Published:Updated:

அடடா அற்புதம்!

அடடா அற்புதம்!

அடடா அற்புதம்!

அடடா அற்புதம்!

Published:Updated:
அடடா அற்புதம்!
அடடா அற்புதம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ண்களில் மிக முக்கியமான, விசேஷமான எண் ஒன்பது. அந்த எண்ணில் 'நீண்ட வாழ்வு’ எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீன நாட்டு மக்கள். சீனாவின் சின்னமான டிராகன், ஒன்பது வடிவங்களைக் கொண்டது; ஒன்பது குழந்தைகளைக் கொண்டது! சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.

எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!

பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. நவக்கிரகம், நவரத்னம், நவ பாஷாணம், நவ துர்கா, நவச்சக்கரம், நவரசம், நவநாதர்கள் என ஒன்பது ஒன்பதாக உள்ளதை அறிவோம்.  

சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய 9 தலங் களையும் நவக்கிரக தலங்களாகப்போற்றுவோம்.

வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கௌரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத் என ஒன்பது அம்சங்கள் அடங்கியதுதான் நவபாஷாணம் எனப்படும்.

ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கௌரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி என நவதுர்கைகள் உண்டு. இவர்களை வணங்கினால், சகல சந்தானங்களும் வீரமும் தைரியமும் பெற்று வாழலாம்!  

த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சௌபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷ£கர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம் என நவ சக்கரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சக்தி உண்டு என்பதை அறிவோம்!

ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர் ஆகியோரை நவநாதர்கள் எனப் போற்றி வணங்குகின்றனர், பெரியோர்.

மகா புராணங்கள், உப புராணங்கள், ஸ்மிருதிகள், வித்யைகள், வாத்தியங்கள், பாஷைகள், பர்வ பாரதம், மகாபாரத யுத்தம், கீதா அத்தியாயம், ச்வாசினியின் உடையின் நீளம், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தலத்தில் படிகள், சித்தர்கள், மதுரைப் பிள்ளையாருக்கு படி மோதகம்... என சகலமும் அடிப்படை எண் ஒன்பதை மூலமாகக் கொண்டு, 18 விஷயங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அடடா அற்புதம்!

அடுத்ததாக 108... இதுவும் 9-ன் மூலம்தான்! ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படை யாகக் கொண்டதுதான்!

சீக்கியர்கள், 108 முடிச்சுப் போட்ட உல்லன் கொண்டுதான் ஜபிக்கிறார்கள். புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸ¨ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்!

நம் உடலில் ஒன்பது சக்கரங்கள் தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம் ஆகியவை உள்ளன. அது மட்டுமா? இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள் என நவ துவாரங்கள் உள்ளன.  

நம் உடலை, 'நவச் சக்கர ரூப ஸ்ரீசக்கரத்மானே தேகாய நம:’ என்று சொல்லியிருப்பதன் அர்த்தம்... நம் உடலில் தெய்வம் இருக்கிறது. அது வெட்டாத ஸ்ரீசக்கரம் (தேகம்),  பேசாத மந்த்ரம் (ஓம் எனும் பிரணவம்), பிரத்யேக புஷ்பம் (ஹ்ருதயம்), வெளியே சென்று கொண்டு வராத தீர்த்தம் (கண்ணீர்), விக்ரகம் (சங்கல்பம் -  விகல்பம் இல்லாத நிலை), முடியாத பூஜை (எப்போதும் தெய்வ சிந்தனை) ஆகியவற்றுடன் திகழ்கிறது. இந்த பூஜைக்கு எதுவும் வேண்டாம். புஷ்பம், பால் பழங்கள், தூபம் தீபம், ஆரத்தி  என எதுவும் இல்லாத ஆத்ம பூஜை. இதையே ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீசௌந்தர்ய லஹரியில் 27- வது  ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார். திருமூலரும், 'உள்ளம் பெருங்கோயில்...’ பாடலில் விவரித்திருப்பார். இந்த பூஜையின் விரிவான விளக்கத்தை 'பாவனௌபநிஷத்’தில் காணலாம்.

ஸ்ரீலலிதா நவரத்ன மாலையை அருளிய ஸ்ரீஅகத்தியர் தன் இல்லாள் லோபமுத்ரையுடன் திருமீயச்சூர் அம்பிகையை தரிசனம் செய்துவிட்டே இதைப் பாடினார். நவக்கிரக நாயகி, நவசக்கர ரூபினி, ஸ்ரீலலிதாம்பிகையின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism