Published:Updated:

மரகதவல்லியின் மணக்கோலம்!

மரகதவல்லியின் மணக்கோலம்!

மரகதவல்லியின் மணக்கோலம்!

மரகதவல்லியின் மணக்கோலம்!

Published:Updated:
மரகதவல்லியின் மணக்கோலம்!
##~##
தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருமணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் வேண்டியும், குழந்தைப் பேறுக்காகவும் கயல்விழியாள் மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையின் கருணை கடாட்சத்தைப் பிரார்த்திக்கும் பக்தர்கள், ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் புண்ணிய காலம்- சித்திரை. ஆமாம்... ஸ்ரீமீனாட்சி திருக் கல்யாணம் நிகழும் அற்புத மாதம் இது!

மதுரை சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொண்டு அம்மையப்பனின் கல்யாணக் கோலத்தை கண்ணாரத் தரிசிக்க, மேற்சொன்ன வரங்கள் யாவும் தடையின்றி கிடைக்கும் என்பது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. சூழலின் காரணமாக மதுரைக்கு அன்று வர இயலாதவர்களும், அன்னையின் திருக் கல்யாணக் கதையைக் கேட்டு மகிழ்வர். இதனால், திருக்கல்யாணத்தை நேரில் தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு!

மலையத்துவஜ பாண்டியனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெரியோர் ஆலோசனைப்படி எண்ணற்ற யாகம் நிகழ்த்தினான்; தவம் செய்தான்; சாட்சாத் பராசக்தியே தனக்கு மகளாகப் பிறக்கும் வரம் வேண்டினான். வேண்டு தல் பலித்தது. புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக, ஆதிசக்தியே பெண் குழந்தையாய்

அவதரித்தாள். மன்னன் அகமகிழ்ந்தான். ஆனாலும், அந்தக் குழந்தை மூன்று தனங்க ளுடன் (மார்புகளுடன்) திகழ்ந்தது கண்டு கலங்கினான். அப்போது, ''மன்னா, குழந்தை பருவமெய்தி தன் மணாளனைக் காணும் தருணம் மூன்றாவது தனம் மறையும்'' என்றது. அசரீரி. மன்னன் அமைதியானான். குழந்தைக்கு தடாதகை எனப் பெயர்சூட்டி வளர்த்தான்.

மரகதவல்லியின் மணக்கோலம்!

காலங்கள் ஓடின. மலையத்துவஜனுக்குப் பிறகு ஆட்சிப் பீடமேறினாள் தடாதகை. எண்திசையையும் வெல்ல திக்விஜயம் புறப்பட்டாள். வெற்றி மேல் வெற்றி பெற்றவள், கயிலையையும் முற்றுகையிட் டாள். பூத கணங்களை வென்று முன்னேறிய தடாதகை, சிவனாரை எதிர் கொண்டாள். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது; அவளின் மூன்றாவது தனம் மறைந்தது. தென்னாடு கொள்ள வரப் போகும் மன்னவர் சிவனாரே என்பதை உணர்ந்தவள் நாணிக் குனிந்தாள்.

விஷயம் அறிந்த மதுரை விழாக்கோலம் பூண்டது. விரைவில் ஈரேழு பதினான்கு உலகங்களும் வியக்க... சுந்தரேஸ்வரர்- மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தேறியது. மகிமை மிகுந்த இந்த மங்கல வைபவம்... வையம் வளம் பெற இன்றும் கொண்டாடப்படுகிறது.

மீனாட்சி அரசாளும் நான்மாடக் கூடல் சித்திரை மாதம் களைகட்டத் துவங்கிவிடும். முறைப்படி கொடியேற்றத் துடன் துவங்கும் சித்திரைத் திருவிழாவில்... மீனாட்சி திக்விஜயம், திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த வைபவங்கள் ஆகும். கள்ளழகர் சித்திரைத் திருவிழா மதுரைக்கு அருகிலுள்ள தேனூர் என்ற கிராமத்தில் நடந்து வந்தது. அப்போது மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க அவர் தேனூருக்கு எழுந்தருள்வார். பொதுமக்களின் வசதிக்காக, இதை சித்திரை மாதத்தில் திருக்கல்யாண உற்சவமாகவும், வைகையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவமாகவும் மன்னர் திருமலை நாயக்கர் மாற்றி அமைத்தாராம்!

சகல சம்பத்துக்களும் அருளும் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு, மீனாட்சியம்மையின் திருக்கல்யாண பிரசாதமாம்  மஞ்சள்சரடு பெற்று வாருங்கள். உங்கள் இல்லங்களில் மங்கலங்கள் பெருகும். அப்படிச் செல்ல இயலாதவர்கள் ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணக் கதையைப் படிப்பதும், கேட்பதும் சிறப்பு. அத்துடன் ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தை தியானித்து, கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்; வாழ்வு வளமாகும்!

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரம்

ஸுமீனாக்ஷி ஸுந்தரேஸெள பக்தகல்பமஹீருஹெளமி
தயோரனுக்ரஹோ யத்ர தத்ர ஸோகோ ந வித்யதேமிமி

ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு இஷ்டத்தைக் கொடுக்கும் கற்பக மரங்கள். அவர்களின் அனுக்கிரஹம் இருக்கும் இடத்தில் சோகம் இல்லை!

தொகுப்பு: நமசிவாயம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism