
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மும்பை - செம்பூர் முருகன் கோயிலில் ஆமை வடிவத்திலான பீடத்தில் 12 ராசிகள், சப்த கன்னியர், அஷ்டதிக் கஜங்கள் பொறிக்கப்பட்டு, அவற்றின் மீது நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளன.
மருது பாண்டியரின் வயிற்று வலி தீர்த்த ஸ்ரீசண்முகர் அருளும் தலம் குன்றக்குடி. இங்கே இடும்பனின் சந்நிதி தாண்டினால், சிற்ப வேலைப்பாடு மிகுந்த நர்த்தன விநாயகரைத் தரிசிக்கலாம். ஸ்ரீசண்முகர் தனி மயிலிலும், வள்ளி- தெய்வானை தேவியர் தனித்தனி மயில்களில் அமர்ந்தருள்வதும் இங்கே விசேஷம்!
திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள திருமலைக்கேணி கோயிலில், ஸ்ரீமுருகன் விக்கிரகத்தின் கீழ் ஒரு துவாரம் இருக்கும். அதனுள்ளும் ஒரு தண்டபாணி மூர்த்தம் உள்ளது. அவரை மேலே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய முயன்றபோது, 'அவரை அகற்ற வேண்டாம், மேலே இன்னொரு மூர்த்தம் வைத்து வழிபடுக; அந்த மூர்த்தத்துக்கான அபிஷேகங்களையே கீழேயுள்ள மூர்த்தமும் ஏற்கும்’ என வாக்கு வந்ததாம். அப்படியே செய்தனர். எனவே, இங்கு இரண்டு தண்டபாணிகளின் அருட்கடாட்சம் கிடைக்கிறது நமக்கு.
- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு
- மீ.சொர்ணம், உடுமலைப்பேட்டை

