Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எல்லாம் என் தலையெழுத்துன்னு முடங்கிக் கிடந்தவதான் நான். பட்டதெல்லாம் போதும்; இதுதான் இந்த ஜென்மத்து வேதனைன்னு இருந்தப்ப... 'அதெல்லாம் இல்லை. உன் வாழ்க்கைல சந்தோஷம் இருக்கு; உனக்கு நிம்மதி கிடைக்கப் போகுது'ன்னு எனக்கு உணர்த்தின இடம்... திருப்பட்டூர்!'' என்கிறார் தஞ்சாவூர் வாசகி ராஜலட்சுமி.

மனம் முழுவதும் துக்கத்துடன் வந்தவர்கள், திருப்பட்டூரில் இருந்து திரும்புகிறபோது மனம் கொள்ளாத சந்தோஷத்துடன் செல்கிறார்கள். வாழ்வதற்கு சாவதே மேல் என்று சுருங்கிக் கிடந்தவர்கள், ஒருமுறை இங்கு வந்துவிட்டுத் திரும்பினால், வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடனும் வாழ முடியும் என்கிற நம்பிக்கையுடனும் குதூகலமாகச் செல்வார்கள்.

''கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு கனவு மாதிரி வந்துட்டு, தடால்னு கலைஞ்சு போயிருச்சு எனக்கு! அந்த வலியிலேருந்தும் வேதனையிலேருந்தும் என்னால மீள முடியலை. என்னைப் பாக்கும்போதெல்லாம், என்னைப் பெத்தவங்க இன்னும் தவிச்சுப் போனாங்க.

'நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் ராஜி’ என்று வீட்ல சொன்னப்ப ஏத்துக்காமலேயே இருந்தேன். ஒருகட்டத்துல அதுதான் நம்ம வீட்டாருக்குச் சந்தோஷம்னு நினைச்சு, ஏத்துக்கத் தயாரானேன். ஆனா என்னை மனைவியா ஒருத்தர் ஏத்துக்கணுமே...?

இந்த நேரத்துலதான், சென்னைல எங்களுக்குத் தெரிஞ்ச மீனாட்சி மாமி போன் பண்ணி, 'திருச்சிக்குப் பக்கத்துல இருக்கற திருப்பட்டூருக்கு ஸ்வாமி தரிசனம் பண்ண வரலாம்னு இருக்கோம். நீங்களும் அப்படியே திருச்சி வந்துருங்களேன். சக்தி வாய்ந்த அந்தத் தலத்துக்கு நீங்களும் வந்தது போல ஆச்சு. உங்களையெல்லாம் ரொம்ப வருஷம் கழிச்சு, நாங்க பார்த்தது போலவும் ஆச்சு’ன்னு சொன்னாங்க.

##~##
அதனால நான், அம்மா எல்லாருமா சேர்ந்து திருச்சிக்குப் போனோம். பிறகு அங்கிருந்து அவங்களோட திருப்பட்டூருக்குப் போனோம். அடேங்கப்பா... என்ன அழகான கோயில் அது! உள்ளே நுழைஞ்சு, தனிச்சந்நிதியில இருக்கிற ஸ்ரீபிரம்மாவைப் பார்த்ததும் பிரமிப்பா இருந்துச்சு. நம்மளோட தலையெழுத்தையே மாத்தி அருள்வார் ஸ்ரீபிரம்மான்னு அங்கேயிருந்த அர்ச்சகர் விவரிக்க விவரிக்க... 'என் தலையெழுத்தையும் மாத்தி, எனக்கு நல்ல வழி காண்பியேன்!’னு அழுதுட்டேன் நான்.

அடுத்து, ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலுக்கும் போயிட்டு வந்தோம். அங்கேயும் ஏதோவொரு மனநிறைவு சட்டுன்னு வந்துச்சு. கோயில் முடிச்சுட்டு, திருச்சிக்கு வந்தப்ப அம்மாவுக்கு போன்... 'உங்க பொண்ணு பத்தி எல்லாம் கேள்விப்பட்டோம். இன்னிக்கி சாயந்திரமா பொண்ணுப் பாக்க வரோம்’னு சொன்னாங்க. இதைக் கேட்டதும் என் வீடு அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

சாயந்திரம்... மாப்பிள்ளை வீட்லேருந்து வந்தாங்க. எல்லா விவரமும் சொன்னாங்க. நாங்களும் முழு விவரத்தையும் சொன்னோம். அடுத்த மாசமே கல்யாணத்தை வைச்சுக்கலாம்னு சொன்னாங்க. அதன்படி சிம்பிளா நடந்தாலும் சீரும் சிறப்புமா எல்லார் ஆசீர்வாதத்தோடயும் நடந்துச்சு கல்யாணம்! இது அத்தனைக்கும் திருப்பட்டூர் பிரம்மாவின் பேரருளே காரணம்!

இது ஒரு விஷயம்... நாங்க திருப்பட்டூர் கோயிலுக்குப் போனது ஒரு ஆடிப்பூர நன்னாளில்! எனக்கு வாழ்க்கை கொடுத்த, என் கணவர் வெங்கட்ரமணன் பூரம் நட்சத்திரம். நினைக்க நினைக்க சிலிர்ப்பாயிருச்சு'' என்று நெக்குருகிப் பேசுகிற ராஜலட்சுமி, தற்போது நினைத்த போதெல்லாம் திருப்பட்டூருக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''இந்த ஜென்மத்துல, ராஜலட்சுமிதான் என் மனைவின்னு நான் தீர்மானம் பண்ணினது எப்ப தெரியுங்களா? நானும் கல்யாணமாகி விவாகரத்து வாங்கி, தனியனா இருந்த சமயம் அது! அப்பத்தான் என் வீட்டாருக்கு, ராஜியைப் பத்தித் தெரியவந்துச்சு. அடுத்த கல்யாணம்லாம் வேண்டவே வேண்டாம்னு மறுத்த நான், ஒருவழியா ஒத்துக்கிட்டப்ப... எங்க அம்மா அவங்க வீட்டுக்குப் போன் பண்ணி, சாயந்திரம் பொண்ணு பாக்க வர்ற விஷயத்தைச் சொன்னாங்க. சொல்லி முடிச்சிட்டு, 'அவங்க எல்லாம் திருப்பட்டூர் போயிருக்காங்களாம். சாயந்திரம் வந்துருவாங்களாம்’னு அம்மா சொன்னதும்... ஒருகணம் ஆடிப் போயிட்டேன்.

ஏன்னா... திருப்பட்டூர் கோயிலுக்குப் போய், 'என் தலையெழுத்தை மாத்த மாட்டியா? என் வாழ்க்கைல எனக்கு நல்லதே நடக்காதா?’னு பலமுறை கதறி அழுது வேண்டிக்கிட்டிருக்கேன் நான்! இப்ப அந்தப் பெண்ணும் அந்தத் தலத்துக்குத்தான் போயிருக்காங்கன்னு தெரிஞ்சதும் 'இது தெய்வ சங்கல்பம். இவங்கதான் ஆயுள்பரியந்துக்குமான உறவு’ன்னு உள்ளே தோணிருச்சு. அம்மாகிட்ட என் சம்மதத்தைத் தெரிவிச்ச அடுத்த மாசமே எங்க கல்யாணமும் நடந்துச்சு.

எங்கே இருக்கிறது?

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு; ஆனாலும் குறைவுதான்!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூருக்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

வாழ்க்கைல அவமானத்தையும் வலியையும் மட்டுமே பாத்த நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கி சந்தோஷமும் நிம்மதியுமா, கணவன் மனைவியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அன்னிலேருந்து திருப்பட்டூர் பிரம்மா எங்களோட இஷ்ட தெய்வமாயிட்டார்'' என்று சிலிர்ப்பு மாறாமல் தெரிவிக்கிறார் வெங்கட் ரமணன்.

''பிரதோஷம், சிவராத்திரி, ஆடிப்பூரம், திருக்கார்த்திகைன்னு எதுனா நல்ல நாள் வந்துச்சுன்னா, திருப்பட்டூர் போய் ஸ்வாமி தரிசனம் பண்றது வழக்கமாயிருச்சு. திடீர்னு கிளம்பி, பிரம்மாவுக்குத் திருமஞ்சனம் பண்ணுவோம். இன்னொரு நாள்... ஸ்ரீபிரம்ம சம்பத்கௌரிக்கு புடவை சார்த்திட்டு வருவோம். ஒரு வியாழக்கிழமை அங்கே போய், 'ஸ்ரீவியாக்ரபாதர் மற்றும் ஸ்ரீபதஞ்சலி முனிவர் சமாதிகளுக்கு வஸ்திரம் சார்த்துவோம். எங்களோட இன்றைய ஒவ்வொரு நாள் சந்தோஷத்துக்கும் காரணமான திருப்பட்டூர் தலத்தை எங்களால மறக்கவே முடியாது'' - கண்ணீருடன் சொல்கிறார் ராஜலட்சுமி.

''திருப்பட்டூர் போய் ராஜலட்சுமிக்குத் திருப்பம் ஏற்பட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அதேபோல, என் பொண்ணு சாந்திக்கு ஏனோ கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருந்துச்சு. ராஜிக்குக் கல்யாணமான அடுத்த வருஷம், குடும்ப சகிதமா திருப்பட்டூர் போனோம். என் பொண்ணும் வந்திருந்தா. ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில்ல மனமுருகி வேண்டிட்டு வந்தோம். பிறகென்ன... அடுத்த ரெண்டே மாசத்துல அருமையான வரன் தகைஞ்சு வந்துச்சு. இன்னிக்கி சென்னை மந்தவெளில கணவர், குடும்பம்னு ஜாம்ஜாம்னு இருக்கா என் பொண்ணு. இதுல ஒரு வேடிக்கை பாருங்கோ... என் பொண்ணும் ஆடிப்பூரம் அன்னிக்குத்தான் திருப்பட்டூர்ல தரிசனம் பண்ணினா. அவங்க கணவரும் பூரம் நட்சத்திரம்தான்! என்ன மிராக்கிள் பாருங்களேன்'' என்று ஆச்சரியத்துடன் சொல்கிறார் சாந்தியின் அம்மா மீனாட்சி.

இப்படி... எத்தனையோ அன்பர்களுக்கு பல நல்ல திருப்பங்களைத் தந்து கொண்டிருக்கிறது திருப்பட்டூர்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism