Published:Updated:

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

Published:Updated:
வாசகர் தகவல்கள்


ராஜகுரு தரிசனம்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞ்சையில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் திட்டை. இங்கே ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயிலில், ஸ்வாமி-அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே தனிச் சந்நிதியில் ராஜ குருவாக அருள்கிறார் குருபகவான். குருப்பெயர்ச்சியின்போது சிறப்பு அபிஷேக- ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறும். அன்று இவரைத் தரிசிக்க... குரு பலம் கிடைக்கும்; வாழ்வில் ராஜயோகம் பெறலாம்.

விருத்தாசலத்தில் பழமலைநாதர் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீகாலபைரவர் விசேஷமானவர். பொதுவாக சிவாலயங்களில் 4 திருக்கரங்களுடன் அருளும் பைரவர் இங்கே 10 திருக்கரங்களுடன் அருள்கிறார்!

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜருக்கு குளிர்காலத்தில் வெந்நீராலும், கோடை காலத்தில் குளிர் நீராலும் நீராட்டுதல் செய்விக்கிறார்கள். குளிர் காலத்தில் கம்பளியினாலும், கோடை காலத்தில் பருத்தித் துணியாலும் உடை மாற்றுகிறார்கள்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

மரத்துக்கு வழிபாடு

வாசகர் தகவல்கள்

ன்னியாகுமரி மாவட்டம், குமார கோயிலில், முருகப் பெருமான் வள்ளியை மணக்க வேங்கை மரமான வைபவத்தை நினைவுகூரும் வகையில், அங்கேயுள்ள ஸ்தல விருட்சமான வேங்கை மரத்துக்கு தினசரி வழிபாடு நடைபெறுகிறது.

அரக்கோணம் அருகில் உள்ள தக்கோலம்-ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத்தில் கீழே சுரக்கும் ஊற்று நீர், நந்தியின் வாய் வழியாக ஆலயத்தினுள் இறங்கி, கருவறையைச் சுற்றிப் பாயும். அதே நீர் மீண்டும் நுழைவு வாயிலின் கீழே சென்று மற்றொரு நந்தி மூலம் வெளியேறி, குளத்தில் சென்று அடைகிறது. கலை நுணுக்கத்தோடு அமைக்கப்பட்ட நந்தி இது.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

கேரள மாநிலத்திலுள்ள திருவல்லா என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கும் முருகன், வேலாயுதத்தின் முனைப்பகுதியை கீழே ஊன்றியபடி காட்சி தருகிறார்!

- ஆர்.மகாதேவன், நெல்லை

பெங்களூருவில் இருந்து சுமார் 132 கி.மீ. தூரத்திலுள்ள தலம் தலக்காடு. இங்குள்ள ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பஞ்சலிங்க தரிசனம், வெகு விசேஷமாகும்.

- வத்சலா சதாசிவன், சென்னை-64

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism