Published:Updated:

கணிதம் இனி கடினம் அல்ல!

கணிதம் இனி கடினம் அல்ல!

கணிதம் இனி கடினம் அல்ல!

கணிதம் இனி கடினம் அல்ல!

Published:Updated:
கணிதம் இனி கடினம் அல்ல!
கணிதம் இனி கடினம் அல்ல!
கணிதம் இனி கடினம் அல்ல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ஸாம் என்றாலே நம் மாணவர்களில் பலர் பரபரத்து விடுகிறார்கள். அதுவும், கணிதம், அறிவியல் பாடங்கள் என்றால் ரொம்பவுமே ரிஸ்க் எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், புதன் கிரகத்தின் அனுக்கிரகம் இருந்தால் அறிவியல், கணிதப் பாடங்கள் எல்லாம் எளிதாகிவிடும் என்கிறார் டாக்டர் பாஸ்கரன் பிள்ளை.

ராமேஸ்வரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்கும் முயற்சியில் ஆர்வம் கொண்டவர்.  மேலும், 'மைண்ட் சயின்ஸ்’ என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனித மனத்தை நுணுக்கமாக ஆராய்ந்து வருபவர்... 'வேர்ல்ட் நாலெட்ஜ் ஃபாரம்’ என்ற அமைப்பின் சார்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர்... ஆங்கில இலக்கியத்திலும், இலக்கிய ஒப்புநோக்குப் பார்வையிலும் பட்டங்கள் பெற்றவர், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி., பட்டம் பெற்றவர்... என்று இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சென்னை அண்ணா நகரில் இவர் நடத்தி வரும் ஆஸ்ட்ரோ-வேத் அமைப்பு உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்களமாகச் செயல்படுகிறது.

ஒருவர் கற்கும் கல்விக்கும், விண்ணில் உலவும் கிரகங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார் டாக்டர் பாஸ்கரன் பிள்ளை...

'கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் ஒரு மாணவன் சிறப்பான தகுதி பெறக் காரணமாக இருப்பது மெர்க்குரி எனப்படும் புதன் கிரகம். பொதுவாக லக்னமும், லக்னத்தின் அதிபதியும் பலமாக அமைந்தால்தான் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எனினும், புதன் லக்னமாக அமையப் பெற்றவர்கள், கணிதத்தில் கூடுதல் தேர்ச்சி பெறுகிறார்கள். மற்ற பாடங்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள், பலவீனமான புதனின் அதிர்வலைகள் காரணமாக, கணிதத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்கள் பெறலாம். இவ்வாறு பலவீன புதன் உள்ள மாணவர்களுக்கு ஜூபிடர் (குரு/வியாழன்) பலமான அமையும் பட்சத்தில், கணிதத்தில் இல்லாவிட்டாலும் மொத்த மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும். இது பற்றிய எங்களது ஆய்வு தொடர்கிறது.

இன்றைய இளைஞர்கள் திறமை எதில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளாததால், தேவையின்றி அவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுடைய ஆற்றல் தெரியாமல் போய், பெற்றோர்களின் கவலையும் அவர்களைப் போட்டு அழுத்துகிறது. இதை இரண்டு வகைகளில் கையாளலாம். முதலாவது... கிரகங்களுக்கும் அகடமிக் அல்லது படிப்புத் திறமைக்கும் உள்ள பொருத்தத்தைக் கண்டறிந்து, 'டாப்பர்’, 'ஃபெயிலியர்’ என இரு வகையினருக்கும் ஆன காரணங்களை ஜோதிட வழி முறையில், புள்ளிவிவரக் குறிப்போடு அறியலாம்.  இரண்டாவது வகையில்... தனிப்பட்ட மாணவர் ஒவ்வொருவருக்கும் எந்த கோர்ஸ் மேற்படிப்புக்கு உதவும் என்று வழி காட்டலாம். அதன்படி, அவர்களுடைய பலம்- பலவீனங்களை அலசி ஆராய வேண்டும். மேலும், அவர்கள் கற்கும் முறையில் உள்ள கோளாறுகளைத் திருத்த திட்டங்கள் வகுக்க வேண்டும். இது அகடமிக் முறைக்கு மட்டுமல்ல, ஸ்போர்ட்ஸ், ஆர்ட்ஸ் என்று எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

உதாரணத்துக்கு, குறிப்பிட்ட உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்து அடிப்படையில் அமைந்த மந்திரச் சொற்களை உச்சரிப்பதால் உடலின் எனர்ஜி மையங்கள், பாசிட்டிவ் சக்தியை உருவாக்கி, வெற்றியைத் தேடித்தரும். அதாவது 'அரு’விலிருந்து 'உரு’வாகும். (அரு என்றால் இல்லாதது. இல்லாததில் இருந்து இருப்பது உருவாகும்.) இதை முறையாகச் செய்தால், வெகு எளிதாக மட்டுமல்ல, சிறந்த தீர்வாகவும் இது அமையும்.

##~##
மனம் தன்னை வெளிப்படுத்த 'ஒலி’யைக் கருவியாக்குகிறது.  ஒலியே மொழியின் அடிப்படை.  வேதங்கள்கூட ஒலி ரூபமாக இருந்ததாகவும், அவற்றை மனிதர் நலன் கருதி, வேதவியாசர் இறையருள் துணை கொண்டு மொழி வடிவமாக்கி, தொகுத்து அளித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனவே, மனதுக்கு ஆக்கம் தரக்கூடிய ஒலிகளை உச்சரிக்கும்போது, அதன் அதிர்வுகள் மூளையில் மாற்றத்தை உண்டாக்குகின்றன. அதன் பலனாக மனச்சோர்வில் இருந்து விடுதலை கிடைக்கிறது. சரியாக இதை நடைமுறைப்படுத்தும் மாணவர்கள் மனத்தில் உண்டாகின்ற பாசிட்டிவ் எண்ணங்கள் எளிதில் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும்.

இதை நாங்கள் ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறோம். எங்களது ஆய்வின்படி, ஆறு வாரங்களுக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடம் வீதம் பயிற்சி செய்தவர்கள், கணிசமான முன்னேற்றம் கண்டார்கள். இடது மூளைப் பகுதியே கணிதம், சயின்ஸ் ஆகிய படிப்புக்கு உதவிகரமாகச் செயல்படும் பகுதி என்பது அதில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, இடப் பக்க மூளைப் பகுதியை செயல்பட வைத்தால் இந்தப் படிப்புகளில் வெற்றி நிச்சயம்.!' என்கிறார்.

திருநெல்வேலி மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்தி, அவர்களது ஆற்றலைக் கண்டறிய, அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்கெனவே அனுமதி தந்திருக்கிறார். அதேபோல், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, கலிபோர்னியாவில் உள்ள மைண்ட் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட் மற்றும் பிள்ளை சென்டர் ஃபார் மைன்ட் சயின்ஸ் அமைப்புகளும், மற்ற மாணவர்களைவிட அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களது தேர்வுக் கால மனஅழுத்தத்தை முறியடிக்கும் விதமாக இதே பயிற்சியை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism