Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

யோத்தி- கல்வியில் சிறந்த மாநகரம் எனச் சிறப்பிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏகம் முதற்கல்வி முளைத்  தெழுந் தெண் ணில்கேள்வி
ஆகும் முதல் திண் பணைபோக்கி  அருந்த வத்தின்
சாகம் தழைத்(து) அன்பு அரும்பித்  தருமம் மலர்ந்து
போகம் கனியன்று பழுத்தது  போலு மன்றே

##~##
அதாவது, கல்வி எனும் விதையில் முளைத்த விருட்சம், எண்ணற்ற கேள்விகள் மற்றும் ஆராய்ச்சிகள் எனும் கிளைகளைப் பரப்பி நின்றது. அந்தக் கிளைகளில் தவமும் ஒழுக்கமும் இலைகளாகத் துளிர்த்தன. அன்பும் அரும்பியது. அந்த அன்பில் இருந்து தருமம் மலர்ந்தது. தரும மலர் காய்த்து... போகம் அல்லது இன்ப வாழ்வாகக் கனிந்தது. அயோத்தி மக்கள் அதைப் புசித்து மகிழ்ந்தனர் எனச் சுவைபடக் கூறுகிறார் கம்பர். கல்வியால் கிடைக்கும் பலனை விவரித்து, அந்தப் பலனை முழுமையாக அனுபவிக்கும் மக்கள் நிறைந்த நகரம் என அயோத்தியைப் புகழ்கிறார்!

அந்த அற்புத நகரின் மேன்மையை மேலும் காண்போம். அந்த ஊரின் மாட-மாளிகைகள் மிக்க ஒளியோடு திகழ்ந்தனவாம். காரணம்?!

ஆவினத்தின் பால் கரந்து, உறை குத்தி, நெய் எடுத்து அதில் ஏற்றும் திருவிளக்கு தீபச்சுடராலா? அல்லது பகலவன்... இரவில் பால் நிலவு என இயற்கை ஏற்றி வைத்த வான் விளக்குகளாலா?  

இரண்டுமே காரணம் அல்ல! பிறகு...

'மணிவிளக் கல்லன மகளிர் மேனியே...’ காரணமாம்!

அதாவது, ஞானச்சுடராய் திகழ்ந்த அயோத்தி நகர் மங்கல மங்கையரின் மேனி ஒளியே, அவர்களது மாளிகையில் திகழும் பேரொளிக்குக் காரணமாம்! மேனிச் சுடருடன் மட்டுமல்ல ஞானச் சுடருடனும் திகழ்ந்தனர் அந்த மங்கையர். அதனால் அவர்கள் இல்லங்களும் ஒளிர்ந்தன.

எனில், அயோத்தியின் அரண்மனை?!

அது, அங்கு பிறந்து தவழும் தருமமாகிய 'ஸ்ரீராம’ ஜோதியால் ஒளிர்ந்தது.

'அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி...’

தசாவதாரம் திருத்தலங்கள்!

- என்கிறார் குலசேகராழ்வார். அந்தச் சூரியகுல திருவிளக்கை- ஸ்ரீராமனை, தர்மத்தின் திருமேனி எனப் போற்றுவர் ஆன்றோர். ஞானநூல்களும் 'உருவம் ஒன்றும் இல்லாத தருமம் உருவம் பெற்ற போது, ஸ்ரீராமனாய் திகழ்ந்தது’ எனச் சிலாகிக்கின்றன!

அன்னை கோசலையின் பாலூட்டலில், சிற்றன்னை கைகேயின் சீராட்டலில், அயோத்தியின் அரண்மனையில் தளிர்நடை போட்டு வளர்ந்தது தர்மம்.

'வா... வா... அமுதுண்ணலாம்’ என அம்மா அழைப்பாள். அவளுக்கு 'ப்போ... ப்போ...’ என போக்குக் காட்டி விட்டு, சிற்றன்னையிடம் ஓடி வந்து, அவள் கழுத்தைக் கட்டிக்கொள்ளும்; எச்சில் முத்தம் தந்துவிட்டு, கைகேயியின் முகம் பார்க்கும். அவள் சிரிப்பாள்; தர்மமும் பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பின் ரகசியத்தை கைகேயி மட்டுமல்ல, காலமும் அப்போது உணரவில்லை!

தர்மம் இன்னும் வளர்ந்தது. தம்பிகளுடன் விளையாடியது. அது போதுமா? காலத்துடனும் சற்று விளையாட வேண்டாமா? ஏதாவது செய்து அந்தச் சக்கரத்தை ஒரு சுற்று சுழற்றி விட்டால்தானே... பூமிக்கு வந்த காரியம் இனிதே ஆரம்பிக்கும். தர்மம் விளையாடத் துவங்கியது!

ஒரு நாள்...  மந்தரைப் பாட்டி அந்தப்புரம் நோக்கிச் செல்வதைக் கண்டது. அந்தப் பாட்டியை அம்மா கைகேயியின் வளர்ப்புத் தாய் என்றே சொல்லலாம். அவள் மீது அம்மாவுக்கு பரிவு அதிகம். தந்தை தசரதருக்கு கைகேயியை மணம் செய்து வைத்தபோது, ஏராளமான சீதனம் கொடுத்தாராம் தாத்தா கேகயத்தரசன். அந்தச் சீதனங்களுடன் சேர்த்து இந்த மந்தரைப் பாட்டியும் வந்து விட்டாள் என்று வேடிக்கையாய் சிற்றன்னை கைகேயி சொல்வது உண்டு.

தசாவதாரம் திருத்தலங்கள்!

தொட்டதற்கெல்லாம் கோபித்துக் கொள்வாள் மந்தரைப் பாட்டி.

ஆனாலும் அவளை மிகவும் நேசித்தது தர்மம். ஆனால், அவளுக்குத்தான் தர்மம் என்றாலே ஆகாது!

'அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா என்ன? ஏதாவது செய்ய வேண்டும். தம்பி பரதனைக் கொஞ்சுவது போல் என்னை அவள் கொஞ்சக்கூட வேண்டாம்... உரிமையோடு கோபிக்கலாம் இல்லையா? அதைக் காரணம் வைத்து அடிப்பது போல், என்னைத் தொடலாம் இல்லையா? இப்படி ஒட்டுமொத்தமாய் அவள் என்னைப் புறக்கணித்தால் எப்படி... விடக்கூடாது’

தர்மம் ஒரு முடிவுக்கு வந்தது. கையிலே கவண். பசுந்தரையில் புற்களை விலக்கி, சிறு களிமண் உருண்டையை கையில் எடுத்தது. கவணில் பூட்டி, ஒற்றைக் கண் மூடி குறிப் பார்த்தது.

பாவ மூட்டையை முதுகில் சுமப்பது போன்று, மந்தரைப் பாட்டி யின் கூன் முதுகு புடைத்துத் தெரிய... கவணில் இருந்து புறப்பட்ட களிமண் உருண்டை, பாட்டியின் கூன் முதுகை தாக்கியது!

கண நேரத்தில் மிக அற்புதமானதொரு பிரபஞ்ச விளையாட்டு அங்கே துவக்கி வைக்கப்பட்டது. அதற்கான விசையை தர்மம் கனகச்சிதமாக அழுத்திவிட்டது. இனி, காலச்சக்கரம் பழுதின்றி சுழலும். தடையின்றி செயல்படும். அதனால் நடக்கவேண்டியவை செவ்வனே நடக்கும்.

அன்று பாற்கடல் சூழ நின்று தேவர்கள் வேண்டுகோள் விடுத் தார்கள் அல்லவா... 'ராவணனை வதைக்க வேண்டும். மானிடன் ஒருவனால்தான் மரணம் என்று வரம்பெற்றவன் அவன். ஆகவே தாங்கள் மனிதனாகப் பிறக்க வேண்டும். பிறந்து, பூவுலகில் மீண் டும் தருமம் தழைக்க வழி செய்ய வேண்டும்’ என்று!

அவர்களது அந்தப் பிரார்த்தனை நிறைவேறும்.

அதற்கு முன்னோட்டமாக... கைகேயிக்கு தசரதர் கொடுத்த வரங்களுக்கு வேலை வரும்; தசரதருக்கு ச்ரவணகுமாரனின் தந்தை கொடுத்த சாபம் பலிக்கும் காலம் வரும். இப்படி சங்கிலித் தொடராகும் நிகழ்வுகளின் நிறைவில், தர்மம் அதர்மத்தை வெல்லும்!

அதுசரி... கைகேயியிக்கு தசரதர் அப்படியென்ன வரங்களைக் கொடுத்தார்? ஏன் கொடுத்தார்? ச்ரவணகுமாரனின் தந்தை எதற்காக தசரதரைச் சபிக்க வேண்டும்?

- அவதாரம் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism