Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'உங்களுக்குக் குரு யாரு?' நண்பர் பரமசாமி, திடீரெனக் கேட்டதும் திகைத்துப் போனேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எந்தக் குருவைக் கேட்கிறீர்கள்? கல்வியிலா? ஆன்மிகத்திலா? வாழ்க்கை வழிகாட்டலிலா?' என்று நான் அடுக்கிக்கொண்டே போக, 'போச்சுடா... உலகத்துல ஒரு ஆளுக்கு இத்தனை குரு இருப்பாங்களா? 'மாதா பிதா குரு’ங்றதுல ஒரு குருதானே வர்றாரு!' என்று ஆச்சரியமாய்க் கேட்டார் பரமு.

'நீங்க சொல்றது உண்மைதான். அந்தக் காலத்துல ஒரு குருநாதர்கிட்டேயே பல்வேறு செய்திகளைக் கத்துக்கிடுவாங்க. அவரும் எல்லாம் தெரிஞ்சவரா இருப்பாரு. ஆனா இன்னைக்கு அப்படியில்ல. கல்வி, இசை, ஓவியம், நாட்டியம், யோகா, ஆன்மிகம் இப்படி எல்லாத்துக்கும் தனித்தனியா குருமார்கள் வந்துட்டாங்க' என்று நான் சொல்ல, 'அதாவது கண் டாக்டர், பல் டாக்டர், சர்க்கரை நோய் டாக்டர்... இதுமாதிரி. அப்படித்தானே?' என்று பரமசாமி கேட்டார்.

'விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணர் ஒருத்தர்தான் குரு. ஆனா ராமானுஜருக்கோ யாதவப் பிரகாசர், திருக்கச்சிநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரியநம்பி எனப் பல குருமார்கள் உண்டு. அதுபோல நாம் எவரொருவரிடமும் ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறபோது அவரைக் குருவாக ஏற்றுத்தான் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும்' என உரையாடியபடியே நடந்து வந்தோம்.  'மனிதர்கள் மனிதர்களிடமிருந்து மட்டுந்தான் கத்துக்கிடணுமா? வேற உயிரினங்களிடமிருந்தும் கத்துக்கிடலாமா?' எனக் கேட்டார் பரமு.

##~##
'நல்லா கேட்டீங்க. எறும்பப் பார்த்து சுறுசுறுப்பைக் கத்துக்கோ, பறவைகளைப் பார்த்து விடியற்காலையில எழுந்திருக்கக் கத்துக்கோ அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம ஒளவைப்பாட்டி என்ன சொல்லியிருக்காங்கனா... எல்லாருக்கும் எல்லாத் திறமையும் இருக்கு, நாம தான் உணர்வதே இல்லை என்று சொன்னதோடு, தூக்கணாங்குருவி, தேனீக்கள், கரையான், சிலந்தி இவையெல்லாம் ஆறறிவுக்குக் குறைவானவைதான். ஆனா, அவற்றின் திறமைகளைப் பார்த்து நாம் நம் திறமைகளை உணர வேண்டும் என்கிறார்' என்றேன்.

'அட என்னங்க நீங்க. காந்தியப்போல இரு, நேருவைப்போல இருன்னு சொல்லுவாங்க. நீங்க தேனீயப்போல இரு, குருவியைப்போல இருன்னு சொல்றீங்களே. அதுங்க அப்படி என்ன சாதிக்குது?' என்று பரமு கேட்க, 'என்ன இப்படிக் கேட்டுடீங்க. குருவி கூடு கட்டுறதப் பார்த்துத்தான மனுசன் வீடு

கட்டவே ஆரம்பிச்சான். அதுமட்டுமில்ல, ஆண் குருவிதான் கூடுகட்டுமாம். கூடுகட்டி முடிச்ச பிறகு, தன் ஜோடியாகிய பெண்குருவியைக் கூட்டி வந்து காட்டுமாம். அதுக்குப் புடிச்சிருந்தா சரி; பிடிக்கலைன்னா வேறு கூடுதான் கட்டுமாம்' என்று நான் சொல்லி முடிக்கும்முன், 'ஓஹோ! அதுனாலதான் ஆம்பளைக வீடுபார்க்கப் போறப்ப மனைவியையும் சேர்த்துக் கூட்டிப்போய், பிடிச்சிருக்காப் பாரு, பின்னாடி குறை சொல்லாதேங்கறாங்களோ..?'' என்றார்,  சிரித்துக்கொண்டே.

'ஆமா. இது தவிர தையல் குருவின்னு, ஒரு இனம் இருக்கு. அது தன்னுடைய மூக்கால இலைகளை எடுத்து ஊக்கு மாதிரி முட்களைப் பயன் படுத்தி கோக்குமாம். மனிதர்கள் தையல்தொழிலைக் கூட இந்தக் குருவிகளிடமிருந்துதான் கற்றிருக்க வேண்டும். அதேபோல ரஷ்ய அறிஞர் ஒருவர், 'தேனீக்கள் நடனம்’ (ஙிணிணி ஞிகிழிசிணி) என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதுல, தேனீக்கள் தங்களுக் குள் நாட்டியத்தின் மூலமாக செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்னு சொல்லியிருக்கார்.

'வான் குருவியின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால்-யாம்பெரிதும்
வல்லோமே எனவலிமை சொல வேண்டாங்காண்
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.'

- இப்படி நம்ம ஒளவை சொல்லியிருக்கார்'' என்ற என்னை நிறுத்தி, 'ஆமா! உங்க குரு யாருன்னே சொல்லலையே?' என்று பரமசாமி கேட்க, 'என் தந்தையார் எனக்கு குரு; எம் மகனும் குருதான்.ஆமாம். அவன் பேரு குரு!' என்று நான் சொன்னதும் கைதட்டிச் சிரித்தார் பரமு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism