை எதிர்பார்க்கவில்லை தர்மசாஸ்திரம்.

இக்கட்டான சூழலில் செயல்படும் விதத்தை, சந்தேகத்துக்கு இடமின்றி, பயனுள்ள முறையில் விளக்குகிறது தர்மசாஸ்திரம்.

நட்சத்திரத்தை வைத்து மாதத்தைக் கணக்கிடும் முறை உண்டு. 27ஜ் 10 = 270 என்பதை 10 மாதங்களாக எடுத்துக் கொள்வது உண்டு. மகப்பேற்றை நிறைவு செய்வது நக்ஷத்திரமானம். 365 நாட்களைக் கொண்ட சௌரமானத்தின் கணக்கிலான 10 மாதங்கள் வரை கருவறையில் தங்கும் குழந்தைகள் இருப்பது அரிது.

பிறந்த நாட்களை சௌரமான அளவுகோலில் கடைப்பிடிப்போம். ஆகையால் 2-வது நட்சத்திரத்தை பிறந்த நாளாக ஏற்பது சிறப்பு என்று தர்மசாஸ்திரம் கூறும்.

முதலில் வருவதை ஏற்கும்போது சில நேரம் 27 நாட்கள் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. சௌரமானக் கணக்கைச் சரி செய்ய, இரண்டாவதைத் தள்ளவும் இயலாது மாதம் மாறி விடும். ஆகையால் 2-வது நட்சத்திரமே வருஷத்தை நிறைவு செய்வதில் நம்பிக்கை வைக்க உகந்தது.

சிறு வயதிலேயே தாய்- தந்தையை இழந்துவிட்டதால், எனது பிறந்த நேரம், தேதி குறித்த எந்தக் குறிப்பும் எழுதி வைக்க இயல வில்லை. பள்ளிச் சான்றிதழ்களும் கிடையாது. ஜோதிட சாஸ்திரம் அல்லது வேறு ஏதேனும் வழியில் தெரிந்துகொள்ள முடியுமா?

- ஜி.நாகராஜ், ஈரோடு-1

இப்படியரு சூழல் நிகழ வாய்ப்பு உண்டு என்று முன்னதாகவே எதிர்பார்த்து, அவனுக்குப் பிறவிச் சான்றை (ஜாதகத்தை) பரிந்துரைக்க ஜோதிடம் வகை செய்கிறது.

அவன் பிறந்த ஆண்டு, மாதம், நாள், லக்னம் போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் முறையை ஜோதிடம் உருவாக்கியிருக்கிறது. அதற்கு, 'நஷ்ட ஜாதகம்’ என்று பெயர். வராஹமிஹிரர் நஷ்ட ஜாதக முறையை விளக்கியிருக்கிறார். தமிழ்மொழியிலும் அதன் மொழிப்பெயர்ப்பு உண்டு. அதை வைத்துத் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

கேள்வி-பதில்

ஸ்வாமிக்கு முதல் நாள் சமர்ப்பிக்கும் மலர்களை நிர்மால்யம் என்கிறோம். இந்த புஷ்பங்களை குப்பையில் போட்டுவிடக் கூடாது, ஜலத்தில் சேர்க்கவேண்டும் என்பார்கள். அப்படி, நீர்நிலை எதுவும் இல்லாத பட்சத்தில், அதைப் பிரசாதமாக ஏற்று பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம். பிறகு, அப்புறப்படுத்தும்போது குற்றம் நேராது என்கிறார்கள் சிலர். இது சரிதானா?

சுஜாதா குருமூர்த்தி, திருச்சி-2

கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி வீடு திரும்புபவர்கள், கால்களை அலம்பிவிட்டு உள்ளே செல்லவேண்டாம் என்பார்கள். ஈசனை வலம் வந்த கால் பரிசுத்தமானதால், உடன் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று பொருள்.

மயானம் சென்று திரும்பியவன், நீராடி- கால் கழுவிய பிறகே வீட்டுக்குள் செல்வது வழக்கம். அப்போது அது அசுத்தமான கால்கள்; சுத்தம் செய்வது தகும்.

'விரத நாட்களில் ஈசன் பிரசாதத்தை ஏற்கலாம்; விரதம் கெட்டுவிடாது’ என்ற விதி உண்டு. சிறிதளவு பழம், பால், தீர்த்தம் ஏற்கலாம் என்று பொருள். தாம் விரும்பும் உணவை ஈசன் பிரசாதமாக மாற்றி பொங்கல், வடை, இட்லி, கொஸ்து, சாம்பார், சட்னி, மிளகாய்ப்பொடி போன்றவற்றை ஏற்பவர்களும் உண்டு. சட்டத்தின் சின்ன 'லூப் ஹோலை’ பயன்படுத்தி, சட்டத்தை மீறாதவனாகக் காட்டிக்கொள்பவர்களும் உண்டு.

அக்கம்பக்கத்தில் நீர் நிலைகள் இல்லாத இடத்தில்... நீர் நிலைகள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று இறந்தவரின் அஸ்தியைக் கரைப்பது உண்டு. வீட்டில் வசதி இருந்தும் முன்னோர் ஆராதனைகளை காசி யிலோ ராமேஸ்வரத்திலோ சென்று நிறைவேற்றுபவர்களும் உண்டு. க்ஷேத்ராடனம் மேற்கொண்டவர்களில் கோயில் பிரசாதத்தை வாங்கி, மதிய உணவை முடித்துக் கொள்பவர்களும் உண்டு.

