Published:Updated:

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

Published:Updated:
ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?
ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

அவசர உலகவியலில் கடவுளை வணங்க நேரம் இல்லை. ஆனால் அவரின் திருவருள் வேண்டும். என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மீனாட்சி, மேலூர்

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

ஆன்ம வடிவில் கடவுள் உடலில் உறைந்திருக்கிறார். தங்கள் மனம் செயல்பட, அவரது தொடர்பு காரணம். சிந்தனை தங்களுடையதாக இருந்தாலும் அது செயல்பட அவரின் தொடர்பு வேண்டும்.

அவரை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் தங்கள் மனதோடு எப்போதும் அவர் இணைந்திருக்கிறார். மனம், கடவுளை நினைவுகூர நேரம்-காலம் ஒதுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. 'என்னோடு இணைந்து இருக்கிறார்’ என்ற எண்ணமே இறை வணக்கமாக மாறி விடும். அகங்காரத்தில் அவரை மறக்காமல் இருந்தாலே போதுமானது. அகங்காரம் விலகியவுடன் அவர் நினைவு வரும். நினைவு சிந்தனையை நல்வழிப்படுத்தும். ஆகையால், அவரை நினைத்தால் போதும்; பயன் உண்டு. ஒன்பது வகை பக்தி வழிபாட்டில் 'நினைப்பும்’ (ஸமரணம்) ஒன்று. தங்களுக்கு அவன் அருள் கிடைத்து விடும்.

ஆன்மிகத்தில் ஆண்மைக்கு முன்னுரிமை அளித்து பெண்மையை இரண்டாவதாக தரம் தாழ்த்துவது சரியா?

- சாவித்திரி, கோவை

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

இப்படியரு எண்ணம் தங்கள் சிந்தனையில் எழுந்தது தங்களது அறியாமையே! ஆன்மிகத்தில் நுழைய மனமில்லாமல், அதன் பலனைப் பெற இயலாமல்... பயன்பெற்றவர்களைப் பார்த்து வந்த ஏக்கமும் சோர்வும், குறையை மற்றொரு இடத்தில் சுமத்தி ஆறுதல் பெற விரும்புகிறது.

முனிவர்களின் மனைவிமார்கள் அத்தனைபேரும் ஆன்மிகத்தில் சிறந்தவர்கள். தம்பதி பூஜையும், சுவாசினி பூஜையும், நவராத்ரி 9 நாட்களில் ஒவ்வொரு நாளும் நடைபெறும். கன்யகா பூஜையும், ஸுமங்கல்ய பிரார்த்தனை யும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கை எடுத்துக்காட்டும்.

பூணூல் கல்யாணத்தில் தாயை வணங்கி பி¬க்ஷ பெறும் சிறுவன், கணவனுக்கு ஒளபாசனத்தில் ஹவிஸ்யை அளிக்கும் மனைவி, பச்சைப்பிடி சுற்றும் ஆரணங்குகள், ஹாரத்தி எடுத்து வரவேற்கும் ஸுமங்கலிகள், பாலிகை தெளிக்கும் பெண்மணிகள், ஆல் மொட்டுகளை அரைக்கும் சிறுமிகள்... அத்தனையிலும் பெண்மைக்கு முதலிடம் உண்டு.

வேள்விக்கு அவளே அக்னி அளிக்க வேண்டும். ஸாவித்ரீ விரதம், பிருந்தாவன த்வாதசி போன்ற விரதங்கள் பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றன. ஆண் குழந்தைகளை ஈன்றவள் அவள் என்பதால் பெண்மைக்கு முதலிடம் உண்டு.

அரக்கர் குலத்தை அழிக்க பெண் வடிவெடுத்து வந்தவள் மஹிஷாசுரமர்த்தினி. 'எப்போதெல்லாம் அரக்கர்கள் தொல்லை தலை தூக்குமோ அப்போதெல்லாம் நான் தோன்றி உங்களையும் உலகையும் பாதுகாப்பேன்’ என்று சொன்னது பெண்மை (இத்தம் யதா யதா பாதா தான வோத்தாபவிஷ்யதி...).

தேவி மஹாத்மியம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் பெண்மையின் பெருமையைப் போற்றிப் புகழ்கின்றன. ஆண்களைவிட எதிலும் குறையாத பெருமை பெற்றவர்கள் பெண்கள் என்பதை வேதம், புராணம், இதிஹாசம் அத்தனையும் வலியுறுத்தும்.

ஆகவே, சுணக்கமுற்று செயல்படாமல் ஒதுங்கியிருப்பது தவறு. உரிமை இருந்தும் உபயோகப்படுத்தாமல் இருந்துகொண்டு, தனது தவற்றை மறைக்க வேறு காரணம் தேடுவது சரியாகாது. தற்போது முழு சுதந்திரத்தில் வளைய வரும் பெண்மை, தன்னை உயர்த்திக் கொள்ள வழி இருந்தும் ஆண்மைக்கு அடிபணிந்து அடிமையாக ஆக்கிக்கொள்வது தவறு. உணர்ந்து செயல்படுங்கள்.

திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கவேண்டும் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ பார்க்க வேண்டாம் என்கிறார்கள். 'பொருத்தம் பார்க்க வேண்டும்’ என்று மனம் எண்ணுகிறது. ஆனால் நாம் விரும்பிய வரன் கிடைக்கத் தாமதம் ஆகிறது. ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது. என்ன செய்வதென்று தெரிய வில்லை. வழி சொல்லுங்களேன்.

- மணிகண்டன், நெல்லை

ஆன்மிகத்தில்... பெண்மைக்கு முன்னுரிமை கிடையாதா?

'ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது சிறப்பு’ என்கிறது  ஜோதிடம் (தம்பத்யோ: ஜன்ம தாராத்யை:ஆனுகூல்யம் பரஸ்பரம். விசின்த்ய உபயம்: கார்ய:...). அதற்கு ஒரு சட்டதிட்டம், நடைமுறை, குறிக்கோள் என்று உண்டு.

ஆனால், பெரும்பாலும் அதை முறையாகப் பயின்ற ஜோதிடர்கள் அரிதாகி விட்டனர்.  விஞ்ஞான முறையில் ஜோதிட விளக்கம், தைவிக அஸ்ட்ராலஜர் (டிவைன்) - என்று விஞ்ஞான விளக்கத்தையும் ஆன்மிகத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டு விளக்கம் அளிப்பவர்கள் ஏராளம். சொல்வளமும், அதை பிறரை ஏற்க வைக்கும் திறமையும் இருந்தால் உயர்ந்த ஜோதிடராக மாறலாம். அது உண்மை விளக்கத்தை பின்தள்ளிவிடுவதும் உண்டு.

நட்சத்திரத்தை அறிந்ததும் ஒரே நொடியில் முழுப் பலனையும் சொல்லும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். ஜோதிடத்தை உலகுக்கு அளித்த பெரியோர்களால் அது இயலவில்லை!

தற்கால சூழல், திருமணப் பொருத்தத்தை நடைமுறைப் படுத்த முடியாமல் தவிக்க வைக்கிறது. அதையும் மீறி ஜாதகம் பார்ப்பதை ஏற்றால், சிக்கல் ஏற்பட்டு திருமணத்துக்கு காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. நாம் விரும்பிய வரனின் ஜாதகம், ஜாதகப் பொருத்தம் இல்லாமல் நழுவிவிடும். சுமாரான வரன் எனில்,. பொருத்தம் இருந்தும் செயல்பட மனம் இடம் தராது.

திருமணத்தில் நமது கண்ணோட்டம் லோகாயத வாழ்க்கையுடன் இணைந்து செயல்படும். ஜாதகம் அதற்கு எதிரிடையான ஆன்மிக அடித்தளத்தையும் மன ஒற்றுமையையும் வலியுறுத்தும். நமது விருப்பமும் முழுமையாக இருக்க வேண்டும். ஜாதகப் பொருத்தமும் நிறைவாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவோம். அது அமைவது மிகவும் அரிது. சிந்தனை மாற்றம் அதற்கு இடையூறாக நிற்கும். கடைசியில் பல வருடங்கள் திருமணம் ஆகாமல் இருக்க நேரிடும். பிறகு, மனம் சோர்வு அடைந்து... சில குறைகள் இருந்தாலும் வலுக்கட்டாயமாக ஏற்க நேரிடும். இந்த சிக்கலைத் தவிர்க்க பொருத்தம் பார்ப்பதை தவிர்க்கலாம் எனத் தோன்றும். பொருத்தம் பார்க்காத திருமணத்திலும், பார்த்த திருமணத்திலும் தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு நிகழத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாத ஒன்று.

பண்டைய கலாசாரத்திலும் நல்ல நடை முறைகளிலும் நம்பிக்கை இருந்து, பொறுமையைக் கடைப்பிடிக்கும் துணிவும் இயல்பாக தம்பதிகளுக்கு இருந்தால் மட்டுமே திருமணம் வெற்றி பெறும். அந்தத் தகுதி, பொருத்தம் பார்த்த ஜாதகத்தில் இருக்க வேண்டும். பொருத்தம் பார்க்காத ஜாதகத்தில் இருந்தாலும் ஏற்கலாம். நட்சத்திரத்தையும் ராசியையும் வைத்து பல காலமாகக் கடைப்பிடிக்கும் பொருத்தங்களில் அது தென்படாது. ஆகையால் பொருத்தம் பார்க்க வேண்டிய கட்டாயம், இன்றைய நாளில் நமது சிந்தனைக்குத் தேவையில்லையோ என்று தோன்றும்.

அதுவும் தவிர, மறுமணமும் விவாகாரத்தும் பெருகிப்போன இன்னா ளில், ஜாதகப் பொருத்தம் ஒரு நாடகமாகக் காட்சியளிக்கிறது. ஜோதிட அறிவு மங்கிப்போன இன்னாளில் அதை ஏற்பது சிரமமாக இருக்கிறது. அங்கும் இங்குமாக சில நாளேடுகளில்... ஜாதகப் பொருத்தம் உண்மை, அது வேண்டும் என்று விளக்கிக் கூறும் தகவல்கள் தென்படும்.

மக்களுக்கு ஜோதிட அறிவு குறைந்து காணப்படுவதால், நாளேடுகளில் வரும் தகவல்களை ஆராயாமல் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அது, மறைமுகமாக ஜோதிடர்களின் எண்ணிக்கையைப் பெருக்க உதவுகிறதே தவிர, ஜோதிடத்தின் தரத்தை உயர்த்த இயலவில்லை. ஆழமாக ஊடுருவிய ஆராய்ச்சியில் இறங்கினாலும், அவர்கள் சொல்லும் முடிவுக்கு சான்றில்லாத நம்பிக்கைதான் தடயமாகச் செயல்படும்.

கிடைத்ததைச் சான்றாக ஏற்கும் நிர்பந்தம் ஏற்பட்டு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். தற்போது, படித்தவர்களில் சான்றில்லாத நம்பிக்கைக்கு வரவேற்பு பெருகி வருகிறது. நம்பிக்கையும் ஐதீகமும் கொடிகட்டிப் பறக்கும் காலம் இது. உண்மையான விளக்கங்களுக்கு வரவேற்பு இல்லை. ஆசை முளைக்காத இருவரின் உறவு நீடித்திருக்க வாய்ப்பு உண்டு. ஆசையின் அடித்தளத்தில் விளைந்த ஆராய்ச்சியும், அறிவுத்திறனும் நீடித்த துணையைத் தேர்ந்தெடுக்க உதவாது. சமத்தாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அறிவு சார்ந்த உலகுக்கு விஞ்ஞானம் உதவும்; மெய்ஞ்ஞானம் பயன்படாது. இருட்டு - வெளிச்சம் போல்... ஓரிடத்தில் இணைந்து இருக்க முடியாததைத் திணிப்பது பயன் அளிக்குமா?

- ஐஸ்வரியா. சென்னை-20

##~##
விஞ்ஞானத்தின் விளக்கம் என்னவென்று தெரியவில்லை. 'அறிவு சார்ந்த’ என்ற சொல், புத்திக்கு இலக்கான விஷயங்களை மட்டும் ஏற்கும் எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறது. அதை விஞ்ஞானம் என்று எண்ணுகிறீர்கள்.

ஆனால், வேதத்தின் விளக்கம் வேறு விதமாக இருக்கும் (விஞ்ஞானம் யஹம் தனுதெ). மெய்ஞ்ஞானம் எட்டியவன் விஞ்ஞானி என்று சொல்லும். நல்லது-கெட்டதை பகுத்து அறிந்தவன் பகுத்தறிந்தவன் என்று சொல்வதை சாஸ்திரம் ஏற்காது. எது உண்மை, எது உண்மை அல்ல  என்கிற பகுத்தறிவு கொண்டவனை பகுத்தறிவு பெற்றவன் என்று சொல்லும். அவனது ஞானம் மெய்ஞ்ஞானமாக மாறும்.

பொய்யான பொருள்களின் பயன்பாட்டில் அறிவு பெற்றவன் பகுத்தறிவாளியாக மாட்டான். உண்மையை அறிந்தவன் மெய்ஞ்ஞானி. அவன் பகுத்தறிந்தவன். பகுத்தறிந்தவனை விவேகி என்று சொல்லும்.

விவேகம் என்றால் ஆன்மா எது? அனாத்மா எது? அதாவது ஸத்து (இருப்பது) எது, அஸத்து (இல்லாதது) எது என்கிற விவேகத்துக்கு பகுத்தறிவு என்று பெயர்.

நீங்கள்தான் வேறாகப் பார்க்கிறீர்கள். இருட்டும்- வெளிச்சமும் போன்ற இரண்டல்ல; வெளிச்சம் மட்டும்தான் (ஆத்மானாத்ம விவேகம் மெஜயை...). இயற்கையின் படைப்பின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள மெய்ஞ்ஞானம் வேண்டும். தென்படும் பொருளில் தராதரம் அறிந்து, அதன் பயன்பாட்டை வரையறுக்கும் திறனை மட்டுமே தாங்கள் நினைக் கும் விஞ்ஞானத்தால் எட்ட முடியும்.

ஆராய்ச்சியின் பாதிவழியில் இருப்பது, தாங்கள் சொல்லும் விஞ்ஞானம். முழுமையை எட்டியது மெய்ஞ்ஞானம்.

அரைவேக்காடாக நின்றுவிடாமல் ஆராய்ச்சித் தொடர்ந்தால், மெய்ஞ்ஞானம் வந்து பகுத்தறிவு மிளிரும். இரண்டும் ஒன்றுதான். தாங்கள் உடலின் உள்ளே உறைந்திருக்கும் 'ஆன்மா’ வை விலக்கி உடலின் பயன்பாட்டை வரையறுக்க இயலாது. ஆன்மாவோடு இணைந்துதான் அது செயல்படும்.

மெய்ஞ்ஞானத்துடன் இணைந்தால் மட்டுமே விஞ்ஞானம் பயன்படும். பண்டைய கால யுக்திவாதிகள், முயற்சியில் தோல்வியுற்று மெய்ஞ்ஞானத்தை ஏற்றார்கள்; அதுதான் உலக சுகத்துக்கும் ஆன்ம சுகத்துக்கும் அடிப்படை என்று உணர்ந்தார்கள். உயிர் பிரிந்த உடலின் ஆராய்ச்சி உதவாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism