Published:Updated:

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!
ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!
##~##
தோ... வருகிற 17.5.12 அன்று வியாழக்கிழமை, கிருஷ்ணபட்சத்து துவாதசி நாளில், சந்திர ஹோரையில், சர வீடான மேஷத்தில் இருந்து ஸ்திர வீடான ரிஷபத்தில் நுழைகிறார் குரு பகவான். அழியாச் செல்வங்களான கல்வி, ஞானம், யோகம், பெயரும் புகழும் கிடைத்தாலும் நிதானத்துடன் கூடிய தன்னடக்கம், ஊரே போற்றத்தகுந்த ஒழுக்க சிந்தனை என உயர்ந்த விஷயங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் தந்தருளக்கூடியவர் குரு பகவான்.

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன பரிகாரங்கள் செய்யவேண்டும், அப்படிப் பரிகாரங்கள் செய்வதற்கு எந்தத் திருத்தலத்துக்குச் செல்லவேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது; சக்தி விகடன் வாசகர்களுக்கும் அவர்கள்தம் குடும்பத்தாருக்கும் குருவருளும் திருவருளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என யோசித்தோம்.

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!

சென்ற முறை சனிப்பெயர்ச்சியையட்டி திருக்கொள்ளிக்காடு தலத்தில், சக்தி விகடன் வாசகர்களுக்கென்றே பிரத்யேகமாக சிறப்பு ஹோமங் களும் பூஜைகளும் செய்து விபூதிப் பிரசாதம் வழங்கினோம் அல்லவா?! அதேபோல், இந்த முறை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ராஜகுருவின் திருச்சந்நிதியில் சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் செய்வது என முடிவு செய்தோம். அதன்படி மே 3-ஆம் தேதி, குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் செய்தோம்.

இந்தத் தலத்தில், பக்தர்களுக்கு செல்வ யோகத்தையும் ஞான யோகத்தையும் வள்ளலெனத் தந்தருள்கிறார் ஸ்ரீராஜ குரு பகவான்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திட்டை. தஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரை, தென்குடித் திட்டை என்றும் சொல்வார்கள். ஆதிப்பரம்பொருள் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று அம்சங்களாக்கியது. இந்த மூவரில், பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகளில், ஆங்கீரஸ முனிவரும் ஒருவர்.

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!

வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் எவரேனும் உண்டா என்ன? ஆங்கீரஸ முனிவரின் திருக்குமாரனுக்கும் அந்த ஆசை இருந்தது. அதற்காக வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்தார்; சகல ஞானத்தையும் அறிந்து உணர்ந்தார். அஸ்வமேத யாகங்களை நூறு முறைக்கும் மேலாக நடத்தினார். ஹோமங்கள் செய்தார். தினமும் மந்திர ஜபத்தை இடைவிடாது செய்துகொண்டே இருந்தார். மந்திரங்களைச் சொல்லச் சொல்ல, மனமும் புத்தியும் நேர்க்கோட் டில் இணைந்தன. யாகங்களை நடத்த நடத்த, உடலும் உள்ளமும் கைகோத்து, அவரின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தன. வேதங்களிலும் யாகங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் எனப் பெயர் பெற்றார். இந்த நற்பெயரே, அவரை மிகப் பெரிய இடத்துக்கு உயர்த்திற்று. தேவர்களுக்கெல்லாம் குரு எனும் உயர்ந்த பீடத்தை அவருக்கு வழங்கிற்று. அவர் தேவகுருவானார். 'ராஜகுரு’ எனப் போற்றப் பட்டார். அவர்தான் பிரகஸ்பதி.  

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!

இத்தனை பெருமை களுக்கு உரியவர் ஆனபோதிலும், அவருக்குள் இன்னும் உயரவேண்டும் எனும் சிந்தனை மேலோங்கியது. அடர்ந்த வனத்துக்கு வந்தவர், அங்கே உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு தினமும் அபிஷேகம் செய்து வில்வம் சார்த்தி, நமசிவாய திருநாமம் சொல்லி, பூஜைகள் செய்து வந்தார்.

பிரகஸ்பதியின் தவத்தில் இந்த உலகமும், உலகத்து மனிதர்களும் இன்னும் பலம் பெறப்போகிறார்கள்; பலன் அடையப் போகிறார்கள் என்பதுதானே சிவனாரின் கணக்கு! அங்கே பிரகஸ்பதிக்கு திருக்காட்சி தந்த சிவனார், அவருக்கு நவக்கிரகங்களில் ஒன்றென்கிற பதவியையும் அருளினார். இந்த முக்கியமான இடம் கிடைத்ததும், குரு பகவான் என அனைவராலும் போற்றப்பட்டார் பிரகஸ்பதி. குரு பகவானுக்கு குரு பலமும் குரு பதவியும் கிடைக்கப் பெற்ற அந்தத் திருத்தலம்... திட்டை. இங்கே ஸ்வாமி - ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. தனக்கு சிவனருள் கிடைத்த இந்தத் தலத்தில் இருந்தபடி இங்கு வரும் அனைவருக்கும் ஆசியும் அருளும் தந்து எல்லோரையும் வாழவைத்துக் கொண் டிருக்கிறார் குரு பகவான்.

அப்படி அவர் வாழ வைத்தவர்களில் மிக முக்கியமானவர் யார் தெரியுமா? சாட்சாத் பார்வதிதேவிதான்!

ஆமாம். சிவனாரைத் திருமணம் செய்து கொள்வதற்காகக் கடும் தவம் புரிந்தாள் உமையவள். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகவும் ஆகிவிட்ட நிலை. ஆனாலும், திருமணம் நடந்தபாடில்லை. கவலையும் துக்கமும் பொங்க... தேவர்கள் ஒன்று கூடி, சிவப்பரம்பொருளைத் தரிசித்து விவரம் கேட்டார்கள். 'நான் என்ன செய்வது? அவளுக்கு இன்னும் குரு பலம் கூடிவரவில்லையே..?’ என்றாராம் சிவனார்.

ராஜ குருபகவானுக்கு சிறப்பு ஹோமம் பூஜை!

பிறகு, உமையவளுக்கு குருவின் பார்வை கிடைத்தது; குரு பலமும் கிடைத்தது. ஈசனுடன் இனிதே திருமணமும் நடந்தது.

உமையவளுக்குக் கிடைத்த அந்த குரு பலம் நமது வாசகர்களுக்கும் கிடைக்கட்டும்; குரு பலம் கிடைத்து, குரு யோகமும் அமைந்து சீரும் சிறப்புமாக அவர்கள் இனிதே வாழவேண்டும் என்பதற்காக, ஸ்ரீமகா கணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம், ஸ்ரீகுரு பரிகார ஹோமம் எனக் கர்ம சிரத்தையுடன் சிறப்பு ஹோமங்களைச் செய்தது சக்தி விகடன்.

அதுமட்டுமா? ஹோம பூஜையில், குரு பகவானின் திருவடியில் விபூதியும் குங்குமமும் வைத்து பூஜிக்கப்பட்டன. அந்த விபூதியைக் கொண்டுதான், குரு பகவானுக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டது; மற்ற அபிஷேகங்களும் இனிதே நடந்தன.  கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜ், சிவாச்சார்யர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் அனை வரும் உற்சாகத்துடன் உதவிகள் செய்தனர்.

இதோ... அந்த விபூதி- குங்குமப் பிரசாதம் இப்போது உங்கள் கரங்களில்! ராஜ குரு பகவானை ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்து, விபூதியை இட்டுக் கொள்ளுங்கள். குரு பார்வை, குரு பலம், குரு யோகம் ஆகிய அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்.  

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு