நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

விளக்கு பூஜை: திருச்சி ஸ்ரீஎறும்பிஸ்வரர் கோயில்

விளக்கு பூஜை: திருச்சி ஸ்ரீஎறும்பிஸ்வரர் கோயில்

விளக்கு பூஜை: திருச்சி ஸ்ரீஎறும்பிஸ்வரர் கோயில்

திருச்சி- திருவெறும்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் கோயிலில், 4.1.11 அன்று மாலை, சாரை சாரையாக வந்து குவிந்துவிட்டனர், சக்தி விகடன் வாசகிகள். சக்தி விகடனும் நயஹாவும் இணைந்து நடத்துகிற திருவிளக்கு பூஜைக்குதான் இத்தனைக் கூட்டமும்!  

''சக்தி விகடன் நடத்தற 51-வது விளக்கு பூஜைல கலந்துக்கிட்டதுல ரொம்பவே பூரிப்பா இருக்கு, மனசு. என் தங்கச்சி பொண்ணு, பிளஸ்-டூ எழுதுறா. ஸ்டேட் லெவல்ல மார்க் எடுக்கணுங்கறதுக்காகத்தான், அவ்வளவு தொலை விலேர்ந்து வந்து கலந்துக்கிட்டேன்'' -பரவசத்துடன் சொல்லும் தனபாக்கியம், கோவையில் இருந்து வந்திருந்தார்.

''முன்னெல்லாம் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வருவேன்.

ஆனா, பல வருஷமா வர முடியலை. இப்ப, எனக்குப் பிடிச்ச சக்தி விகடன், எனக்குப் பிடிச்ச எறும்பீஸ்வரர் கோயில்ல விளக்கு பூஜை நடத்தற அறிவிப்பைப் பாத்த தும், எங்கேருந்துதான் எனக்கு அத்தனை உற்சாகமும் தெம்பும் வந்துச்சோ தெரியலை... மலையேறி, இதோ விளக்கு பூஜைலயும் கலந்துக்கிட்டாச்சு!'' என நெகிழ்ச்சியுடன் சொல்லும் திருவெறும்பூர் வாசகி தெய்வானைக்கு வயது 78.

விளக்கு பூஜை: திருச்சி ஸ்ரீஎறும்பிஸ்வரர் கோயில்

''கன்ஸீவாகி இருக்கேன். 'திருச்சிக்கு நீ வந்திருக்கிற நேரத்துல, சக்தி விகடனின் விளக்கு பூஜையும் இங்கே நடக்கப்போகுது. அதில் கலந்துக்கிட்டு மனசார வேண்டிக்கிட்டா, சுகப் பிரசவம் நிச்சயம்’னு தோழிகள் சொன்னாங்க. வந்து, பூஜையெல்லாம் பார்க்கப் பார்க்க, அடிவயிறு அப்படியே குளிர்ந்துபோச்சு! சக்தி விகடனுக்கு நன்றி. வேறென்ன சொல்றது?!'' - ஆனந்தக் கண்ணீர் பொங்கச் சொன்ன வாசகி பூர்ணா மணிகண்டன், டெல்லியில் இருந்து வந்திருந்தார்.

'பையனுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்’ எனும் வேண்டுதலுடன் வாசகிகள் வித்யா தேவியும், ராஜாமணியும் கலந்துகொண்டனர். ''என் பையன் டிப்ளமோ முடிச்சிட்டு, வெளிநாடு போக முயற்சி பண்ணிட்டிருக்கான். அவனோட ஆசை நிறைவேறணும்'' என்று தனது பிரார்த்தனையைத் தெரிவித்தார், வாசகி அறிவுச்செல்வி. 'கணவரின் நகைத்தொழில் சிறக்க வேண்டும்’ என்கிற வேண்டுதலுடன், தனது ஒன்பது மாதக் குழந்தையோடு விளக்குபூஜையில் கலந்துகொண்டார் வாசகி மகாலட்சுமி. 'கணவருக்கு அரசு வேலை கிடைக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை’ என்றார் சென்னை வாசகி சுமித்ரா.

விளக்குபூஜை சிறப்புற நடந்து முடிந்ததும், 'நம் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றித் தருவார், எறும்பீஸ்வரர்’ எனும் நம்பிக்கை முகங்களில் பிரகாசிக்க, புத்துணர்ச்சியுடன் விடைபெற்றனர் வாசகியர்.

  - க.ராஜீவ்காந்தி
படங்கள்: ந.வசந்தகுமார்