Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

'அனூராதா’ நட்சத்திரத்தை நாம் 'அனுஷம்’ என்று சொல்வோம். அதன் தேவதை மித்திரன். தோன்றிய உயிரினங்களுக்கெல்லாம் நண்பனாக இருந்து, முதுமை பெறச் செய்பவன் மித்திரன். இந்த சொல்லுக்கு நண்பன் என்று பொருள். நட்பு இயல்பாகவே இருப்பதால், எதிரிடையான பகைமை இருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அனுஷ நட்சத்திரத்துடன் இணைந்த மித்திரன் எங்களையும் நட்புடன் வாழ அருள வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு. 'நாம் அளிக்கும் உணவை ஏற்று, மக்கள் செல்வத்துடன் மகிழ்ச்சியை அருள வேண்டும். கிழக்கில் உதயமாகும் மித்திரன் அனுஷத்தின் இணைப்பில் உலகை மகிழவைப்பான். அவனது பணிவிடை எங்கள் மகிழ்ச்சியை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் வேதம் கூறும் (ரித்யாஸ் மஹவ்யை:). இன்றைய சூழலிலும் நாட்டையும் வீட்டையும் நட்பு காப்பாற்றும்; சிக்கலை விடுவித்து தேவையைப் பூர்த்தி செய்யும்.

கிருத்திகை முதல் விசாகம் வரையிலான நட்சத்திரங்களுக்கு தேவ நட்சத்திரம் என்று பெயர். அனுஷம் முதல் பரணி வரையிலான நட்சத்திரங்களுக்கு யம நட்சத்திரம் என்று பெயர் என்கிறது வேதம் (கிருத்திகா: ப்ரதமம், விசாகே உத்தமம் தானி தேவநக்ஷத்திராணி அனூராதா: பிரதமம் அபபரணீருத்தம. தானி யமநக்ஷத்திராணி...). வேதம் ஓதுபவர்கள், மக்களை வாழ்த்த அனுஷ நட்சத்திரத்தின் விளக்கவுரையைப் பயன்படுத்துவார்கள். அப்படியரு தனிப்பெருமை அதற்கு உண்டு (ரித்யாஸ்ம...)!

விருச்சிக ராசியில் முழுமையாக இடம் பிடித்த நட்சத்திரம். ராசிக்கு அதிபதி செவ்வாய். அம்சகத்தில் நான்கு பாதங்களில்... சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய நால்வருக்கும் தொடர்பு உண்டு. ஆன்மகாரகன், வித்யாகாரகன், களத்திரகாரகன், சகோதரகாரகன் எனும் நான்கு தகுதிகளுடன்... செல்வாக்கு, விவேகம், பொருளாதாரம், உற்சாகம் ஆகியவையும் சேரும்போது,  உயர்வான வாழ்க்கைக்கு ஊக்கம் அளிப்பவர்களாக மாறுவர். அவர்கள் தாறுமாறாக இருந்தால் எதிரிடையான பலனை அளித்து அலைக்கழிக்கவும் செய்வர்.கர்ம வினையின் தராதரம் அவர்களது நிலையை வரையறுக்கும்.

##~##
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது சனி தசை. 19 வருடங்கள் நீடிக்கும் தசை. பூசத்துக்கும் உத்திரட்டாதிக்கும் இது பொருந்தும். கால புருஷனின் (ராசிக் கட்டத்தில்) 4, 8, 12 ஆகிய இடங்களில் இந்த மூன்று நட்சத்திரங்கள் இணைந்திருக்கும். பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், இழப்பு இந்த மூன்றையும் வரையறுப்பது சனியாக இருப்பதால், அவன் பங்கு இவர்களை வாழ வைக்கும். சந்திரன் இருக்க வேண்டிய இடத்தை நிர்ணயம் செய்வது நட்சத்திர பாதங்கள். அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவனது சந்திரன், விருச்சிக ராசியில் இருப்பான். விருச்சிக ராசியில் அவன் பலமிழப்பான். ஆனால் அனுஷம் 4-வது பாதத்தில் இருந்தால், வர்கோத்தமம் (ராசியிலும் அம்சகத்திலும் ஒரே இடத்தில் இருப்பது) பெற்று இழந்த பலத்தை திரும்பவும் பெற்று விடுவான் (சுபம்வர்கோத்த மேஜன்ம).

ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சகத்தில் நீசம் பெறுவது உண்டு. அதேபோல் நீசம் பெற்றவன் உச்சனாவதும் உண்டு. சந்திரன் ராசியில் உச்சம் பெற்றால், அம்சகத்தில் நீசனாக மாட்டான். ராசியில் நீசம் பெற்றால் அம்சகத்தில் உச்சனாகவும் இருக்கமாட்டான். அம்சகத்தை இணைத்து பலன் சொல்ல வேண்டும் என்று ஜோதிடம் கூறும் (பலமம்ச கர்ஷயோ:). ஆனால் சந்திரனுக்கு அம்சகத்தில் பெரிய மாறுதல் நிகழ வாய்ப்பு இல்லாததால், கிரக நிலை பலன் பிரதானமாக இருக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோஹிணி, மிருக சீரிடம் முதல் இரண்டு பாதங்களில் சந்திரன் உச்சனாக இருப்பான். விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் நீசனாக இருப்பான். இந்த இரண்டு ராசிகளில் தென்படும் அவன் பெரிய மாறுதலுக்கு இடமில்லாமல் பலன் அளித்து விடுவான். தேய்ந்தும் வளர்ந்தும் திகழ்வது

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

அவனது இயல்பு. மனமும் அப்படித்தான் இருக்கும். சுணக்கமும் சுறுசுறுப்பும் மாறிமாறி வரும். அன்றாடம் கண்ணுக்குப் புலப்படும் கிரகங்கள் சூரியனும் சந்திரனும். சூரியனை கிரக நாயகன் என்று சொன்னால், சந்திரனை கிரக நாயகி என்று குறிப்பிடும் ஜோதிடம். ராஜா சூரியன் எனில்; சந்திரனை ராணி எனலாம்.

சூரியனும் சந்திரனும் பிரகாசமான கிரகங்கள் என்ற தகுதி பெற்றவர்கள். தட்பவெப்பங்களுக்கு ஆதாரமான இவர்கள், சுற்றுச்சூழலை வரையறுப்பவர்கள். பருவகால மாற்றத்துக்கு சந்திரனின் பங்கு பெருமைக்கு உரியது (சந்திரமா: ஷட்ஹோதா ஸரிதூன் கல்பயாதி). எண்ணங்கள் உதிப்பது மனதில். அவனது பூர்வபுண்ணியங்களின் வெளிப்பாடு சந்திரன் வாயிலாக நிகழும். சந்திரனுடன் இணைந்த நட்சத்திரங்களின் தசாகாலம் பூர்வ புண்ணியத்தின் விரிவாக்கம் (தசாபலேனவிசிந்தயேத் த்ருடம் (திடம்). எந்த சட்டதிட்டத்துக்கும் செயல்பாட்டுக்கும்... அவற்றுக்கான வரைபடம் தோன்றுவது மனதில் தான். அதை 'ஸங்கல்பம்’ என்கிறது ஜோதிடம் (யத்ஹி மனஸாத்யாயதி, தத்வாசாவததி தத்கர்மணாகரோதி).

நமது செயல்பாடுகள் மேலோங்கி வளர, வளர் பிறைச் சந்திரனை வரவேற்போம். மாறுபட்ட கண்ணோட்டத்தில் வளர்பிறையை வரையறுக்கும் ஜோதிடம். வளர்பிறை தசமியில் இருந்து தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறையாக ஏற்கும். சூரியனும் சந்திரனும் அத்தனை கண்களுக்கும் புலப்படும் கிரகங்கள். சந்திரனின் தேய்தல், வளர்தல் அத்தனையையும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் வளர்பிறை விளக்கம் அமைந்துள்ளது. கண்களுக்கு இலக்காகும் சாஸ்திரம் ஜோதிடம் என்று சொல்லும் (ப்ரத்யக்ஷம் ஜோதிஷம் சாஸ்திரம் சந்திரார்க்கௌ யத்ர ஸாக்ஷிணௌ).

விண்வெளியில் பூமியுடன் நெருங்கிய கிரகம் சந்திரன். ஆன்மாவுடன் நெருங்கியிருப்பது மனம்; மற்றவை எட்டியிருக்கும். இருண்ட கிரகமான சந்திரன், சூரிய ஒளியைச் சிறுகச் சிறுக வாங்கி, அதன் வெப்பத்தை தன்னிடம் இருக்கும் நீரின் சேர்க்கையில் குளிரவைத்து, தன் கிரணத்தால் உலக மக்களை வெப்பத்தில் இருந்து விடுபட வைக்கிறான் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும் (ஸலிலம யேசசினிரவேர்திதிதய:...). ஆன்மாவிடம் இருந்து உயிர்பெற்று மனம் தனது எண்ணங்களை செயல்படுத்தும் என்று ஜோதிடம் கூறும் (ஆன்மா மனஸா ஸம்யுஜ்யதே...). மற்ற கிரகங்களை விடவும் சூரியனிடமிருந்து உயிர்பெற்ற சந்திரனே உயிரினங்களுக்கு அடிப்படை என்றால் மிகையாகாது. செயல்களைத் துவக்கும் வேளையில் சந்திரபலம் இருக்க வேண்டும் என்ற ஜோதிடத் தின் கோட்பாடு சந்திரனின் உயர்வுக்குச் சான்று (தாராபலம் சந்திரபலம் ததேவ).

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திர தசையை முதுமையில் சந்திப்பார்கள். இருந்தாலும் அதற்குமுன் சந்திக்கும் தசை களில் சந்திர புக்தி, சந்திர அந்தரத்தில் அவன் அளிக்கும் பலன்கள் சிறு வயதிலும் இளமையிலும் கிடைத்துவிடும். கிருத்திகை யில் பிறந்தவனின் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனின் நீசபங்க ராஜ யோகம், அவன் கடந்து வரும் மற்ற கிரகங் களின் தசையில் தோன்றும். சுக்கிரனின் புக்தி, அந்தரங்களில் பலன் வெளிப்பட்டுவிடும். சுக்கிர தசையை சந்திக்காமலே இறக்க நேரிடலாம். அப்போது, அந்தத் தசை பயனற்றுப் போவதை ஜோதிடம் ஏற்காது; அதுவும் பயனுள்ளதாகவே இருக்கும் என்கிற கருத்து, ஜோதிடத்தின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது.

அனுஷ நட்சத்திரத்தின் ஒரு பக்கம் முன்னேறத் தயாரான காலடி இருக்கும். அடுத்த பக்கம் அதை வைக்க வேண்டிய இடம் இருக்கும் (அப்யாரோஹ: பரஸ்தாத்...). முயற்சியும் முடிவும் இரு பக்கங்களில் இருப்பதால், முடிவுறாத செயல்பாடுகள் இவர்களின் வாழ்க்கையில் குறைவாகவே இருக்கும்.

நான்கு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். செல்வச் சீமான், வெளிநாட்டில் வாசம், பசி பொறுக்காதவன்: ஊர் சுற்றுவ தில் ஆர்வம் அத்தனையும் அனுஷ நட்சத்திரத் தில் பிறந்தவனில் காணலாம் என்கிறார் வராஹமிஹிரர். ஆழமான நட்பு, களையான முகம், குழந்தைச் செல்வம் பெற்று மகிழ்வுடன் வாழ்ப வன், பங்காளிகளில் உயர்ந்த வன், பொருளாதாரத்தில் நிறைவு ஆகியன அவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர். சொல்லில் இனிமை, செல்வச் செழிப்பு, இன்பத்தைச் சுவைத்து மகிழ்தல், பெருந் தன்மையை பேணுபவன், புகழ், செல்வாக்கு பெற்றவன் என மாறுபட்ட பலனை விளக்குகிறது ஜாதக பாரிஜாதம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

முதல் பாதத்தில் பிறந்தவன் பசியறிந்து புசிப்பான், உடல்உபாதையைச் சந்திப்பான்; 2-வதில் ஊர் சுற்றுவதில் விருப்பம், வெளி நாட்டில் வாசம்; 3-வதில் செயலில் திறமை, 4-வதில் பெண்களில் ஆசை, குறைந்த செல்வம் என்று மாறுபட்ட பலனை விளக்கும் ஜோதிடம். முதல் பாதத்தில் பிறந்தவன் அழகனாகவும், அறவழியில் செல்பவனாகவும், சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் மிக்கவனாகவும், உண்மை பேசுபவனாகவும் தென்படுவான். 2-ல் இசைக் கருவிகளில் புகழ் பெறுவான், திறமையால் புகழ் ஈட்டுவான், புத்திசாலியாகத் திகழ்வான், சொல்வளத்தால் மக்களை ஈர்ப்பான். 3-ல் கணக்கு கவிதையில் திறமை பெறுவான், மாறாப்பிணியில் சிக்கித் தவிப்பான், நகைச்சுவையில் புகழ் பெறுவான். 4-வதில் வஞ்சகம், பிடிவாதம், இரக்கமின்மை, உடல் வளம் பெற்றுத் திகழ்வான் என்று பலசார சமுச்சயம் விளக்கும்.

மென்மையான நட்சத்திரம் இது. நட்பு, உடலுறவு, ஆடை, ஆபரணங்கள், நல்ல காரியங்கள், இசை, நாடகம் போன்றவற்றில் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு வெற்றி தரும். தாளம், வாத்தியம், நிருத்தம், ரத்னம், தங்கம், வெள்ளி, சில்பம், இசை, நண்பன், பங்காளி, அணிகலன்கள், ஒப்பனைப் பொருள்கள் ஆகியவற்றில் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு சிறப்பு அளிக்கும் - என்கிறார் பராசரர்.

கால புருஷனின் மறைக்க வேண்டிய இடம் விருச்சிக ராசி. அந்த உடலுறுப்பின் தராதரத்தை நிர்ணயம் செய்யும் ராசிநாதனின் தரம். மிம் மித்ராய நம: என்று சொல்லி பணிவிடையில் இறங்க வேண்டும். 'மித்திரஸ்ய சர்ஷணீத்ருத:’ - என்ற மந்திரம் வாயிலாக 16 உபச்சாரங்களை விரிவாகச் செயல்படுத்தலாம். மித்திரன் என்ற சொல் சூரியனையும் குறிக்கும். சூரியனிடம் பெற்ற கிரணத்தில் உருப் பெற்றவன் சந்திரன். ஆகையால் அவன் உள்ளே கிரண வடிவில் சூரியன் உறைந்திருப்பதால், சந்திரனின் தேவதையும் மித்திரன் ஆனான். மனம் நட்பைத் தேடி அலையும்; கிடைக்காவிட்டால் கலங்கும். எதிரிடையான பலனைச் சந்தித்தால் பகை முளைக்கும். ஆகையால் மனதின் இயல்பு நட்புதான்.

ஏனெனில், ஒன்றோடு ஒட்டித்தான் மனம் செயல்பட வேண்டும். செயல்பாட்டுக்கு நட்பு அவசியம். அதை சுட்டிக்காட்டுவது மித்திரன்.

தற்கால புதிய சிந்தனை, 'குறைந்த உழைப்பு மிகுந்த ஊதியம்’ என்று எண்ணும். இறைவனுக் கான பணிவிடைகளில் அதை நுழைப்பது சிறப்பல்ல. எல்லா காரியங்களையும் நிறைவேற்ற எளிமையான வழியைத் தேட முனைவதற்கு, பணிவிடைகளில் முனைப்புடன் ஈடுபட மனம் இடம் தரவில்லை என்பதும் ஒரு காரணம்.

சிந்தித்துப் பாருங்கள்... எல்லாவற்றிலும் எளிமை புகுந்துவிட்டால் விரிவான செயல்பாடு வீணாகிவிடும். வீணான ஒன்றை சாஸ்திரம் பரிந்துரைக்காது. நேரம் கிடைத்தபோது பணிவிடை என்று இருக்காமல் பணிவிடைக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

'ஆயுர் தேஹி ஜயம் தேஹி வித்யாம் தேஹி ஜனப்ரிய. மித்ரத்வம் ஸர்வபூதேஷ§ யச்சமே மித்ர பந்துஷ§’ என்ற செய்யுளைச் சொல்லி, மெள்ள மெள்ள பணிவிடையை விரிவுப்படுத்த வேண்டும்.

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism