Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

துரையில் பன்னாட்டுத் திரைப்படக் கருத் தரங்கம் மற்றும் பரிசு பெற்ற திரைப் படங்கள் என அனைவரும் வியந்து, மூக்கில் விரல் வைத்து உட்கார்ந்திருந்த நேரத்தில், இலக்கிய மகாசபை கூடியது. 'என்னதான் ஹாலிவுட்ல கோடி கோடியா செலவு செஞ்சு படம் எடுத்தாலும், அங்கே யும்கூட சில சின்ன பட்ஜெட் படங்கள் ஆஸ்கரைத் தட்டிட்டுப் போயிடுது, பாத்தீங்களா?' என்று ராஜன் பேச்சைத் தொடங்கி வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எதைச் சொல்றீங்க?' என்றேன்.

##~##
'அதாங்க, டைரக்டர் ஜேம்ஸ்கேமரூன் 'டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு பல மில்லியன் டாலர் செலவழிச்சு 'அவதார்’ எடுத்தார். ஆனாலும், அவரின் முன்னாள் மனைவி காத்ரின் பிஜிலோ எடுத்த 'ஹார்ட் லாக்கர்’ படம்தான் ஆஸ்கர்ல பெருசாப் பேசப் பட்டிருக்கு!' என்றார் அவர்.

'ஏன் சார், மத்த கிரகங்களைப் பத்தி படம் எடுக் கறாங்களே... அப்படி கிரகங்கள்ல மனுசங்க உண்மையிலேயே இருக்காங்களா?' என்று ஒருவர் சந்தேகம் கிளப்பினார்.

'புராணக் கதைகளில் தேவலோகம், இந்திர லோகம், பாதாளலோகம் என்று ஏழு லோகங்களையும், பல அண்டங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை நாம் சொன்னால் பொய், புளுகு என்று கோபிக்கிறார்கள். இதையே, சயின்ஸ் ஃபிக்ஷன் என்ற பெயரில் மேல்நாட்டுக்காரர்கள் படமாக எடுத்தால் ஆகா ஓகோனு பாராட்டுகிறார்கள்' என்றேன். தொடர்ந்து...

'திரிசங்கு சொர்க்கம் தெரியுமா? அரிச்சந்திரனின் அப்பா திரிசங்கு. இறந்த பிறகு இந்த உயிர், இந்த உடம்பை விட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போகும்கறது நம்பிக்கை. ஆனா, திரிசங்கு தன் குலகுருவான விஸ்வாமித்திரரிடம், 'நான் என் பூத உடலோடு சொர்க்கம் போகவேண்டும்’னு கேட்டுக் கொண்டார். உடனே விஸ்வாமித்திரரும் தன் யோக பலத்தால் திரிசங்கு தன் உடம்புடன் மேலுலுகம் (கூண்டோடு கயிலாசம்) செல்லுமாறு அனுப்பினார். மனிதர்கள் ஸ்தூல சரீரத்துடன் மேலே வர இயலாது; சூட்சும சரீரமாகத்தான் வரவேண்டும்னு சொல்லி, திரிசங்குவைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டார்கள். கீழே விழுந்துகொண்டு இருந்த திரிசங்குவை 'அங்கேயே நில்’லுனு பாதியிலேயே நிறுத்தி, அவருக்காக ஒரு செயற்கை சொர்க்கத்தை உருவாக்கித் தந்தாராம் விஸ்வா மித்திரர். அதுதான் திரிசங்கு சொர்க்கம்!' என்றேன்.

'சரி, இந்தக் கதையையெல்லாம் குழந்தைகள் நம்பும். விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளுமா?' என்று சீரியஸாகக் கேட் டார் ஒரு பேராசிரியர்.

'பூமிக்கு அப்பால் செல்லும்போது புற ஊதாக் கதிர்கள் உடம்பைத் துளைத்துவிடும். அதிலிருந்து பாதுகாக்க விண்வெளிக்குச் செல்கின்ற வீரர்கள் தங்கள் உடம்புக்கு மேலே இன்னொரு உடம்பு போலவே மிகக் கனமான ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள் அல்லவா! அதே போலத்தான் நம்ம புராணத்துலயும், இந்தச் சாதாரண உடம்பால அந்தச் சூழல்ல இருக்கமுடியாதுன்னு திரிசங்கு வைக் கீழே தள்ளியிருக்கலாம். விண்வெளி ஆராய்ச்சிக்காக நிறைய ஸ்கைலேப்களை இன்னிக்கு ஒவ்வொரு நாடும் உருவாக்கி வெச்சிருக்கு. அது போல திரிசங்குக்காக விஸ் வாமித்திரர் சொர்க்கத்தை உருவாக்கியிருக்கலாம்'' என்று நான் சொல்ல... மறுப்பது போல் தலையசைத்துப் புன்ன கைத்தார் பேராசிரியர்.

'சரி, இந்தக் காபியையாவது ஏத்துக்கிட்டுக் குடிங்க! ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பூமியில இடம் பத்தாம, மனுசன் அயல்கிரகத்துக்குப் போகத்தான் போறான். அப்ப அது சொர்க்கமா அல்லது நரகமான்னு பார்த்துடலாம். இப்பவே ஏன் மண்டையை உடைச்சுக்கணும்?!'' என்று சொல்லிவிட்டு, ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதுபோல் வெடிச் சிரிப்பு ஒன்றையும் உதிர்த்து, அன்றைய கூட்டத் துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரங்காச்சாரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism