Published:Updated:

‘தாயே கருமாரி..!’

தேவி தரிசனம்...

‘தாயே கருமாரி..!’

தேவி தரிசனம்...

Published:Updated:
‘தாயே கருமாரி..!’
##~##
செ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்னை அசோக்நகர்- சாமியார்தோட்டம் பகுதியில் இருந்தபடி தன்னை நாடி வருவோருக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கி, நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி அம்மன்!

சுமார் 50 வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள்பாலித்து வந்தாளாம் ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின்

பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திருமேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய- வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு, ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது.

இந்தக் கோயிலில் அருளும் ஸ்ரீசெல்வமுத்து  கணபதி சாந்நித்தியமானவர். வைத்தீஸ்வரன் கோவிலைப் போலவே இங்கும் ஸ்ரீவைத்தீஸ்வரன் மற்றும் கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். இந்தத் தலத்து மூலவரின் திருநாமம் - ஸ்ரீதிரியம்பகேஸ்வரர்.

கடந்த 89-ஆம் வருடம் ஸ்ரீகால பைரவர் மற்றும் மனைவி லோபா முத்திரையுடன் ஸ்ரீஅகத்தியர் ஆகியோரின் விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப் பட்டன. பிரதோஷ வழிபாடும், இறைத் திருமேனிகளுக்குச் செய்யப் படுகிற அலங்காரங்களும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்!

‘தாயே கருமாரி..!’

புதன் மற்றும் சனிக்கிழமை களில், ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீசுதர்சனர் ஆகியோரைத் தரிசித்துப் பலன் பெறுகின்றனர், பக்தர்கள். ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு துளசி மாலையும் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு தாமரைப் பூவும் சார்த்தி வழிபட... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!

இலந்தை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில் இது. காலையில் 7 முதல் மதியம் 11.30 மணி வரையும், மாலையில் 5 முதல் இரவு 8.15 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.  செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாகவே பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால், அதிக நேரம் கோயில் நடை திறந்திருக்குமாம்!  

ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி அம்பிகைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, புடவை சார்த்தி வணங்கினால், விரைவில் குழந்தை பாக்கியம் பெறலாம்; சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். ஸ்ரீசரபேஸ்வரருக்கும், ஸ்ரீஅனுமனுக்கும் இங்கே தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீசரபேஸ்வரருக்கும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஆஞ்ச நேயருக்கும் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, ஸ்ரீதுர்கைக்கு ராகு கால பூஜை என மாதம் முழுவதும் வழிபாடுகள் குறையற நடைபெற்று வரும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில்...ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கும் பகல் பத்து -ராப்பத்து விழாக்கள், உத்ஸவங்கள் எனக் களை கட்டியிருக்குமாம்!

அதேபோல்,  அனுமத் ஜயந்தி நாளில்... ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி, விசேஷ அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தருவார் ஸ்ரீஅனுமன்.

முக்கியமாக... மூலவர் ஸ்ரீதிரியம்ப கேஸ்வரர், அம்பாள் ஸ்ரீகருமாரி திரிபுர சுந்தரி ஆகியோருக்கு பங்குனி உத்திர நன்னாளில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதிரியம்பகேஸ்வரரையும் ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாளையும் ஒருமுறை தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவீர்கள்!

- சா.வடிவரசு
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism