
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''எப்பவுமே வேலை வேலைன்னு இருந்துட்டிருக்கிற எனக்கு, இந்தப் பயிற்சி புது அனுபவமா இருந்துச்சு. மிகப் பெரிய ரிலாக்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கு'' என்கிறார் வாசகி மீனா.
''கை- கால்களுக்கு ஒரு விடுதலை கிடைச்சது போல இருக்கு. மனைவி கூப்பிடுறாங்களேனு அவங்களுக்காகத்தான் வந்தேன். இனி, இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்'' என்கிறார் பழநி வாசகர் தங்கவேலு.
''இந்தப் பயிற்சில கலந்துக்கணும்னு ஆசைப்பட்டாலும், யோகா மாதிரியான பயிற்சிகளை நாமெல்லாம் செய்ய முடியுமான்னு ஒரு தயக்கமும் இருந்துச்சு. ஆனா, இங்கே வந்து செஞ்சப்பதான், எல்லாமே ரொம்ப எளிமையாவும் ஈஸியாவும் இருக்குங்கறதைப் புரிஞ்சுக்கிட்டேன். இந்த ரெண்டு மணி நேரப் பயிற்சி, என்னைப் புது உலகத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்ட மாதிரி புதுசா இருக்கு!'' என வியப்புடன் சொல்கிறார் ஜனதீஷ்.
வாழ்க வளமுடன்!
- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்