'அப்படி நீர்நிலை எதுவும் இல்லாத பட்சத்தில்’ என்கிற சிலருடைய வாதமானது, சட்டத்தை மீறச் செயல்படுத்தும் தடயமாகப் - பயன்படுத்தும் தந்திரமாக மாறுகிறது. 'வாடிப்போன நிர்மால்யத்தை நமது பெண்மணிகள் ஏற்காவிட்டால்...’ என்கிற கேள்வி எழுப்ப தாங்கள் விரும்பமாட்டீர்கள். தலை நிறைய புஷ்பத்தை ஏற்கும் நாகரிகம் குறைந்த இன்னாளில், அதை நிறைவேற்றுவது கடினம். பழைய பூக்களை ஏற்கும் எண்ணம் தற்காலப் பெண்ணினத்திடம் இல்லை. ஒரு ரோஜாப்பூ அல்லது ஒரு செண்பகப் பூவை தலையில், காதோரத்தில் வைத்து மகிழும் பெண்கள் ஏராளம். அதுவும் வாடாமல் இருந்தால் மட்டுமே ஏற்பார்கள்.

தவறான வழியைத் தேர்ந்தெடுத்தால், சில நேரம் முட்டுச்சந்தில் முட்டிக்கொள்ள நேரிடும். நிர்மால்யத்தை நீர்நிலைகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சேர்த்து விடுங்கள். சட்டத்தை நிறைவேற்றிய நிம்மதி இருக்கும்.

கேள்வி-பதில்

நானும் மூத்த சகோதரரும் காசி, கயா மற்றும் பிரயாகைக்குச் செல்கிறோம். இந்தத் தலங்களில் நாங்கள் இருவரும் இரண்ய அல்லது ஹோம சிராத்தம் செய்யும்போதும் பிண்டங்கள் போடும்போதும் தனித்தனியே செய்ய வேண்டுமா அல்லது சேர்ந்தே செய்யலாமா?

நாங்கள் இப்போது வெவ்வேறு ஊர்களில் வசிப்பதால், பெற்றோருக்கான சிராத்தங்களை தனித் தனியாகத்தான் செய்து வருகிறோம்.

- ரா.சம்பத், சென்னை-41

சட்டி இரண்டானால் சிராத்தமும் இரண்டு. சட்டி ஒளபாசனப் பானை இரண்டானால், சட்டி- சமையல் இரண்டானால், குடித்தனம் இரண்டானால், வரவு- செலவு ஆகியனவும் இரண்டானால் கடமைகளும் இரண்டாக மாறிவிடும்.

ரேஷன் கார்டு, குடிமகன் சான்று (ஐடென்டி கார்டு), வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு, வீடு, வாகனம் ஆகியவற்றை எல்லாம் தனித்தனியே ஏற்படுத்திக்கொண்ட பிறகு, முன்னோர் ஆராதனையில் மட்டும் அண்ணா என்று பெருமையைப் புதுப்பித்து, அவருடன் ஒட்டிக்கொண்டு ஆராதனையில் ஈடுபட்டதாக எண்ணுவது தவறு.

எண்ணிக்கையில் அதிகமான புதல்வர்களை ஈன்றெடுக்க வேண்டும், அப்போதுதான் அறம் விரிவடையும் என்கிறது தர்மசாஸ்திரம் (ஏஷ்டவ்யா பஹவ: புத்ரா:... ).

அறம் விரிவடையும் நோக்கத்தில் பல புத்திரர்களை ஈன்றெடுக்கிறார்கள் பெற்றோர்கள். அதற்கு எதிரிடையாக எல்லோரும் ஒன்று சேர்ந்து அண்ணனுடன் இணைந்து அறத்தைச் சுருக்கிக்கொள்வது, உயர்ந்த நோக்கத்துக்கு ஊறு விளைவிக்கும்.

ரயில் பயணத்தில் நான்கு பிள்ளைகளுக்கும் தனித்தனி பயணச் சீட்டுதான் வாங்குவான் தந்தை. பெரிய பையனான அண்ணனுடன் தம்பிகளை ஒட்ட வைப்பது இல்லை. இரட்டையர்களாகப் பிறந்தவர்களுக்கு, மனைவிகள் தனித் தனியாக இருப்பார்கள். ஆகவே, சிராத்தங்களையும் பிண்டங் களையும் தனித்தனியே செயல்படுத்த வேண்டும்.

கூட்டுக்குடித்தனமாக ஒரே வீட்டில் ஒரே சமையலில் பிள்ளைகள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் அத்தனைபேரும் இணைந்து இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனது சம்பாத்தியத்தை குடும்பத் தலைவனிடம் அளிக்க வேண்டும். வரவு-செலவு குடும்பத் தலைவன் வசம் இருக்கும். தலைவன் சொற்படி செயல்பட வேண்டும். அதுபோன்ற சூழலில், அண்ணாவை முன்னிட்டு அவரோடு ஒட்டிக்கொண்டு சிராத்தம் செய்யலாம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்